நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டேக்ஆப் முதல் லேண்டிங் வரை..மனிதர்களோடு விண்ணுக்கு சென்று திரும்பிய விர்ஜின் கேலடிக்..எப்படி நடந்தது

Google Oneindia Tamil News

நியூயார்க்: விர்ஜின் கேலடிக் நிறுவனத்தின் விண்கலம் நேற்று மனிதர்களோடு வெற்றிகரமாக விண்ணுக்கு சென்றுவிட்டு பாதுகாப்பாக திரும்பி உள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில் இந்த விர்ஜின் கேலடிக் பயணம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த பயணம் எப்படி சாத்தியமானது என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான விர்ஜின் கேலடிக் நிறுவனத்தின் விண்கலம் நேற்று விண்வெளிக்கு சென்றுவிட்டு பாதுகாப்பாக திரும்பியது. இந்த விர்ஜின் கேலடிக்கின் நிறுவனர் கோடீஸ்வரர் சர் ரீச்சர்ட் பிரான்சன் மற்றும் அவரது குழுவினர் விண்வெளிக்கு சென்றுவிட்டு பாதுகாப்பாக திரும்பினார்கள்.

4 பேர் போதாது.. அதிரடி ஆட்டத்தை ஆரம்பிக்க விரும்பும் பாஜக.. தமிழக ஆளுநராகிறாரா ரவிசங்கர் பிரசாத்? 4 பேர் போதாது.. அதிரடி ஆட்டத்தை ஆரம்பிக்க விரும்பும் பாஜக.. தமிழக ஆளுநராகிறாரா ரவிசங்கர் பிரசாத்?

உலகில் முன்னணி பணக்காரர்களான எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ், ஜெப் பெஸோஸின் ப்ளூ ஆர்ஜின் நிறுவனங்கள் இடையே ஸ்பேஸுக்கு செல்ல கடும் ஸ்பேஸ் போட்டி நிலவு வரும் நிலையில் முதல் ஆளாக ரிச்சர்ட் விண்வெளிக்கு சென்றுள்ளார். முக்கியமாக இவருக்கும் பெஸோசுக்கும் கடும் போட்டி விண்வெளியில் நிலவி வரும் நிலையில், ரிச்சர்ட் அதில் வென்றுள்ளார்..

 வெற்றி

வெற்றி

நேற்று அமெரிக்காவில் உள்ள நியூ மேக்சிகோவின் ஸ்பேஸ்போர்ட் விண்வெளி ஏவு தளத்தில் இருந்து இந்த விண்கலம் மனிதர்களோடு விண்வெளிக்கு சென்றுவிட்டு திரும்பி உள்ளது. மொத்தம் நான்கு நிமிடங்கள் இந்த விண்கலம் விண்ணில் மிதந்துவிட்டு பின் பூமிக்கு பாதுகாப்பாக வந்தது. மற்ற ஸ்பேஸ் திட்டங்கள் போல ராக்கெட்டில் விண்ணுக்கு சென்றுவிட்டு அதன்பின் "எஸ்கேப் பாட்" போன்ற குடுவையில் மனிதர்கள் திரும்பி வரவில்லை. இந்த ஸ்பேஸ் பயணம் மிகவும் வித்தியாசமாக, இயற்கையின் உதவியோடு செயல்படுத்தப்பட்டுள்ளது.

 எப்படி செல்லும்

எப்படி செல்லும்

விஎஸ்எஸ் யூனிட்டி என்ற விண்கலம்தான் நேற்று விண்ணுக்கு சென்றது. இந்த விஎஸ்எஸ் யூனிட்டி விண்கலத்தை ஸ்பேஸ்ஷிப் 2 என்ற பெயரில் அழைக்கிறார்கள். விஎம்எஸ் ஈவ் (ஈவ் என்பது ரிச்சர்டின் தாயார் பெயர்) என்ற இரட்டை எஞ்சின் கொண்ட கேரியர் விமானம் மூலம் இந்த ஸ்பேஸ்ஷிப் 2 விண்ணுக்கு ஏவப்பப்ட்டது. விஎம்எஸ் ஈவ் என்பது இரண்டு எஞ்சின் கொண்ட, இரண்டு பைலட் இயக்க கூடிய விமானம் ஆகும். இது இரண்டு விமானத்தை இணைந்ததை போன்ற தோற்றம் கொண்ட கேரியர் விமானம் ஆகும். ஒயிட்நைட் 2 என்று இதை அழைப்பார்கள். மேலே உள்ள புகைப்படத்தில் இருப்பதுதான் ஒயிட்நைட் 2.

 அடிப்படை அமைப்பு

அடிப்படை அமைப்பு

இந்த ஒயிட்நைட் 2 விமானத்திற்கு நடுவில் இருக்கும் இடைவெளியில்தான் ஸ்பேஸ்ஷிப் 2 விண்கலம் பொருத்தப்பட்டு இருக்கும். இதுதான் இதன் அடிப்படை அமைப்பு. ஒயிட்நைட் 2 விமானத்தில் இரண்டு பைலட்கள் இரண்டு புறமும் இருப்பார்கள். நடுவில் உள்ள ஸ்பேஸ்ஷிப் 2 விண்கலத்தின் ஒரு பைலட் மற்றும் துணை பைலட், அது போக ஆராச்சியாளர் குழு இருக்கும். மொத்த அடிப்படை அமைப்பு எப்படி இருக்கும் என்பதை மேலே புகைப்படத்தில் காணலாம்.

பறக்கும்

இந்த ஸ்பேஸ் பயணம் எப்படி நடந்தது என்று இப்போது பார்க்கலாம். மற்ற ராக்கெட் பயணங்கள் போல இல்லாமல், இது சாதாரண விமானம் பயணம் போலவே தொடக்கத்தில் இருக்கும். ஒயிட்நைட் 2 விமானம் ஸ்பேஸ்ஷிப் 2 விண்கலனை சுமந்து கொண்டு, சாதாரண விமானம் டேக் ஆப் செய்வது போலவே டேக் ஆப் செய்யும். ஓசோன் லேயர் முடியும் தூரம் அல்லது 25 கிமீ உயரம் வரை இரட்டை எஞ்சின் கொண்ட ஒயிட்நைட் 2 விமானம் ஸ்பேஸ் ஷிப் விண்கலத்தை சுமந்து செல்லும்.

பிரியும்

இந்த நிலையில் ஓசோன் லேயர் முடியும் இடத்தில் ஒயிட்நைட் 2 விமானம் மிதந்து கொண்டு இருக்கும் போது அதில் இருந்து ஸ்பேஸ்ஷிப் 2 தனியாக பிரியும். ஒயிட்நைட் 2 விமானம் கிட்டத்தட்ட ஒரு டாக்சி போல பூமியில் இருந்து விண்கலனை குறிப்பிட்ட உயரத்திற்கு கொண்டு டிராப் செய்துவிட்டு திரும்பிவிடும். விமானத்தில் இருந்து பிரிந்த ஸ்பேஸ்ஷிப் 2 அதன்பின்தான் நெருப்பை கக்கி ராக்கெட் போல இயங்க தொடங்கும்.

 ஸ்பேஸ்ஷிப் 2

ஸ்பேஸ்ஷிப் 2

ஸ்பேஸ்ஷிப் 2 விர்ஜின் நிறுவனத்தின் ராக்கெட் ரக விமானங்களில் ஒன்றாகும். இது ரிச்சர்ட் பிரான்சனின் இன்னொரு நிறுவனமான தி ஸ்பேஸ் ஷிப் கம்பெனிதான் இதை உருவாக்கியது. 3.2 மாக் வேகம் வரை எட்ட கூடிய இது 90 கிமீ உயரம் வரை செல்லும். இந்த ஸ்பேஸ்ஷிப் 2தான் நேற்று ஒயிட்நைட் 2 விமானத்தில் இருந்து பிரிந்து விண்வெளியை நோக்கி சென்றது. இதில்தான் ரிச்சர்ட் மற்றும் குழுவினர் உள்ளே இருந்தனர்.

குழு

குழு

விமானத்தில் இருந்து பிரிந்த ஸ்பேஸ்ஷிப் 2 ராக்கெட் போல நேற்று பறந்தது. விண்வெளியில் மீசோஸ்பியரை நெருங்கும் உயரம் வரை இந்த ஸ்பேஸ்ஷிப் 2 பறந்தது. 88 கிமீ உயரம் வரை பறந்த ஸ்பேஸ்ஷிப் 2 அதன்பின் விண்வெளியில் மிதக்க தொடங்கியது. அங்கு புவிஈர்ப்பு விசை கொஞ்சம் குறைவாக இருக்கும். விண்கலத்தில் இருக்கும் வீரர்கள் இதனால் மிக மிக லேசாக மிதந்தனர். சரியாக 4 நிமிடம் விண்வெளி குழு ஸ்பேஸ்ஷிப் 2விற்குள் மிதந்தனர்.

 எப்படி உணர்வார்கள்

எப்படி உணர்வார்கள்

மேலே இந்த விண்கலம் வெற்றிகரமாக மிதந்தபின் எஞ்சின்கள் எதிர் திசையில் கிளைடர்கள் மூலம் திருப்பப்பட்டு, பூமியை நோக்கி திரும்பி வந்தது. இயற்கை விதிகளை பயன்படுத்தியே இது பூமிக்கு திரும்பி வரும். இயற்கையின் வெப்பநிலை, காற்று, அழுத்த வேறுபாடு இதை பயன்படுத்தி கிளைடர் வகை விமானங்கள் எஞ்சின் இல்லாமலே இயங்கும். அதே கிளைடர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியே ஸ்பேஸ்ஷிப் 2 விண்கலமும் பூமியை நோக்கி திரும்பி வந்தது. சாதாரண கிளைடர் எப்படி இருக்கும் என்பதை கீழே புகைப்படத்தில் காணலாம்.

 கிளைடர்

கிளைடர்

கிளைடர் தொழில்நுட்பம் மூலம் காற்றின் வேகம், அழுத்த மாறுபாட்டை பயன்படுத்தி வானத்தில் பல வட்டங்களை எதிர்க்கடிகார முள் திசையில் அடித்து கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை குறைந்து ஸ்பேஸ்ஷிப் 2 கீழ இறங்கியது. வேகம் குறைய குறைய உயரமும் குறைந்து மிதந்தபடி, எந்த எஞ்சினின் உதவியும் இன்றி, முழுக்க முழுக்க மெக்கானிக்கல் முறையில், இறக்கைகளை ஏற்றி இறக்கி ஸ்பேஸ்ஷிப் 2 கீழே கொண்டு வரப்பட்டது.

விமானம்

விமானம் தரையிறங்குவது போலவே இயல்பாக ஸ்பேஸ்ஷிப் 2 சாதாரணமாக நேற்று தரையிறங்கியது. உள்ளே பயணித்த மொத்த குழுவும் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பியது. இந்த விஎம்எஸ் யூனிட்டி விண்கலத்தில் விர்ஜின் தலைவர் ரிச்சர்ட் பிரான்சன் இடம்பெற்று இருந்தார். அதேபோல் இரண்டு பைலட்கள் டேவ் மெக்காய், மைக்கல் மசூச்சி இருந்தனர். இதுபோக மூத்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பெத்த மோசஸ், எஞ்சினியர் கோலின் பென்னட், ஆராய்ச்சியாளரும் இந்தியாவை சேர்ந்தவருமான ஸ்ரீஷா பண்ட்லா இருந்தனர்.

இந்திய பெண்

இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். ஆந்திராவை சேர்ந்தவர். விண்வெளிக்கு பரந்த மூன்றாவது இந்திய பெண்மணி ஆவார் இவர். இந்த பயணம் வெற்றிபெற்ற நிலையில் இனி மேலும் மனித ஸ்பேஸ் பயணங்களை இந்த விர்ஜின் கேலடிக் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. ஏற்கனவே இந்த நிறுவனம் மூலம் ஸ்பேஸுக்கு செல்ல பலர் புக்கிங் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Virgin Galactic: All you need to know about the VSS Unity trip to space with Richard Branson's crew.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X