நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

5.75 இஞ்ச் நீளம்.. 450 கிராம் எடை.. 30 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மெகாலோதன் பல் கண்டுபிடிப்பு

அமெரிக்காவில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராட்சச சுறா மீனின் பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராட்சச சுறா மீனின் பல்லை அமெரிக்க தம்பதி ஒன்று கண்டுபிடித்துள்ளது.

பல அரிய வகை உயிரினங்கள் கடலில் இருக்கின்றன. அதில் ஒன்று தான் சுறா மீன்கள். கடலில் மீக ஆபத்தான மீன் என்றால் அது சுறா தான். மிக நீளமாக இருக்கும் அதன் பற்கள் மனிதர்களைக்கூட மிக எளிதாக வேட்டையாடிவிடும்.

அதனால் தான் சுறா மீனின் தாக்குதலை மையமாக வைத்து பல ஹாலிவுட் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பிடத்தகுந்த ஒரு படம் ஸ்பீல்பெர்க்கின் ஜாஸ். அந்த படத்தில் சுறா மீனை வைத்து மக்களை மிரட்டியிருப்பார் ஸ்பீல்பெர்க்.

மெகாலோதன் சுறா

மெகாலோதன் சுறா

இந்நிலையில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மெகாலோதன் எனும் ராட்சச சுறா மீனில் பல் ஒன்றை அமெரிக்க தம்பதி கண்டுபிடித்துள்ளது. தெற்கு கரோலினாவை சேர்ந்த ஜெஸிகா ரோஸ் மற்றும் அவரது கணவர் சைமன் ஆகியோர் ஸ்டோனா ஆற்றங்கரை ஓரமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

ராட்சச பல்

ராட்சச பல்

அப்போது ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள வனப்பகுதியில் ஒரு மிருகத்தின் ராட்சச பல் ஒன்றை கண்டெடுத்தனர். 5.75 இஞ்ச் நீளத்தில் 450 கிராம் எடை கொண்ட அந்த பல், சுமார் 30 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மெகாலோதன் எனும் ராட்சச சுறா மீனின் பல் என அவர்கள் கணித்துள்ளனர்.

பயங்கரமான உயிரினம்

பயங்கரமான உயிரினம்

மெகாலோதன் சுறா என்பது 30 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் வாழ்ந்த சுறா மீன் இனமாகும். இது கடல்வாழ் உயிரினங்களில் மிகவும் அபாயகரமான உயிரினமாகும். சுமார் 60 அடி வரை வளரக்கூடிய இந்த சுறா மீன்கள், 10 அடி வரை வாயை பிளந்து, வேட்டையாடக் கூடியவையாம். அதற்கு அதன் ராட்சச பற்களே மிக உறுதுணையாக இருந்திருக்கின்றன.

டிக் டாக் வீடியோ

டிக் டாக் வீடியோ

ஆற்றங்கரையில் சுறா மீன் பல்லை கண்டெடுக்கும் வீடியோவை ஜெஸிகா ரோஸ் தனது டிக்டாக் பக்கத்தில் பகிர்ந்தார். அந்த வீடியோவை 16 லட்சத்துக்கும் அதிகமானோர் இதுவரை பார்த்துள்ளனர். ஏராளமானோர் மிகுந்த ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்துள்ளனர்.

பொதுமக்கள் பார்வைக்கு

பொதுமக்கள் பார்வைக்கு

மெகாலோதன் சுறாவின் பல்லை பொதுமக்களின் பார்வைக்காக தற்போதைக்கு தனது வீட்டில் வைத்திருக்கிறார் ஜெஸிகா. அந்த பல்லை வைத்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இருப்பதாக ஜெஸிகா தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட் படம்

ஹாலிவுட் படம்

அது எப்படியோ ஹாலிவுட் இயக்குனர்களுக்கு இப்போது ஒரு புது கண்டெண்ட் தயார். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களை வைத்து ஜுராசிக் பார்க் எடுத்து ஆச்சரியப்படுத்தியது போல், மெகாலோதன் சுறாவை வைத்து புதிதாக படமெடுத்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

English summary
A American couple from South Carolina found a giant megalodon shark tooth which is extinct now that lived 3 to 5 million years ago.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X