நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லோரும் தனியா நில்லுங்க.. நாங்களும் வர்றோம்.. மோதிப் பார்ப்போம்.. பொன். ராதாகிருஷ்ணன் சவால்

Google Oneindia Tamil News

Recommended Video

    காங்கிரஸை விமர்சித்த பொன் ராதாகிருஷ்ணன்-வீடியோ

    நாகர்கோவில்: தேர்தலில் கூட்டணி இல்லாமல் அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்குமானால் பாரதீய ஜனதா கட்சியும் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்கும் என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்

    கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆட்டோ ஓட்டுநர்கள் உடனான கலந்தாய்வு கூட்டம் மத்திய இணை அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் தலைமையில் நாகர்கோவிலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    pon radaakrishnan dares partie to stand on their own

    இதில் ஏராளமான ஓட்டுநர்கள் பங்கேற்று வளர்ச்சி திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சருடன் கலந்துரையாடினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், குறைந்த செலவில் நிறைவான வாழ்க்கையை சாதாரண மக்கள் எப்படி பெறமுடியும் என்கின்ற திட்டம் மத்திய அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானம் திட்டம் போன்ற திட்டங்களை அறிவிப்பதன் மூலம் வேறு ஏதோ குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கம் உள்ளது. மக்கள் காங்கிரஸ் கட்சியை நம்ப மாட்டார்கள் இந்த திட்டம் என்பது ஒவ்வொரு கால கட்டத்திலும் காங்கிரஸ் கட்சி சொல்லும் ஏமாற்று வேலை இது காங்கிரஸ் கட்சியின் தில்லுமுல்லு அரசியல் - இந்த திட்டம் தேர்தலுக்கு கூட பயன்படாது.

    தேர்தலில் கூட்டணி இல்லாமல் அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்குமானால் பாரதீய ஜனதா கட்சியும் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்கும். இந்த தேர்தலில் எப்படிப்பட்ட கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் பாஜக தெளிவான முடிவில் இருக்கிறோம். சந்திரபாபு நாயுடு நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி என கூறுவது குறித்த கருத்திற்கு - சந்திர பாபு நாயுடு மாநில அனாதை காங்கிரஸ் தேசிய அனாதை.

    ஜாக்டோ ஜியோ விவகாரத்தில் மாநில அரசு அதிக கவனம் கொடுத்து வருகிறது. மேலும் கவனம் கொடுப்பார்கள் என நம்புகிறேன் போராட்டம் முடிந்து விட கூடாது என சிலர் நினைக்கிறார்கள். அது தவறு ஆசிரியர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் இதை அரசியல் ஆக்க வேண்டாம் என்றார் அவர்.

    English summary
    Union minister Pon Radhakrishnan has dared all the parties to stand on their own in the Elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X