நாமக்கல் அருகே பைனான்சியர் கடத்திக் கொலை! கடைகள் அடைக்கப்பட்டு தீவிரமடையும் போராட்டம்!
நாமக்கல்: நாமக்கல் அருகே பள்ளிப்பாளையத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட நிதி நிறுவன அதிபர் கவுதம் சேலம் அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி நாமக்கல் மாவட்டம் வெப்படை பகுதியில் நூற்றுக்கணக்கான கடைகள் அடைக்கப்பட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது.

நிதி நிறுவன அதிபர்
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள பாதரை செட்டுக்காரன் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கவுதம். 36 வயதாகும் இவர் சொந்தமான நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்திருக்கிறார். இதுமட்டுமல்லாமல் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பள்ளிப்பாளையம் வடக்கு ஒன்றிய இளைஞரணித் தலைவராகவும் இருந்திருக்கிறார். இதனிடையே 2 நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் தனது நிதி நிறுவனத்தை இரவு 9.30 மணிக்கு பூட்டிய அவர் தனது டூவிலரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்துள்ளார்.

மிளகாய் பொடி
அப்போது இருள் சூழ்ந்த பகுதியில் மறைந்திருந்த அடையாளம் தெரியாத நபர்கள் பைனான்சியர் கவுதம் கண்களில் மிளகாய் பொடியை தூவியுள்ளனர். இதில் நிலைகுலைந்து போன கவுதமை அப்படியே தூக்கிச் சென்று காரில் வைத்து கடத்திச் சென்றது அந்த மர்ம கும்பல். இது தொடர்பாக கவுதம் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் பள்ளிப்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கடத்தல் கும்பலை தேடி வந்தனர்.

சடலமாக மீட்பு
கவுதம் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி நிர்வாகி என்பதால் இந்த விவகாரத்தை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொண்ட காவல்துறை தனிப்படைகளை அமைத்து கவுதமை மீட்கும் பணிகளை முடுக்கி விட்டிருந்தது. இந்நிலையில் சேலம் சங்ககிரி அருகே வைகுந்தம் ஏரிக்கரையில் கத்திக்குத்து காயங்களுடன் கவுதம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கவுதமை கடத்திச் சென்று கொலை செய்தது யார் என்பதை காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

கடை அடைப்பு
இதனிடையே கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி நாமக்கல் மாவட்டம் வெப்படை பகுதியில் நூற்றுக்கணக்கான கடைகள் அடைக்கப்பட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் பதற்றத்தை தணிக்க கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications