நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேம் விளையாட போனை தர்றீங்களா? அப்போ உஷாரா இருங்க.. இல்லாட்டி இப்படித்தான் உங்க பர்ஸும் காலி ஆகிடும்!

அப்பாவின் செல்போனில் ரூ. 80 ஆயிரத்திற்கு உணவுப்பொருட்களை ஆர்டர் செய்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறான் அமெரிக்காவில் ஒரு சிறுவன்.

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் 6 வயது மகனிடம் விளையாடுவதற்காக செல்போனைக் கொடுத்து, ரூ. 80 ஆயிரம் நஷ்டமாகி இருக்கிறார் பரிதாபத்திற்குரிய தந்தை ஒருவர்.

இப்போதெல்லாம் பெரியவர்களைவிட சின்னச் சின்னக் குழந்தைகள்தான் எப்போதும் செல்போனும், கையுமாக வளைய வருகிறார்கள். செல்போனால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பெரியவர்களுக்கு இருந்தாலும், பல வீடுகளில் குழந்தைகள் கையில் செல்போன் தருவதைத் தவிர்க்க முடிவதில்லை.

டிவி, விளையாட்டுப் பொம்மைகள் என எதையும் கேட்காமல், செல்போனை மட்டுமே கேட்கும் குழந்தைகள் இங்கு அதிகம். ஆனால், அப்படி குழந்தைகள் கையில் செல்போனைக் கொடுத்தாலும், பெரியவர்கள் எப்போதும் அவர்கள் அதில் என்ன பார்க்கிறார்கள் என்பதைக் கண்காணிக்க வேண்டும்.

அப்படிக் கவனிக்கத் தவறியதால், இந்திய மதிப்பில் ரூ. 80 ஆயிரம் பணத்தை இழந்திருக்கிறார் அமெரிக்கத் தந்தை ஒருவர்.

அவசியமான பதிலடியை தருவோம்.. சீன பலூனை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா.. அந்த நொடி என்ன நடந்தது? வீடியோ அவசியமான பதிலடியை தருவோம்.. சீன பலூனை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா.. அந்த நொடி என்ன நடந்தது? வீடியோ

சினிமாவுக்குப் போன மனைவி

சினிமாவுக்குப் போன மனைவி

அமெரிக்காவில் மிக்சிகன் பகுதியில் வசித்து வருபவர் கெய்த் ஸ்டோன்ஹவுஸ். இவரது மனைவி பெயர் கிறிஸ்டின். இந்தத் தம்பதிக்கு மேசன் என்ற 6 வயது மகன் உள்ளார். சம்பவத்தன்று கிறிஸ்டின் தனது தோழிகளுடன் சினிமாவுக்கு சென்றுவிட, அப்பாவும், மகனும் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர்.

செல்போனில் விளையாட்டு

செல்போனில் விளையாட்டு

மனைவி வீட்டில் இல்லாததால், வீட்டு வேலைகளில் மூழ்கி இருந்த கெய்த், மேசன் தன்னை தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக, தன்னுடைய செல்போனை அவருக்கு விளையாடக் கொடுத்துள்ளார். சிந்தனை முழுவதும் வேலையில் இருந்ததால், தன் மகன் செல்போனில் என்ன செய்கிறார் என்பதைக் கெய்த் கவனிக்கவில்லை.

திரும்பத் திரும்ப..

திரும்பத் திரும்ப..

சிறிதுநேரம் கழித்து கெய்த் வீட்டிற்கு உணவுப் பார்சல் ஒன்று வந்துள்ளது. கிறிஸ்டின் பேக்கரி வைத்திருந்ததால், அவர் ஏதாவது பொருளை ஆர்டர் செய்திருக்கலாம் எனக் கருதி இதனை அவர் பெரிய விசயமாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், சிறிய இடைவெளியில் அடுத்தடுத்து உணவுப் பொருட்களாக டெலிவரி செய்யப்பட்டதால் கெய்த் அதிர்ச்சி அடைந்தார்.

சுட்டிப் பையனின் சேட்டை

சுட்டிப் பையனின் சேட்டை

அப்போதுதான் ஏதோ தவறு நேர்ந்துள்ளது என்பதை அவர் உணர்ந்தார். உடனடியாக தன் மகனிடம் இருந்து தன் செல்போனை வாங்கிப் பார்த்தவருக்கு தலையே சுற்றி விட்டது. காரணம் அவரது ஆன்லைன் வேலட்டில் இருந்த பணம் முழுவதையும் உணவுப் பொருட்களாக ஆர்டர் செய்திருந்தான் அந்தச் சுட்டிப் பையன்.

பணமெல்லாம் காலி

பணமெல்லாம் காலி

மேசன் தனது அப்பாவின் செல்போன் மூலம் ஆர்டர் செய்திருந்த உணவுப் பொருட்களின் பில் 1000 அமெரிக்க டாலர். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 80,000 ரூபாய். கெய்த்தின் அக்கவுண்ட்டில் பணம் காலியானதால்தான், உணவு ஆர்டர் செய்வதை அச்சிறுவன் நிறுத்தியிருக்கிறான். இல்லையென்றால், 1000 டாலரையும் தாண்டி ஆர்டர் செய்து கொண்டே இருந்திருப்பான்.

வேற லெவல் பதில்

வேற லெவல் பதில்

தனது கையிருப்பில் இருந்த பணம் முழுவதும் செலவாகி விட்டதை நினைத்து, அழுவதா அல்லது சிரிப்பதா என்பது புரியாமல் திணறியுள்ளார் கெய்த். பிறகு நேரே தன் மகனிடம் சென்று, 'ஏன் இப்படி செய்தாய்?' எனக் கேட்டுள்ளார். அதற்கு அந்தக் குட்டிப்பையன் அளித்த பதில்தான் இந்த வேடிக்கை சம்பவத்தின் ஹைலைட்டே.

பீட்சா எங்கய்யா?

பீட்சா எங்கய்யா?

ஒருபுறம் தந்தை கோபமாகத் திட்டிக் கொண்டிருக்க, அந்தக் குட்டிப்பையன் கேஷுவலாக, 'கொஞ்சம் நிறுத்துங்கள்' என்பது மாதிரி தன் கையை உயர்த்தி, 'பீட்சா வந்திருச்சா.. இல்ல இன்னும் இல்லையா?' எனக் கேட்டுள்ளான். இதைக் கேட்டதும் கோபத்தையும் மீறி, சிரித்து விட்டாராம் கெய்த். தனது இந்த 'சொந்தக் கதை.. சோகக்கதையை' சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார் கெய்த். அவரது பதிவிற்கு கலவையான கமெண்ட்கள் கிடைத்து வருகின்றன.

எல்லாம் நன்மைக்கே...

எல்லாம் நன்மைக்கே...

இது ஒருபுறம் இருக்க, இந்த சம்பவத்தால் கெய்த்தும், மேசனும் ஒரே நாளில் இணையத்தில் பிரபலமாகி விட்டனர். அமெரிக்காவின் பிரபல ஊடகங்கள் பல இந்த சம்பவத்தை செய்தியாக வெளியிட, கெய்த் பணம் வைத்திருந்த அந்த ஆப்பும், மேசன் செலவழித்த பணத்தை ஈடு செய்யும் அளவிற்கு இலவச கூப்பன்களை அளித்துள்ளது. எப்படியோ மேசன் விளையாட்டாக செய்த செயலால், 1000 டாலருக்கு உணவுப்பொருட்களும் கிடைத்து, அதே அளவு இலவச கூப்பனையும் பெற்று, இப்போது உலகளவில் பிரபலமும் ஆகிவிட்டார் கெய்த்.

English summary
A six-year-old boy from Michigan, US, ordered a takeaway worth $1,000 (Rs 80,000) using his dad's phone while his mother was out for the evening.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X