Video: அடேங்கப்பா.. இது லிஸ்ட்டிலேயே இல்லையே... புளோரிடாவைக் கலக்கும் ஒரிஜினல் லயன் கிங்!

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: எங்கு பார்த்தாலும் லயன் கிங் படம் பற்றிய பேச்சுதான். குட்டீஸ் முதல் குடுகுடு தாத்தா வரை லயன் கிங் புராணம் பாடாத வாயே இல்லை.

டிஸ்னி வேர்ல்ட் லைன் கிங் திரைப்படம் இப்பொழுது நம்ம ஊரு திரையரங்குகளில் சக்கை போடு போட்டு கொண்டிருக்கிறது . ஹிட் என்றால் அப்படி ஒரு மெகா ஹிட்.

Real Lion king in Florida Show

டிஸ்னி வேர்ல்ட்:

சரி நிஜமான டிஸ்னி வேர்ல்ட் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருக்கிறது அல்லவா. அங்கு இதே லைன் கிங் ஷோ நடக்கிறது தெரியுமா. அது எப்படி இருக்கும் தெரியுமா?

நீண்ட வரிசை:

நாம இப்போ திரை அரங்குகளில் பார்க்கும் மாதிரி கார்ட்டூன் 3டி திரைப்படமாக அல்லது எதோ ப்ரொஜெக்டர் ல விடியோவாகவோ வரும் என்று எதிர்பார்த்து லைன் கிங் ஷோ நீண்ட வரிசையில் காத்திருந்த எங்களுக்கு பெரும் ஆச்சரியம் காத்திருந்தது. ஏனென்றால் டிஸ்னி வேர்ல்ட் புளோரிடாவில் நடக்கும் லைன் கிங் ஷோ வில் வருவது வேற.

Real Lion king in Florida Show

சூப்பர் ஷோ :

மிக பெரிய உள்ளரங்கில் ஆரம்பித்தது லைன் கிங் ஷோ. அங்கு பெரிய பெரிய விலங்குகள் ஆளுயரத்துக்கும் அதிக அதிக உயரமான விலங்குகள் என்று அதனை கார்ட்டூன்களும் பெரு உருவங்களாக வந்து நடை போட்டன. கூடவே நம்ம லயன் கிங் கம்பீரமாக பேச தொடங்கியபோது கைதட்டல் உச்சம்.

நெடு நெடு மனிதர்கள் ஆட்டம் பாட்டம் இசையோடு மனிதர்கள் என்று களைகட்டிய அந்த 30 நிமிட ஷோவின் முக்கியமான காட்சிகளை இந்த வீடியோவில் கண்டுகளியுங்கள்.

அனுபவம் புதுமை அமெரிக்காவின் சுவாரஸ்ய பயணங்கள் தொடரும்.

- Inkpena சஹாயா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+