சாதி வீடியோ சர்ச்சை.. நள்ளிரவில் அடித்த அதிர்ஷ்டம்.. நாமக்கல் தொகுதி எம்பி மாதேஸ்வரன் யார் தெரியுமா?
நாமக்கல்: திமுக கூட்டணியில் போட்டியிட்ட கொங்கு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் மாதேஸ்வரன் நாமக்கல் லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.இவர் யார்? இவருடைய வரலாறு என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி லோக்சபா தேர்தல் நடந்தது. தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. வேட்பாளர் மாதேஸ்வரன், அ.தி.மு.க. சார்பில் தமிழ்மணி, பா.ஜனதா சார்பில் கே.பி.ராமலிங்கம், நாம் தமிழர் கட்சி சார்பில் கனிமொழி மற்றும் சுயேச்சைகள் உள்பட 40 பேர் போட்டியிட்டார்கள்.

நாமக்கல் தொகுதியில் 14 லட்சத்து 52 ஆயிரத்து 562 வாக்காளர்களில் 11 லட்சத்து 36 ஆயிரத்து 69 வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இது 78.21 சதவீத வாக்குப்பதிவு ஆகும். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. வாக்கு எண்ணிக்கைக்கு ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு இருந்தன. மொத்தம் 23 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன.
வாக்கு எண்ணிக்கை முடிவில் கொ.ம.தே.க. வேட்பாளர் மாதேஸ்வரன் 4 லட்சத்து 62 ஆயிரத்து 36 வாக்குகளும், அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்மணி 4 லட்சத்து 32 ஆயிரத்து 924 வாக்குகளும், பா.ஜனதா வேட்பாளர் கே.பி.ராமலிங்கம் 1 லட்சத்து 4 ஆயிரத்து 690 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கனிமொழி 95 ஆயிரத்து 577 வாக்குகளும் பெற்றனர். இதில் அ.தி.மு.க. வேட்பாளரை விட, கொ.ம.தே.க. வேட்பாளர் 29,112 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கொ.ம.தே.க., அ.தி.மு.க. வேட்பாளர்களை தவிர மீதமுள்ள 38 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். நோட்டாவுக்கு 12 ஆயிரத்து 984 ஓட்டுகள் கிடைத்திருந்தது. நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியை கொ.ம.தே.க. 2-வது முறையாக கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.
யார் இந்த மாதேஸ்வரன்: திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. இதன் வேட்பாளராக எஸ்.சூரியமூர்த்திக்கு அறிவிக்கப்பட்டிருந்தார். அவர் பட்டியலினத்தவர்கள் குறித்து மிகவும் மோசமாக பேசியிருந்த வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து கடைசி நேரத்தில் ஈஸ்வரனால் உடனடியாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர் தான் வி.எஸ்.மாதேஸ்வரன்.
நாமக்கல்லைச் சேர்ந்த கே.செல்லப்பக் கவுண்டர் - வரதம்மாள் என்பரின் மகனான வி.எஸ்.மாதேஸ்வரனுக்கு 52 வயது ஆகிறது. லாரி வைத்துள்ளார். விவசாயம் செய்து வருகிறார்., டிப்ளோ வரை படித்துள்ளார். கொமதேகவில் நாமக்கல் தெற்கு மாவட்ட செயலாளராக இருந்தவர். 2016-இல் நாமக்கல் சட்டப்பேரவை தேர்தலில் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் ஆவார். சூரியமூர்த்தி பேசிய பழைய வீடியோ அவருக்கு எதிராக முடிந்தது. ஆனால் அதனால் ஏற்பட்ட அதிர்ஷ்டத்தால் சீட் பெற்ற மாதேஸ்வரன் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றுள்ளார். நாமக்கல் தொகுதியை பொறுத்தவரை கொங்கு மண்டலத்தின் முக்கியமான பகுதியாகும். இங்கு அதிமுக கடும் போட்டி அளித்தது
நாமக்கல் தொகுதியில் கொ.ம.தே.க. வேட்பாளர் மாதேஸ்வரன் வெற்றி எளிதாக நடந்துவிடவில்லை.. மாதேஸ்வரன் சங்ககிரி தொகுதியில் 84,924 வாக்குகளும், ராசிபுரம் தொகுதியில் 76,596, சேந்தமங்கலம் தொகுதியில் 82,335 வாக்குகளும், நாமக்கல் தொகுதியில் 79,263 வாக்குகளும், பரமத்தி வேலூர் தொகுதியில் 63,615 வாக்குகளும், திருச்செங்கோடு தொகுதியில் 70,962 வாக்குகளும் என மொத்தம் 4 லட்சத்து 57 ஆயிரத்து 695 வாக்குகளை மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பெற்றிருந்தார்.
அதே போல் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட தமிழ்மணி சங்ககிரி தொகுதியில் 88,358 வாக்குகளும், ராசிபுரம் தொகுதியில் 72,080, சேந்தமங்கலம் தொகுதியில் 71,152 வாக்குகளும், நாமக்கல் தொகுதியில் 67,343 வாக்குகளும், பரமத்தி வேலூர் தொகுதியில் 69,657 வாக்குகளும், திருச்செங்கோடு தொகுதியில் 60,768 வாக்குகளும் என மொத்தம் 4 லட்சத்து 29 ஆயிரத்து 358 வாக்குகளை பெற்றார்.
ராசிபுரம், நாமக்கல் மற்றும் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிகளில் கூடுதல் வாக்குகளை பெற்றதால் மாதேஸ்வரன் வெற்றி உறுதியானது. நாமக்கல் தொகுதியில் 11,920 வாக்குகளும், ராசிபுரம் தொகுதியில் 4,516 வாக்குகளும், சேந்தமங்கலம் தொகுதியில் 11,183 வாக்குகளும் என மொத்தம் 27,619 வாக்குகளை கூடுதலாக பெற்றார் இதுவே வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
-
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்?












Click it and Unblock the Notifications