‘சங்கி பிரின்ஸ்’ கைது.. அதிகாலையில் பாஜக நிர்வாகி பிரவீன்ராஜை தட்டித் தூக்கிய சைபர் கிரைம் போலீசார்!
நாமக்கல்: X சமூக வலைதளத்தில் 'சங்கி பிரின்ஸ்' என்ற பெயரில் இயங்கி வந்த பாஜக நிர்வாகி பிரவீன் ராஜ் இன்று அதிகாலையில், சைபர் கிரைம் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி குறித்து இழிவுபடுத்தும் வகையில் கருத்து பதிவிட்டதாக கரூர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி பிரவீன் ராஜ் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாஜகவின் இளைஞரணியின் மாநில செயற்குழு உறுப்பினராகவும், இளைஞரணியின் சமூக ஊடக பொறுப்பாளராகவும் செயல்பட்டு வரும் பிரவீன் ராஜ், கரூர் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக கரூருக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக நிர்வாகி பிரவீன் ராஜின் கைது நடவடிக்கையை பாஜகவினர் கடுமையாக விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர். திமுக அரசு, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல விஷயங்களில் தோல்வி அடைந்ததை மறைக்கவே திமுக அரசை விமர்சிக்கும் பிரவீன் ராஜை கைது செய்துள்ளனர் என பாஜகவினர் விமர்சித்துள்ளனர்.
கைது நடவடிக்கை தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரவீன் ராஜ், "அதிகாலை 2 மணிக்கு கதவை தட்டி, பிறகு கதவை உடைக்க முற்படும் சிலர், கேட்டால் சைபர் கிரைம் என்கிறார்கள். ஆனால் தாங்கள் காண்பிக்கும் ஐடி கார்டை உள்ளூர் மக்கள் ஃபோட்டோ எடுப்பது குற்றம் என சொல்லி மிரட்டுகிறார்கள். புரோட்டோகால் படி உள்ளூர் போலீஸும் உடன் இல்லை. வீழ்வேன் என நினைத்தாயோ?" எனத் தெரிவித்துள்ளார்.
-
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா?












Click it and Unblock the Notifications