சான்டாதான நீங்க?.. சுட்டி சிறுமியிடம் சிக்கிய வெள்ளை தாடி முதியவர்! அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா?
நியூயார்க்: அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு தொடங்கியுள்ள நிலையில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. வீடியோவில் கிறிஸ்துமஸ் தாத்தா என நினைத்துக்கொண்டு முதியவர் ஒருவரிடம் சிறுமி உரையாடும் காட்சிகள் சமூக வலைத்தள பயன்பாட்டாளர்களை வெகுவாக ஈர்த்திருக்கிறது.
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தில் தேவாலயங்களில் சிறப்பு கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். எனவே அந்த கொண்டாட்டங்களில் மக்கள் பங்கேற்றிருக்க, சிறுவர்களுக்கு கிறிஸ்துமஸ் என்றாலே கிறிஸ்துமஸ் தாத்தா எனப்படும் சான்டா கிளஸ் ஞாபகம்தான்.
ஒவ்வொரு கிறிஸ்துமஸ் தினத்தன்றும் சான்டா கிளாஸ் வந்து நாம் விரும்பும் பரிசுகளை கொடுத்துவிட்டு போவார் என்று குழந்தைகள் கிறிஸ்துமஸை எதிர்பார்த்து காத்திருப்பார்கள். இந்நிலையில் அமெரிக்காவில் கடை ஒன்றில் சிவப்பு நிற சட்டை அணிந்த வெள்ளை நிற தாடி கொண்ட முதியவரை சிறுமி ஒருவர் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டே இருந்திருக்கிறார். முதலில் அந்த முதியவர் இதனை கவனிக்கவில்லை.

சான்டா கிளாஸ்
பின்னர் யதார்த்தமாக திரும்பி பார்க்கையில் சிறுமி நம்மைதான் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பதை புரிந்துகொண்டார். இதனையடுத்து சிறுமியை அருகில் அழைத்துள்ளார். அவளும் எவ்வித தயக்கமுமின்றி அவர் அருகே சென்றிருக்கிறார். பின்னர் இருவருக்கும் இடையே அழகான உரையாடல் தொடங்குகிறது. முதியவர் சிறுமியை பார்த்து, "நான் யார் என்று தெரியுமா?" என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவள் பதில் அளிக்காமல் அவரையே பார்த்துக்கொண்டிருக்கிறார். பின்னர் "நான் சான்டா கிளாஸ்" என்று அவர் கூற சிறுமி ஆச்சரியத்தில் வாயை பிளந்திருக்கிறார்.

பிஸ்கெட்டுகள்
பின்னர் "என்ன பெண்ணே நீ கிறிஸ்துமஸ் கொண்டாட தயாரா?" என்று கேட்க சிறுமியும் உற்சாகமாக "ஆமாம்" என்று பதிலளித்துள்ளார். ஆனால் சிறுமியின் பின்னால் நின்றுகொண்டிருந்த அவளது தாயார் இதனை செல்போனில் பதிவு செய்தபடியே, அவளிடம் இது சான்டா கிளாஸ் கிடையாது வீட்டுக்கு போகலாம் வா என்று அழைத்துள்ளார். ஆனால் சிறுமி தனது தாயின் குரலை சட்டை செய்யவேயில்லை. பின்னர் அந்த முதியவர் சிறுமியிடம் உனது கைகளை காட்டு என்று கேட்க சிறுமி மகிழ்ச்சியாக கைகளை நீட்டியுள்ளார். "உனக்கு என்ன இவ்வளவு அழகான நகங்கள் இருக்கிறது?" என்று கேட்டுவிட்டு உனக்காக நான் உன் வீட்டில் சில பிஸ்கெட்டுகளை விட்டுவிட்டு போகிறேன் என்று கூறியுள்ளார்.

நன்றி
அதற்கு அந்த சிறுமி, "நான் அனைத்தையும் சாப்பிட்டுவிடவா?" என்று மழலை மொழியில் கேட்க அதற்கு அவர், "அப்படி செய்ய வேண்டாம். ஏனெனில் என்னுடைய மான்களுக்கும் நான் சாப்பிட ஏதாவது கொடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமிக்கு அவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறுகிறார். இத்துடன் இவர்களுக்கு இடையிலான உரையாடல்கள் முடிகிறது. இறுதியாக சிறுமி அவருக்கு நன்றி சொல்லிவிட்டு தனது தாயிடம் திரும்புகிறார். இந்த வீடியோ சமீபத்தில் எடுக்கப்பட்டது கிடையாது. சில ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் வீடியோ
ஆனால் ஒவ்வொரு கிறிஸ்துமஸ்க்கும் இது சமூக வலைத்தளங்களில் பரவிவிடும். இந்த வீடியோவை பார்க்கும்போதெல்லாம் ஒரு இதமான உணர்வு ஏற்படுவதாக சமூக வலைத்தள பயனர்கள் கூறியுள்ளனர். இந்த வீடியோவில் உள்ள முதியவர் ரோஜர் லார்க் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். ஒவ்வொரு கிறிஸ்துமஸ் பண்டிகையின்போதும் தான் ஷாப்பிங் சென்றால் அங்குள்ள குழந்தைகள் தன்னை சான்டா கிளாஸ் என்று தவறாக புரிந்துகொள்கிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
-
அமெரிக்கா - ஈரான் மோதலால் இந்தியாவுக்கு 7 பெரும் சவால்கள்! அபாய மணியடிக்கும் வளைகுடா -
ஈரானிடம் இருக்கும் செக் பாயிண்ட்.. ஹார்மூஸ் மூடும் டிரம்பின் முடிவுக்கு சவுதி அரேபியா கடும் எதிர்ப்பு? -
மேற்காசிய போருக்கு நடுவே.. திடீரென பிரதமர் மோடிக்கு போன் போட்ட டிரம்ப்.. ஆலோசித்தது என்ன? -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல்












Click it and Unblock the Notifications