தங்கமணியும், வேலுமணியும் வச்சு விளையாடும் பொம்மை தான் எடப்பாடி பழனிசாமி.. புகழேந்தி அட்டாக்!
நாமக்கல் : நான்கு ஆண்டுகால எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தங்கமணியும், வேலுமணியும் தான் முதல்வர்களாகச் செயல்பட்டனர் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி விமர்சித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அதிமுக ஓபிஎஸ் அணி செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஓபிஎஸ் அணியின் அதிமுக நாமக்கல் மாவட்ட செயலாளர் எம்.பி.ஜெயமுருகேசன் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்திப் பேசிய அவர் நாமக்கல்லைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தங்கமணியை கடுமையாகத் தாக்கினார்.

பொம்மையாக பயன்பட்டார் எடப்பாடி
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய புகழேந்தி, "முன்னாள் அமைச்சர்கள் தங்கமணியும் வேலுமணியும் விளையாடுவதற்காக ஒரு பொம்மையாக பயன்படுத்தப்பட்டவர் தான் எடப்பாடி பழனிசாமி. நான்கு ஆண்டுகள் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இல்லை. நான்கு ஆண்டுகளும் முதலமைச்சராக செயல்பட்டவர்கள் தங்கமணியும், வேலுமணியும் தான். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பதவியை பெறுவதற்கும் உடன் நின்றவர்கள் தங்கமணியும், வேலுமணியும் தான்.

இதற்கு சிபிஐ விசாரணை வேண்டுமாம்
ஆட்சியில் இருப்பவர்களின் உறவினர்களுக்கு அரசு டெண்டர்களை கொடுக்கக் கூடாது என இருக்கும் விதியை மீறி அப்படி செய்தால் என்ன என்று கேட்ட ஒரே முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான். ரூ.4,800 கோடி ஊழல் சிபிஐ விசாரணை வேண்டாமாம். ஆனால் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டதற்கு சிபிஐ விசாரணை வேண்டுமாம்.

ஊழல் உச்சம்
கடந்த நான்கு ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ஊழல் உச்சகட்டத்தை அடைந்துவிட்டது. துவரம் பருப்பில் கிலோ ஒன்றுக்கு பதினைந்து ரூபாய் கமிஷன், ஒரு மாதத்திற்கு 20 ஆயிரம் டன்னுக்கு கமிஷன். அப்படியெனில் எவ்வளவு என நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். சர்க்கரையில் கிலோ ஒன்றுக்கு பத்து ரூபாய் கமிஷன் பெற்றுக்கொண்டு, 37 ரூபாய் சக்கரையை 47 ரூபாய் விலை கொடுத்து வாங்கியுள்ளனர்.
Recommended Video

தங்கமணி, வேலுமணி ஊழல்
நிலக்கரி மற்றும் டாஸ்மாக்கில் தங்கமணி ஹீரோ போல ஊழல் செய்துள்ளார். கொரோனா காலத்தில் டாஸ்மாக்கை திறந்து வைத்து கொள்ளையடித்தவர் தங்கமணி. டாஸ்மாக் ஊழல் வெளிவரும். 12 ஆயிரம் உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தலே நடத்தாமல் ஊழல் செய்தவர் வேலுமணி. கொசு மருந்திலிருந்து மெட்ரோ வரைக்கும் அனைத்திலும் ஊழல் செய்தவர் வேலுமணி. செவிலியர்களுக்கான பணியிடமாற்றத்திற்கு லஞ்சம் பெற்றவர் விஜயபாஸ்கர். இவர்களை வைத்துக்கொண்டு ஜெயிலில் உட்கார்ந்து கொண்டு எடப்பாடி பழனிசாமி கட்சி நடத்துவாரா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார் புகழேந்தி.
-
170... திமுக மாஸ்டர் பீஸ் தலைகீழா போகுதா? கியரை மாற்றிய அதிமுக! லட்டு மாதிரி கையில் முத்தரையர் ஓட்டு -
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
அதிமுகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியீடு? -
ஓ.பன்னீர்செல்வத்துக்கு போடி.. வைத்திலிங்கம், மனோஜ் பண்டியனுக்கு எந்த தொகுதி? விவரம்! -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
ஓபிஎஸ்ஸுக்கு பதில்! போடியில் நாராயணசாமி! லால்குடியில் லீமா! கோபியில் பிரபு! களநிலவரம் என்ன? -
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டி! ஏ.சி. சண்முகம் களம் காண்கிறாரா? -
பூவை ஜெகன்மூர்த்தி கட்சிக்கு 1 தொகுதியை ஒதுக்கியது அதிமுக! மீண்டும் கே.வி.குப்பத்தில் போட்டி -
தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? 26 தொகுதிகளுக்கு வெளியான உத்தேச பட்டியல்! குஷ்பு, அண்ணாமலை மிஸ்ஸிங்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ்












Click it and Unblock the Notifications