"ப்ளூ ஆர்ஜின்".. பைலட்டே இல்லாமல்.. 82 வயது பெண்ணுடன்.. நாளை விண்வெளிக்கு பறக்கும் ஜெப் பெஸோஸ்!
நியூயார்க்: அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸ் தனது ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் நாளை விண்ணுக்கு செல்ல இருக்கிறார். இவரின் சிறிய குழு ஒன்றும் விண்வெளிக்கு டிரிப் செல்ல இருக்கிறது.
Recommended Video
பூமியில் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு இடையில் போட்டி இருந்தது போதாது என்று தற்போது விண்வெளியிலும் நிறுவனங்களுக்கு இடையில் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. விண்வெளி சுற்றுலாவை கைப்பற்றும் வகையில், எதிர்காலத்தில் மார்ஸ் போன்ற கிரங்களுக்கு பயணிகளை அழைத்து செல்லும் வகையில் உலகின் பெரும் பணக்காரர்கள் பல்வேறு ஸ்பேஸ் ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.
இதில் எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், ஜெப் பெஸோஸின் ப்ளூ ஆர்ஜின் நிறுவனம், ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் கேலக்டிக் ஆகிய நிறுவனங்கள் கடும் போட்டியிட்டுக்கொண்டு இருக்கின்றன. இதில் ரிச்சர்ட் கடந்த வாரமே வெற்றிகரமாக தனது குழுவோடு விண்வெளிக்கு சின்ன டிரிப் அடித்துவிட்டு திரும்பிவிட்டார்.

விண்வெளி டிரிப்
ரிச்சர்டின் விண்வெளி டிரிப் குறித்து படிக்க இந்த கட்டுரையை கிளிக் செய்யவும். இந்த நிலையில்தான் தற்போது ரிச்சர்டின் ஸ்பேஸ் போட்டியாளர் ஜெப் பெஸோஸ் இதேபோல் தனது ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு செல்ல இருக்கிறார். நாளை மாலை மேற்கு டெக்ஸாஸ் அருகே உள்ள பாலைவனத்தில் இருந்து 6.30 மணிக்கு ஜெப் பெஸோஸ் விண்வெளிக்கு செல்கிறார்.

எப்படி
ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் தி நியூ ஷெப்பர்ட் என்ற ராக்கெட் மூலம்தான் இவர்கள் விண்வெளிக்கு செல்கிறார்கள். இந்த தி நியூ ஷெப்பர்ட் ராக்கெட் என்பது ஆட்டோமெட்டிக்காக இயங்க கூடியது. இதற்கு பைலட் தேவையில்லை. விண்வெளிக்கு சென்று பின் மீண்டும் லேண்ட் ஆகும் திறன் கொண்டது. ஆம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கான் 9 வகை ராக்கெட்டுகள் விண்ணுக்கு சென்றுவிட்டு மீண்டும் பூமிக்கு சென்றது போலவே ரிட்டர்ன் அடிக்குமே.. அப்படித்தான் இதுவும் பூமிக்கு திரும்பி வரும்.

தி நியூ ஷெப்பர்ட்
தி நியூ ஷெப்பர்ட் ராக்கெட்டின் முன் பக்கம் கேப்ஸ்யூல் போன்ற வடிவமைப்பு இருக்கும். கூம்பாக இருக்கும் இந்த பகுதிக்கு உள்ளேதான் ஜெப் பெஸோஸ் குழு இருக்கும். இவர்கள் உள்ளே இருந்து எதுவும் செய்ய மாட்டார்கள். இவர்கள் வெறுமனே பயணத்தை என்ஜாய் செய்வது மட்டுமே வேலை. இந்த தி நியூ ஷெப்பர்ட் ராக்கெட் கர்மன் லைன் வரை இந்த கேப்ஸ்யூலை கொண்டு செல்லும்.

எவ்வளவு தூரம்
அதாவது 100 கிலோ மீட்டர் உயரம் வரை பூமியில் இந்த கேப்ஸ்யூலை தி நியூ ஷெப்பர்ட் ராக்கெட் கொண்டு செல்லும். அதன்பின் இந்த கேப்ஸ்யூல் தனியாக கழன்று கொண்டு மேலும் சில கிலோ மீட்டர்கள் வானத்தில் பறக்கும். இந்த ராக்கெட் கேப்ஸ்யூலை டிராப் செய்துவிட்டு, பூமிக்கு திரும்பிவிடும். ஏவப்பட்ட இடத்தில் இருந்து 3 கிமீ தூரத்தில் இந்த ராக்கெட் தரையிறங்கிவிடும். இன்னொரு பக்கம் கேப்ஸ்யூல் 100 கிமீ உயரத்தை தாண்டி சில கிலோ மீட்டர்கள் செல்லும். மொத்தமாக 6 நிமிடங்கள் கேப்ஸ்யூலுக்கு உள்ளே குழு குறைவான புவி ஈர்ப்பு விசையை உணரும்.

கேப்ஸ்யூல்
இதனால் உள்ளே 6 நிமிடம் குழு லேசாக மிதக்கும். கர்மன் லைனை தாண்டிய பின் கேப்ஸ்யூலில் இருக்கும் சிறிய ரக பூஸ்டர்கள் மூலம் கேப்ஸ்யூல் திசை திருப்பப்படும். இதன் மூலம் பூமியை நோக்கி அது திரும்பி வரும். இது அனைத்திற்கும் 6 நிமிடங்கள் ஆகும். பின்னர் வேகமாக இந்த கேப்ஸ்யூல் பூமியை நோக்கி வரும் போது பாராசூட் திறக்கப்படும். பூமியில் இருந்து 26 கிமீ உயரத்தில் இருக்கும் போது இதன் பாராஷுட் திறக்கப்பட்டு வேகம் குறைக்கப்படும்.

வேகம்
இதனால் கடைசி 4 நிமிடங்கள் மிக மெதுவாக கேப்ஸ்யூல் கீழே இறங்கி, பாதுகாப்பாக பூமியில் தரையிறங்கும். 1.6 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த கேப்ஸ்யூல் பத்திரமாக தரையிறங்கும். மொத்தமாக மேலே சென்று கீழே வர 10 நிமிடம்தான். இரண்டு "ராஜா சார்" பாட்டு கேட்கும் நேரத்தில் ஜெப் விண்ணுக்கு சென்றுவிட்டு திரும்பி விடுவார். வானத்தில் இருக்கும் போது இவர்கள் பூமியின் வடிவமைப்பை ஜன்னல்கள் வழியாக பார்க்க முடியும். இந்த மொத்த பயணத்திலும் பைலட் யாரும் இடம்பெற மாட்டார். மொத்தமாக பைலட் இல்லாத ஆட்டோபைலட் ராக்கெட்டில், மனிதர்கள் குழு பயணம் மேற்கொள்ளவது இதுவே முதல்முறை.

பாதுகாப்பு
இதனால் இந்த பயணம் எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது இதற்கான இறுதிக்கட்ட சோதனைகள் நடந்து வருகின்றன. நாளை மாலை இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்படும். இந்த பயணத்தில் ஜெப் பெஸோசுடன் 82 வயது நிரம்பிய முன்னாள் பெண் விமானியான வாலி பங்க் இடம்பெறுவர். 80+ வயதான நபர் ஒருவர் விண்வெளிக்கு செல்வது இதுவே முதல்முறை.

விண்வெளி
விண்வெளி பயணத்தை ஊக்குவிக்கும் வகையில் இவர் இதில் இடம்பெறுவர். தன்னுடைய இளம் வயதிலேயே இவர் விண்வெளிக்கு செல்ல வேண்டியது. ஆனால் மெர்குரி 13 விண்கலத்தில் விண்வெளிக்கு செல்லும் வாய்ப்பை அவர் இளம் வயதில் இழந்துவிட்டார். அதன்பின் இப்போது 82 வயதில் வாலி பங்க் விண்வெளிக்கு செல்கிறார்கள். ஜெப்பின் சகோதரர் மார்க்கும் இதில் விண்ணுக்கு செல்ல இருக்கிறார். அதேபோல் ஆலிவர் தியாமென் என்று 18 வயது இளம் நபரும் இதில் பயணிக்க உள்ளார்.

எப்படி
டச் இளைஞரான ஆலிவர்தான் உலகிலேயே விண்ணுக்கு பறக்கும் இளம் வயது நபர். ஒரே பிளைட்டில் இளைஞர் - முதியவர் என்று ரசனையான குழுவை ஜெப் தேர்வு செய்துள்ளார். உண்மையில், இந்த இளைஞரின் இடத்தில் பணக்காரர் ஒருவர்தான் பயணிக்க வேண்டும். அவரின் பெயர் வெளியிடப்படவில்லை. இதற்காக 28 மில்லியன் டாலரை அவர் செலுத்தி இருந்தார். ஆனால் கடைசியில் அவருக்கு வேறு சில "வேலைகள்" வந்துவிட்டதால் இந்த இளைஞர் அவரின் சார்பாக பயணிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். நாளை இவர்களின் விண்வெளி பயணம் டெக்ஸாஸில் மேற்கொள்ளப்படுகிறது. ரிச்சர்ட் மேற்கொண்ட பயணத்திற்கு பின் இது இரண்டாவது கார்ப்ரேட் ஸ்பேஸ் டிரிப் ஆகும்!
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications