நாமக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பேய் ஓட்டுவதாக பெண்களை சாட்டையால் அடித்து, கன்னத்தில் அறைந்த போலி சாமியார்.. மிரண்டு போன நாமக்கல்

Google Oneindia Tamil News

நாமக்கல்: நாமக்கல் அருகே பேய் ஓட்டுவதாக கூறி பெண்களை சாட்டையால் அடித்து, கன்னத்தில் அறைந்து , காலால் எட்டி உதைத்த போலி சாமியார் அணில் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாமக்கல் அருகே பொம்மன் பட்டி கம்மாள மேடு என்ற இடத்தில் காதப்பள்ளியைச் சேர்ந்த சீரங்கன் மகன் அணில் குமார் என்பவர் கருப்பண்ண சுவாமி கோவிலை அமைத்து நடத்தி வருகிறார்.

தமிழக கடலோர மாவட்டங்களில் சூரியன் சுடும் ...தென்காசி,நெல்லை, குமரியில் இடியோடு மழை பெய்யும் தமிழக கடலோர மாவட்டங்களில் சூரியன் சுடும் ...தென்காசி,நெல்லை, குமரியில் இடியோடு மழை பெய்யும்

கருப்பண்ண சுவாமி கோவிலுக்கு வரும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு குறி சொல்லி வந்துள்ளார். அவரிடம் குறி கேட்க பலரும் தினமும் வந்து சென்றுள்ளனர்.

பேய் ஓட்டுவது

பேய் ஓட்டுவது

அத்துடன் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் தான், பில்லி சூனியம் போக்குவது, பேய் விரட்டுவது போன்றவையும் செய்வேன் என்று கூறியுள்ளார். மக்கள் இவரை உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண்களை கோவிலுக்கு கூட்டி வந்துள்ளார்கள்.

கொடூரமான செயல்கள்

கொடூரமான செயல்கள்

இந்நிலையில் கோவிலுக்கு பெண்களை பேய்களை ஓட்டுவதாக கூறி சாட்டையால் தாக்கி வந்துள்ளார். அத்துடன் பிரம்பு குச்சியால் தாக்குவது, காலால் உதைப்பது, கன்னத்தில் அறைவது போன்ற கொடூரமான செயல்களை செய்து வந்துள்ளார்.

வெளியான வீடியோ

வெளியான வீடியோ

இந்நிலையில் அணில் குமார். பெண்களுக்கு பேய் ஓட்டுவதை வீடியோ பதிவு செய்ய மற்றும் யூட்யூபில் வெளியிடுவதற்கு புது சத்திரம் சேர்ந்த முருகேசன் என்பவரை உதவி நாடி உள்ளார். அவர் எடுத்த வீடியோவை வாட்ஸ்அப் ஃபேஸ்புக் யூட்யூபில் ஆகியவற்றில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோக்கள் சாமியாருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

காலால் உதைத்தார்

காலால் உதைத்தார்

அதில் பேய் விரட்டுவதாக கூறி பெண்கள் சிலரை கன்னத்தில் அறைவது, பிரம்பால் அடிப்பது, காலால் உதைப்பது, மது அருந்திவிட்டு அடிப்பது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. பலரும் அணில் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொதித்தனர்.

போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை


சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், காதப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் வேல கவுண்டம்பட்டி காவல்துறையினர் போலி சாமியார் அனல் குமார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
Anil Kumar, a fake Saint, was arrested in Namakkal for allegedly slapping women on the cheek and kicking them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X