நீர் கடிகாரம் ஓகே அது என்ன? தண்ணீர் கடிகாரம்? உலவும் புதுவகை வாட்டர் வாட்ச்
நியூயார்க்: மனிதன் நாகரிகமடைய தொடங்கிய காலத்திலிருந்து தற்போது வரை அவனுடன் பயணிக்கும் நேரத்தை போலவே நேரத்தை காட்டும் கடிகாரமும் பயணித்துதான் வந்திருக்கிறது.
தொடக்கத்தில் சூரினை வைத்து நேரத்தை அளந்தனர். ஆனால் இரவு வேளையில் நேரத்தை அளப்பதற்கு கடிகாரம் இல்லாத நிலையில், அவர்கள் நீர் கடிகாரத்தை பயன்படுத்தினார்கள்.
தற்போது இந்த கடிகாரங்கள் எவ்வளவோ மேம்படுத்தப்பட்டு துல்லியமான நேரத்தை காட்டும் அளவுக்கு உருவாக்கப்பட்டிருந்தாலும், மனிதர்களுக்கு பழமை மீதான பற்று கொஞ்சம் இருக்கதானே செய்யும்? அந்த வகையில் நேரத்தை காட்டும் செயற்கை நீரூற்று ஒன்று இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

கடிகாரங்கள்
உலகின் பல இனக்குழு மக்கள் அவர்கள் பாணியில் கடிகாரங்களை வடிவமைக்க தொடங்கினர். உதாரணமாக அரேபியர்கள், வெப்பம் மிகுந்த பாலைவனங்களில் வசிப்பதால் சூரியனை அடிப்படையாக கொண்டு அவர்கள் கடிகாரத்தை உருவாகினார்கள். அதாவது 24 கம்பங்களை நட்டு வைத்து சூரிய ஒளியை பிரதிபலிக்கும் இந்த கம்பங்களின் நிழலைக் கொண்டு அவர்கள் நேரத்தை அளவிட்டார்கள். இப்படியாக சூரிய கடிகாரம் தோன்றியது.

நீர் கடிகாரம்
அதேபோல இரவில் இவர்கள் மணலை கொண்டு நேரத்தை அளவிட்டார்கள். இது மணற் கடிகாரம் என்றழைக்கப்பட்டது. மேலும், சீராக எரியும் விளக்கினை கொண்டும் அவர்கள் நேரத்தை கணக்கிட்டார்கள். அரேபியர்கள் இவ்வாறு இருக்கையில், கிரேக்க மக்கள் நீரை கொண்டு நேரத்தை அளவிடும் நீர் கடிகாரத்தை கண்டுபிடித்தனர். அடியில் துளையிடப்பட்ட பாத்திரம் ஒன்று அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும். இந்த பாத்திரத்திலிருந்து கீழே உள்ள பாத்திரத்தில் நீர் துளி துளியாக விழும்.

இந்தியாவில் கடிகாரம்
இவ்வாறு விழும் நீரின் அளவை கொண்டு நேரம் அளவிடப்பட்டது. இந்தியாவின் ஹரப்பா மொகஞ்சதரோ நாகரிகத்து மக்கள் இது போன்ற நீர் கடிகாரத்தை பயன்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இங்கு செய்யப்பட்ட அகழ்வாய்வில் அடியில் துளையிடப்பட்ட பாத்திரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. நாளாந்தா பல்கலைக்கழகத்தில் நீர் கடிகாரம் இருந்தைதாக கூறப்படுகிறது. மேலும், இந்த கடிகாரத்தை வைத்து காலையில் 4 மணி நேரமும் இரவில் 4 மணிநேரமும் அளவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது.

நவீன நீர் கடிகாரம்
இப்படியாக வளர்ச்சியடைந்து வந்த கடிகாரங்கள் தற்போது அதிநவீனமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. நொடிகளை நானோ-செகன்ட், மில்லி செகன்ட் என்றும் நம்மால் பிரிக்க முடிந்துள்ளது. ஆனாலும் பழமையை மறக்காத நம்மில் சிலர் தண்ணீர் கடிகாரத்தை உருவாக்கியுள்ளனர். நீர் கடிகாரம் சரி, அது என்ன தண்ணீர் கடிகாரம் என்று கேட்கிறீர்களா? ஒரு செயற்கை நீர் வீழ்ச்சி நேரத்தை காட்டும் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications