நாமக்கல் சீனிவாசன், லீலாவதி தம்பதி.. தறிப்பட்டறையில் அதிகாலை எரிந்த விளக்கு.. ஹவுஸ் ஓனருக்கு ஷாக்

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: குழந்தைகளின் எதிர்காலத்திற்காக 15 ஆண்டுகளாக விசைத்தறி தொழில் நடத்தி வந்துள்ளனர் இந்த நாமக்கல் தம்பதி.. மகனுக்கு சென்னையில் வேலை, மகளுக்கு காலேஜ் படிப்பு என குடும்பம் நல்லபடியாக சென்று கொண்டிருந்தது. ஆனால், ஒரே இரவில் அந்தக் குடும்பத்தில் நிகழ்ந்த சம்பவம் 2 குழந்தைகளையும் நிலைகுலைய வைத்துள்ளது. அப்படி என்ன நடந்தது?

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கீழேரிப்பட்டி பகுதியில் வசித்து வந்த சீனிவாசன் (45), அவரது மனைவி லீலாவதி (38).. இந்த தம்பதியினரின் பூர்வீகம் சேலம் மாவட்டம் அலவாய்ப்பட்டி.

Namakkal Tamil Nadu Crime News Powerloom News

நாமக்கல் தம்பதி

தொழில் காரணமாக அங்கிருந்து குடிபெயர்ந்த அவர்கள், திருச்செங்கோடு அருகேயுள்ள கீழேரிப்பட்டி பகுதியில் கடந்த 16 ஆண்டுகளாக வசித்து வந்துள்னர்.. அங்கு வாடகைக் கட்டடத்தில் தங்களுக்குச் சொந்தமான விசைத்தறி தொழில் கூடத்தையும் நடத்தி வந்துள்ளனர். 6 விசைத்தறிகளை வைத்து தொழில் செய்து வந்த இந்த தம்பதியினர், தங்களது உழைப்பை மட்டுமே நம்பி குடும்பத்தை நடத்தி வந்துள்ளனர்.

இந்த தம்பதிக்கு கீர்த்திவாசன் (22) என்ற மகனும், காவியா (19) என்ற மகளும் உள்ளனர். மகன் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். மகள் திருச்செங்கோட்டில் உள்ள சண்முகா தனியார் பொறியியல் கல்லூரியில் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் 3ம் ஆண்டு படித்து வருகிறார். குழந்தைகளின் எதிர்காலத்திற்காக 2 பேரும் உழைத்து வந்துள்ளனர்.

இரவு உணவு

சம்பவத்திற்கு முந்தைய நாள், சீனிவாசன் சென்னையில் வசித்து வரும் தனது மகனை பார்த்துவிட்டு வீட்டுக்கு திரும்பியிருக்கிறார்.. பிறகு அன்றைய தினம் இரவு சீனிவாசன், லீலாவதி, மகள் காவியா ஆகிய 3 பேரும் ஒன்றாக உட்கார்ந்து உணவு சாப்பிட்டுள்ளனர். வழக்கம்போல சாப்பிட்டு முடித்ததும் 3 பேருமே தூங்க சென்றுள்ளனர்.

ஆனால், மறுநாள் அதிகாலை 5 மணியளவில் காவியா எழுந்தபோது பெற்றோர் வீட்டில் இல்லை. அவர்கள் வழக்கம்போல விசைத்தறி பட்டறைக்குச் சென்றிருக்கலாம் என்று முதலில் நினைத்துள்ளார்..

தறி பட்டறை

இதனிடையே, தம்பதியினர் தொழில் நடத்தி வந்த விசைத்தறி பட்டறையின் கட்டிட உரிமையாளர் பரமசிவம்,
அதிகாலை 4 மணிக்கு பட்டறையில் விளக்குகள் எரிவதை பார்த்துள்ளார்.. அப்போது தம்பதியினர் வழக்கம்போல வேலைக்கு சென்றிருக்கலாம் என்று நினைத்துள்ளார். இருந்தாலும், அங்கு வழக்கமாக கேட்கும் விசைத்தறி ஓடும் சத்தம் கேட்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த அவர், காலை 6 மணியளவில் பட்டறைக்குள்ளேயே சென்று பார்த்துள்ளார். அப்போது தம்பதியினர் உயிரிழந்த நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து உடனடியாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலறிந்த திருச்செங்கோடு நகர காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் மாரிமுத்து ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பிறகு உயிரிழந்த சீனிவாசன், லீலாவதி ஆகிய இருவரின் உடல்களும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர். .

நாமக்கல் தம்பதி

பிறகு காவல்துறையினர், உறவினர்கள் மற்றும் தொடர்புடைய நபர்களிடம் விசாரணையை ஆரம்பித்தனர்... சீனிவாசன் - லீலாவதி தம்பதியினர் சமீபகாலமாக பணப் பிரச்சினைகள் மற்றும் கடன் சுமை குறித்து உறவினர்களிடம் புலம்பி வந்தார்களாம். அதனால் கடன் நெருக்கடியே இந்த துயர சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று உறவினர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். எனினும் தம்பதியினரின் உயிரிழப்புக்கான உண்மையான காரணம் என்ன என்பது விசாரணையின் முடிவில்தான் தெரியவரும்.

2 குழந்தைகளும் தங்களது வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காக உழைத்து வந்த பெற்றோர் திடீரென உயிரிழந்த சம்பவம், குடும்பத்தினரையும் உறவினர்களையும் அப்பகுதி மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+