நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கடைக்கு போன போது காணாமல் போன ‘ஜாக்சன்’.. விமானத்தை வாடகைக்கு எடுத்து தேடிய எமிலி.. இதுவல்லவோ பாசம்!

காணாமல் போன நாயை கண்டுபிடிக்க அமெரிக்க பெண் ஒருவர் விமானத்தை வாடகைக்கு எடுத்திருக்கிறார்.

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர், தனது தொலைந்து போன நாயை கண்டுப்பிடிக்க விமானத்தை வாடகைக்கு எடுத்திருத்துள்ளது தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ நகரை சேர்ந்த எமிலி தளர்மோ ஆஸ்திரேலியன் ஷெப்பர்டு நாய் ஒன்றை செல்லமாக வளர்த்து வந்தார். அந்த நாய்க்கு அவர் ஜாக்சன் என பெயர் வைத்துள்ளார்.

american woman hires plane to search for missing dog

ஜாக்சன் மீது எமிலி உயிரையே வைத்திருக்கிறார். கடந்த 5 வருடங்களாக அதை மிகவும் செல்லமாக வளர்த்து வந்தார். இந்நிலையில், கடந்த வாரம் கடைக்கு சென்ற போது அந்த நாய் காணாமல் போய்விட்டது. பல இடங்களில் தேடியும் ஜாக்சன் கிடைக்காததால், எமிலி மிகவும் கவலை அடைந்திருக்கிறார்.

ஏலம் விடப்பட்ட மேயர் பதவி.. அதிகத் தொகை கொடுத்து வாங்கிய 7 மாதக்குழந்தை.. கொள்கை என்ன தெரியுமா?ஏலம் விடப்பட்ட மேயர் பதவி.. அதிகத் தொகை கொடுத்து வாங்கிய 7 மாதக்குழந்தை.. கொள்கை என்ன தெரியுமா?

இதையடுத்து அவர் ஒரு விமானத்தை வாடகைக்கு எடுத்து சான்பிரான்சிஸ்கோ மற்றும் ஒக்லாந்து பகுதிகளில் 2 மணி நேரம் தேடினார். அந்த விமானத்திற்கு அவர் கொடுத்த வாடகை தொகை ரூ.85 ஆயிரமாம்.

ஜாக்சனில் போட்டோவுடன் கூடிய பேனரை விமானத்தில் கட்டி பறக்கவிட்டபடி ஆன்லைனில் விளம்பரம் செய்தார். மேலும், தனது நாயை கண்டு பிடித்து தருபவர்களுக்கு இந்திய மதிப்பு படி ரூ.50 லட்சம் பரிசு தொகை வழங்குவதாகவும் எமிலி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
In America a woman hired a plane to search for her missing dog.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X