நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தண்ணி காட்டும் பலே கடத்தல்காரர்கள்! 50 ஆண்டுக்கு முன் கடத்திய சிலைகள்.. அமெரிக்கா போனது எப்படி?

Google Oneindia Tamil News

நியூயார்க்: தஞ்சை ஒத்தரநாடு காசி விஸ்வநாத ஆலயத்திலிருந்து 50 ஆண்டுகளுக்கு முன்னர் கடத்தப்பட்ட சிலைகள் அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சிலைகள் சுமார் ரூ.34 கோடி இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் இதனை மீட்பதற்கான முயற்சிகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இந்த கொள்ளை சம்பவத்தில் உண்மையான சிலைகளை எடுத்துவிட்டு அதேபோல போலி சிலைகளை கடத்தல்காரர்கள் கோயிலில் வைத்துவிட்டு சென்றுள்ளனர்.

 புகார்

புகார்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் உள்ள முத்தாளம்பாள் புரத்தில் நூற்றாண்டுகள் பழமையான காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் காலசம்ஹாரமூர்த்தி சிலை குறித்து சந்தேகம் எழுந்த நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறைக்கு கோயிலின் செயல் அலுவலர் சுரேஷ் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் ஆய்வு மேற்கொண்ட காவல்துறையினர் சுரேஷ் கூறியது போல சிலை பழமையானது இல்லையென்றும், இது போலி சிலையென்றும் கண்டுபிடித்தனர்.

ஆய்வு

ஆய்வு

அதாவது சுரேஷ், கோயிலின் ஆவணங்களின்படி சிலைகளை சரிபார்க்கத் தொடங்கியபோது, 24 உற்சவ சிலைகளும், 60 கற்சிலைகளும் சொத்துப்பட்டியல்படி சரியாக இருந்துள்ளது. ஆனால், காலசம்ஹாரமூர்த்தி சிலை மட்டும் வேறு வடிவில் இருந்துள்ளது. இதனால் சந்தேகத்தின்பேரில் அவர் புகார் அளித்திருந்தார். இப்படியாக இந்த விவகாரம் வெளியில் வந்துள்ளது. 2020ல் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வந்தனர்.

விசாரணை

விசாரணை

விசாரணையின் ஒரு அங்கமாக புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தை தொடர்பு கொண்டு இக்கோயிலின் படங்களை பெற்றனர். இந்த படங்களை வைத்து உலகம் முழுவதும் இருக்கும் பல்வேறு கலைக்கூடங்கள், ஏல மையங்கள், அருங்காட்சியகங்கள் என தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு 82.3 செ.மீ உயரம் கொண்ட காலசம்ஹாரமூர்த்தி சிலை அமெரிக்காவின் கிறிஸ்டிஸ் ஏல மையத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

 சாதாரண செய்தி

சாதாரண செய்தி

தற்போது இந்த சிலைகளை மீட்கும் நடவடிக்கையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கெனவே நாகப்பட்டினம் மாவட்டம் பண்ணார பரமேஸ்வரி ஆலையத்திலிருந்து சுமார் 11 சிலைகள் 40 ஆண்டுகளுக்கு முன்னர் திருடப்பட்டிருப்பது தற்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஒவ்வொரு சிலையின் மதிப்பும் சுமார் ரூ.3 கோடியாகும். தமிழ்நாட்டில் இதுபோன்று தொடர்ந்து சிலை திருட்டு சம்பவங்கள் நடைபெறுவது சமீபல காலங்களாக சாதாரணமான செய்தியாகியுள்ளது. இதனை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

English summary
Idols stolen from Thanjavur's Kashi Vishwanath temple 50 years ago have been found in the US. While these idols are estimated to be worth around Rs 34 crores, efforts have been made by the Anti-Idol Smuggling Unit Police to recover them. In this robbery that happened 50 years ago, the kidnappers took away the real idols and left the fake idols in the temple.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X