5 செகன்ட் வீடியோவால் ரூ.600 கோடி போச்சு! பெண் HRஐ கட்டிப்பிடித்த சிஇஓவுக்கு நேர்ந்த கதியை பாருங்க
நியூயார்க்: அமெரிக்காவில் பிரபல கோல்ட்ப்ளே இசை நிகழ்ச்சியில் ஆஸ்டிரானமர் தலைவர் ஆண்டி பைரன் என்பவர் அதே நிறுவனத்தில் ஹெச்ஆர் தலைவராக வேலை செய்யும் கிறிஸ்டின் காபோட் என்பவரைக் கட்டிப்பிடிக்கும் வீடியோ இணையத்தில் டிரெண்டானது. இதைத் தொடர்ந்து பைரனிடம் இருந்து அவரது மனைவி விவாகரத்து பெறப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை விவாகரத்து நடந்தால் அது பைரன் மிக பெரிய தொகை கொடுக்க நேரிடும் என்கிறார்கள்.
அமெரிக்காவில் நடந்த கோல்ட்ப்ளே இசை நிகழ்ச்சியில் பிரபல ஆஸ்டிரானமர் தலைவர் ஆண்டி பைரன், அதே நிறுவனத்தில் ஹெச்ஆர் தலைவராக இருக்கும் கிறிஸ்டின் காபோட் என்பவரைக் கட்டிப்பிடித்தபடி இருந்த வீடியோ திடீரெனப் பெரிய திரையில் ஒளிபரப்பானது. இருவரும் கள்ள உறவில் இருந்த நிலையில், கேமரா அவர்களைக் காட்டியதும் இருவருமே ஒரு நொடி அதிர்ந்து போய்விட்டனர். மொத்தமே ஆறு நொடி மட்டுமே இருக்கும் இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகவே அது இருவரது வாழ்க்கையை மொத்தமாகப் புரட்டிப்போட்டுவிட்டது.

ஆஸ்டிரானமர் சிஇஓ
ஏற்கனவே ஆஸ்டிரானமர் சிஇஓ பதவியில் இருந்து ஆண்டி பைரன் விலகியுள்ளார். அவர் கள்ள உறவில் இருக்கும் வீடியோ வெளியாகி சில மணி நேரங்களிலேயே, ஆண்டி பைரனின் மனைவி மேகன் கெர்ரிகன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து தனது கணவரின் பெயரை நீக்கினார். இதனால் இந்தத் தம்பதி விவாகரத்து செய்யப் போவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அப்படி இந்த ஜோடி விவாகரத்து செய்து கொண்டால் பைரன் தான் ஏமாற்றிய தனது மனைவிக்கு எவ்வளவு தொகை கொடுக்க வேண்டி இருக்கும் என்பது குறித்த தகவல்களை அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
ரூ.600 கோடி போச்சு
இருவரும் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் வசித்து வருகிறார்கள். மாசசூசெட்ஸ் திருமணச் சட்டங்களின்படி, கெர்ரிகன் தனது கணவரின் சொத்தில் பாதி, அதாவது சுமார் 20 மில்லியன் டாலர்கள் முதல் 70 மில்லியன் டாலர்கள் வரை பெற முடியும் என்று அங்குள்ள வழக்கறிஞர் நான்சி கெம்டோப் தெரிவித்துள்ளார். அதாவது இந்திய மதிப்பில் ரூ.172 கோடி முதல் ரூ.603 கோடி வரை பைரன் தனது மனைவிக்குக் கொடுக்க வேண்டி இருக்கும்.
பைரன்- கெர்ரிகன் ஜோடிக்கு திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகின்றன. இந்தக் காலகட்டத்தில் அவர்கள் சேர்ந்து சேர்த்த சொத்துக்கள் அனைத்தையும் சமமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று மாசசூசெட்ஸ் மாகாண சட்டம் கூறுகிறது. பைரனின் இந்த செயல்பாடுகளால் அவரது குழந்தையே அதிகம் பாதிக்கும் என்றும் வழக்கறிஞர் நான்சி கூறினார்.
குழந்தைகளுக்குத் தான் சங்கடம்
அவர் மேலும் கூறுகையில், "இந்த வழக்கில் குழந்தைகளுக்கு ஏற்படும் சங்கடம் தான் மிக மோசம்.. இங்குப் பிரச்சனை என்னவென்றால், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கு பைரனின் நடத்தை சங்கடத்தை ஏற்படுத்தும். மேலும், பெற்றோர் பிரிவதால் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளவும் கூடுதல் செலவும் அழுத்தம் ஏற்படும்" என்றார்.
கேபோட்டிற்கு பிரச்சனை இல்லை
அதேநேரம் ஹெச்ஆர் தலைவரான கேபோட் விவாகரத்து செய்தாலும் அது பெரிய சிக்கலை ஏற்படுத்தாதாம். குறிப்பாக நிதி ரீதியாக அவர் தனது கணவருக்குப் பெரிய தொகையைக் கொடுக்க வேண்டி இருக்காதாம். ஏனென்றால் அவரது கணவர் ஆண்ட்ரூ உடன் கேபோட் குறுகிய காலம் ஒன்றாக இருந்துள்ளார். எனவே, திருமணத்தின் சமயத்தில் அவர்கள் எதாவது ஒப்பந்தம் போட்டிருந்தால் அதன் அடிப்படையிலேயே பணம் கொடுக்க வேண்டி இருக்கும். சில திருமண ஒப்பந்தங்களில் துரோகம் செய்யும் நபர் பணத்தை இழக்க நேரிடும் விதியும் உள்ளதால் அது ஒவ்வொரு ஜோடிக்கும் தனியாக மாறும் என்கிறார்கள்.
-
மூழ்கடிக்கப்படும் ரூ.63,000 கோடி.. கடலுக்கு அடியில் அமையும் 73,000 டன் பிரம்மாண்டம்! என்ன மேட்டர் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications