Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதெல்லாம் ரொம்ப ஓவர்.. ஒரேயொரு தங்க மீனுக்கு ரூ.12 ஆயிரம் வாடகையாம்! ஹவுஸ் ஓனர் புதிய சட்டம்

தொழில்நுட்ப நிறுவனங்களின் நடவடிக்கைகளால் பலர் வேலையிழந்து தவிக்கும் நிலையில் வீட்டு வாடகையே கட்ட முடியாத சூழுல் உருவாகியுள்ளது. ஆனால், இந்த ஹவுஸ் ஒனர்கள் மீனுக்கு வாடகை வசூலிப்பது அநியாயம் என்று பலரும் குற்றம்சாட்டியுள்ள

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: செல்லப் பிராணிகளை வைத்திருந்தால் சிலர் வீடு வாடகைக்கு விடவே யோசிப்பார்கள். இந்நிலையில், ஒரேயொரு 'தங்க மீனை' செல்லப் பிராணியாக வளர்க்கும் ஒருவர் தன்னுடைய ஹவுஸ் ஓனருக்கு மாதம் ரூ.12,000 கூடுதலாக செலுத்துவதாக கூறியுள்ளார். இதற்கான வாடகை பில்லையும் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

அமெரிக்காவே சேர்ந்தவர் நிக். இவர் ஒரு vlogger. அதாவது வித்தியாசமான இடங்களுக்கு சென்று அது குறித்து விளக்கி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிடும் நபர். இந்நிலையில், சமீபத்தில் அவர் டிக்டாக்கில் ஒரு வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். இது வைரலாகியுள்ளது. அதாவது அமெரிக்காவில் இவர் வாடகை வீட்டில் தங்கி வருகிறார். தொடக்கத்தில் இவருக்கு வீடு கிடைப்பதே குதிரை கொம்பாக இருந்திருக்கிறது. பெரும்பாலான ஹவுஸ் ஓனர்கள், செல்லப்பிராணிகளை வைத்திருந்தால் வீடு கொடுக்க மாட்டார்கள். அதேபோல இவருக்கும் வீடு தர மறுத்திருக்கிறார்கள்.

ஆனால் இவர் வைத்திருந்தது ஒரே சிறிய தங்க மீன்தான். நிக் தனது வீட்டு ஓனரிடம் பேசி எப்படியோ வீட்டை வாடகைக்கு எடுத்துவிட்டார். ஆனால், தங்கமீன் வளர்ப்பதற்காக ஒருநாளைக்கு ரூ.930 வீதம் மாதம் ரூ.12 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று ஹவுஸ் ஓனர் நிபந்தனை விதித்துள்ளார். இந்த வீட்டையும் தவறவிட்டுவிட்டால் வேறு வீடு கிடைக்காது என்பதால் நிக் இந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டுள்ளார்.

வாடகை

வாடகை

தற்போது இந்த வாடகை ரசீதைதான் அவர் டிக்டாக்கில் பகிர்ந்திருக்கிறார். இவர் இதனை பகிர்ந்த உடன் பலரும் தங்களுடைய சோகக்கதைகளையும், ஹவுஸ் ஓனர் கொடுமைகளையும் கமென்ட்டில் பகிர்ந்துக்கொள்ள தொடங்கிவிட்டனர். மீன் எந்த விதத்தில் ஹவுஸ் ஓனருக்கு தொந்தரவாக இருந்துவிட போகிறது? என்று பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர். வேறு சிலர், 'சொந்த வீடு வைத்திருக்கும் ஹவுஸ் ஓனரின் தொல்லையை தாங்க முடியவில்லை' என்றும் புலம்பியுள்ளனர். பணத்திற்காக வெவ்வேறு நிபந்தனைகளை விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கமென்ட்டில் வந்து பொங்கியுள்ளனர்.

காரணம்

காரணம்

பலரும் இந்த சம்பவம் குறித்து விமர்சனம் கூறியிருந்தாலும், சிலர் மட்டும் இதற்கு விளக்கமளித்துள்ளனர். அதாவது மீன் தொட்டி எதிர்பாராமல் கீழே உடைந்துவிட்டால் என்ன செய்வது? எனவே இந்த பாதிப்பை சரி செய்யும் நோக்கத்தில்தான் ரூ.12 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார். அதேபோல அமெரிக்காவின் உள்ளூர் சட்டத்தின்படி மீன்கள் வளர்ப்பு பிராணிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளதால் இதற்கும் சேர்த்து வாடகை வசூலிப்பது ஒன்றும் தவறில்லை எனவும் விளக்கமளித்துள்ளனர். சமீப நாட்களாக அமெரிக்காவில் நடைபெற்று வரும் வேலையிழப்புகளால் இளைஞர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், பலரும் வீட்டு வாடகையை கட்டவே சிரமப்பட்டு வருகின்றனர்.

அறிவாற்றல்

அறிவாற்றல்

இப்படி இருக்கையில், ஒரேயொரு மீனுக்கு இவ்வளவு கூடுதல் தொகை வசூலிக்கப்படுவது முறையானது அல்ல என்றும் கூறியுள்ளனர். பொதுவாக தங்க மீன்கள் மத்திய ஆசிய நாடுகளிலிருந்தான் உலகம் முழுவதும் பரவியுள்ளன. குறிப்பாக சொல்வதெனில் சீனாதான் இதன் தாயகமாக இருக்க வேண்டும். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சீனர்கள் தங்க மீன்களை செல்லப்பிராணியாக வீடுகளில் வளர்க்கத்தொடங்கியுள்ளனர். இதில் ஏராளமான வகைகள் உண்டு. சீனாவில் மட்டுமே சுமார் 300 இனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த வகை மீன்கள் கூர்மையான அறிவாற்றலை கொண்டவையாகும்.

பெரிய மீன்

பெரிய மீன்

இதனால் மனிதர்களை வேறுபடுத்தி பார்த்து அடையாளம் காண முடியும். தன்னுடைய உரிமையாளர் வந்தால் வாலை வேகமாக அசைத்து தொட்டியில் அங்கும் இங்கும் ஓடி உணவை எதிர்பார்க்கும். அதேநேரம் அந்நியர்கள் யாரேனும் வந்தால் ஒளிந்துக்கொள்ளவும் செய்யும். இதுவரை வளர்ந்ததிலேயே மிகப்பெரிய தங்க மீன் நெதர்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது சுமார் 49 செ.மீ நீளம் கொண்டதாகும். இதற்கடுத்து இங்கிலாந்தில் 38 செ.மீ நீளம் கொண்ட தங்கமீன் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+