Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"டபுள்" ஹேப்பி.. அடுத்தடுத்த 2 பிரசவத்திலும் இரட்டையர்களே.. லட்சத்தில் ஒருவருக்கு நடக்கும் அதிசயம்

இரண்டாவது பிரசவத்திலும் இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த பெண்மணி ஒருவருக்கு ஓராண்டு கழித்து மீண்டும் இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பது பேசுபொருளாகியுள்ளது.

இரட்டை குழந்தைகள் மீது தற்போது மக்களுக்கு ஆர்வம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. செயற்கை கருத்தரிப்பில் சினிமா நட்சத்திரங்கள் இரட்டைக் குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் நிலையில் சாமானிய மக்களும் இரட்டை குழந்தைகள் மீது ஆர்வம் கொண்டிருக்கின்றனர். இரட்டை குழந்தை பிரசவத்தில் ஒரு சில வகைகள் இருக்கின்றன. ஒரு கருமுட்டையில் இரண்டு விந்தணுக்கள் சென்று அது காலப்போக்கில் ஒரே பனிக்குடத்தில் கருவாக உருவாகி பிரசவமாகும். இந்த வகை பிரசவங்களில் இரண்டு குழந்தைகளும் ஒரே பாலினமாகதான் இருக்கும்.

மற்றொரு வகை பிரசவமானது இரண்டு கரு முட்டைகளில் விந்தணுக்கள் உட்சென்று தனித்தனி பனிக்குடத்தில் இரு வேறு கருவாக வளர தொடங்கும். இப்படி பிறக்கும் குழந்தைகள் இருவரும் வெவ்வேறு பாலினமாக இருப்பார்கள். உடல் அளவிலும் மாற்றங்கள் இருக்கும் என்பதால் இவர்களை 'டவின்ஸ்' என யாராலும் கண்டுபிடிக்க முடியாது. இதையும் தவிர்த்து ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறப்பதும் உண்டு. இந்த வரிசையில் மற்றொரு சம்பவம் நடந்திருக்கிறது.

 மோமோ குழந்தைகள்

மோமோ குழந்தைகள்

அதாவது அமெரிக்காவின் அலபாமா பகுதியை சேர்ந்த பிரிட்னி மற்றும் பிரான்கி ஆல்பா தம்பதியினருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்னர் இரட்டை குழந்தை பிறந்திருக்கிறது. அதேபோல, தற்போது மீண்டும் இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கின்றன. இதனை 'மோமா' குழந்தைகள் என்று அழைப்பார்கள். இரண்டாவது பிரசவத்திலும் இரட்டையர்கள் பிறந்திருப்பது பெற்றோருக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "செயற்கை கருத்தரிப்பில் வேண்டுமானால் இது சாத்தியமாகலாம், ஆனால் இயற்கை கருத்தரிப்பில் இப்படி பிறப்பது அபூர்வம். மட்டுமல்லாது இந்த வகை பிரசவங்களில் கருச்சிதைவுக்கான வாய்ப்புகள் அதிகம்" என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

 இரட்டை குழந்தைகள்

இரட்டை குழந்தைகள்

அமெரிக்காவை பொறுத்த அளவில் 60 ஆயிரம் பேரில் ஒருவருக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கின்றன. பிரிட்னி மற்றும் பிரான்கி ஆல்பா தம்பதியினர் இது குறித்து கூறுகையில், "எங்களுக்கு முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தது மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியது. நாங்கள் இருவர், எங்களுக்கு இருவர் என்று இருந்தோம். ஆனால் ஓராண்டுக்கு பின்னர் மீண்டும் குழந்தை பிறக்கப் போகிறது என்பதை அறிந்த எங்களுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. இந்த முறை பெண் குழந்தையை நாங்கள் எதிர்பார்த்திருந்தோம். ஏனெனில் முதலில் பிறந்த இரட்டையர்கள் ஆண்கள்.

ஆச்சரியம்

ஆச்சரியம்

ஆனால் பரிசோதனைக்கு பின்னர்தான் எங்களுக்கு பிறக்கப்போவது இரட்டை குழந்தைகள் என்பது தெரிய வந்தது. இது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. என்ன சொல்வதென தெரியவில்லை. எந்த அளவுக்கு நாங்கள் மகிழ்ச்சியாக இந்தோமோ அதே அளவுக்கு நாங்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டோம். இரண்டு குழந்தைகளுக்கும் தேவையான ஊட்டச்சத்துள்ள உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி, பரிசோதனைகள் என எல்லாவற்றிலும் சிரமங்களை எதிர்கொண்டோம். வயிற்றில் இருந்த குழந்தைகளும் கருச்சிதைவு அடைய வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறியிருந்தார்கள். எனவே சாதாரண பிரசவத்தை விட இந்த பிரசவத்திற்கு கூடுதலாக கவனம் செலுத்தினோம்.

 மொத்தம் 6 பேர்

மொத்தம் 6 பேர்

ஒரு கட்டத்தில் இக்குழந்தைகள் நல்லபடியாக பிறக்குமா என்பது குறித்தே எங்களுக்கு சந்தேகம் எழுந்துவிட்டது. இருப்பினும் நம்பிக்கையை கைவிடவில்லை. எதிர்பார்த்ததைப்போல குழந்தைகள் பிறந்துவிட்டன. இது மிகப்பெரிய ஆச்சரியம். இப்போது எங்கள் வீட்டின் எண்ணிக்கை மொத்தம் 6. வீடு கலகலப்பாக இருக்கப்போகிறது" என்று தம்பதியினர் புன்னகையுடன் தங்களது அனுபவத்தை பகிர்ந்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+