நாமக்கல் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி திடீர் மாயம்.. தீவிரமாக தேடும் போலீஸ்
நாமக்கல்: நாமக்கல் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி ஸ்வேதா திடீரென மாயமானது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு மாணவர்களிடம் மிகப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாணவி அனிதா தொடங்கி ஆண்டுதோறும் நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் மரணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

மாணவர் தற்கொலைகள்
இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு முன்னதாக சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அரியலூர் அருகே சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்த கருணாநிதியின் மகள் கனிமொழி, நீட் தேர்வு எழுதிய பின்னர் தோல்வி அடைந்துவிடுவோமே என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டார். வேலூரில் செளந்தர்யா என்ற மாணவியும் தற்கொலை செய்து கொண்டார். செங்கல்பட்டில் நீட் தேர்வில் தோற்றுவிடுவோம் என அஞ்சிய மாணவி தற்கொலைக்கு முயன்றார். இப்படி ஒவ்வொருநாளும் நீட் தேர்வு தொடர்பான மரணங்கள் நெஞ்சை உலுக்குகின்றன.

மாணவி மாயம்
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே 2-வது முறையாக நீட் தேர்வெழுதினார் மாணவி ஸ்வேதா. இந்த நிலையில் நேற்று காலை முதல் ஸ்வேதா வீட்டில் இல்லை. அவரது அக்கம் பக்கத்தில் பெற்றோர்களும் உறவினர்களும் தேடினர். ஆனால் ஸ்வேதா கிடைக்காத நிலையில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
ஏற்கனவே நீட் தேர்வால் மாணவர்கள் அச்சமடைந்து தற்கொலை செய்து கொள்ள கூடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், மாணவச் செல்வங்களே! மனம்தளராதீர்கள்! கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்; ஈடில்லா உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள்! கல் நெஞ்சங்கொண்டோரைக் கரைப்போம்! NEET எனும் அநீதியை ஒழிக்கும்வரை நாம் ஓயமாட்டோம் என கூறியிருந்தார்.

நடிகர் சூர்யா வேண்டுகோள்
அதேபோல் நடிகர் சூர்யாவும் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், மாணவ மாணவிகள் அனைவரும் வாழ்க்கையில் அச்சம் இல்லாமல் இருக்க வேண்டும். ஒரு தேர்வு உங்களுடைய உயிரைவிட பெரியது அல்ல. உங்களுக்கு மனம் கஷ்டமாக இருக்கிறது என்றால் உங்களுக்கு பிடித்தவர்கள், பெற்றோர்கள், நண்பர்கள் என யாரிடமாவது மனம் விட்டுப் பேசுங்கள். பயம், கவலை, விரக்தி, வேதனை அனைத்தும் கொஞ்ச நேரத்தில் மறைந்து விடக் கூடிய விஷயங்கள். தற்கொலை என்பது உங்களை நேசிப்பவர்களுக்கு உங்கள் பெற்றோர்களுக்கும் நீங்கள் கொடுக்கும் வாழ்நாள் தண்டனை. நம்பிக்கை தைரியத்துடன் இருந்தால் வெற்றி நிச்சயம் என கூறியிருந்தார்.

16 பேர் தற்கொலை
தமிழகத்தில் நீட் தேர்வால் 4 ஆண்டுகளில் இதுவரை மொத்தம் 16 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். மேலும் நீட் தேர்வில் மனநலம் சார்த்த ஆலோசனை பெறுவதற்கு 104 என்ற இலவச தொலைபேசி எண்ணை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. அதேபோல் மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கவும் தமிழக அரசு ஏற்பாடுகள் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications