1000 கல்லறைகளுக்கு ஒருவர்! உலகின் அமைதியான நகரம் இதுதான்! உயிரோடு இருப்பவர்களைவிட இறந்தவர்கள் அதிகம்
நியூயார்க்: உலகம் முழுவதும் பல விசித்திரமான இடங்கள் உள்ளன. மனிதன் கண்டுபிடிக்க வேண்டியவை இன்னும் நிறைய உள்ளது என்று கூட சொல்லலாம்.
ஆனால் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட சில இடங்கள் திகிலூட்டுவதாக இருக்கிறது. அதில் ஒன்றுதான் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள அமைதியின் நகரம்.
உயிருடன் இருப்பவர்களை விட உயிரிழந்தவர்கள் அதிகம் உள்ள நகரம் இது மட்டும்தான். இங்கு சுமார் 1000 பிணங்களுக்கு ஒருவர் என்கிற வகையில் மக்கள் தொகை இருக்கிறது.
அடுத்த 3 மணி நேரங்களில்.. சென்னை உட்பட 16 மாவட்டங்களில் மழை வெளுக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை

விசித்திரம்
பல வகையான நகரங்கள் உலகம் முழுவதும் இருக்கின்றன. உயரமான நகரம், நீர் சூழ்ந்த நகரம், வெப்பம் மிகுந்த நகரம், மிகவும் குளிர்ச்சியான நகரம் என பல நகரங்கள் இருக்கின்றன. ஆனால் அமைதியின் நகரம் என ஒன்று இருக்கிறது. இது குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இப்படியொரு நகரம் அமெரிக்காவின் கலிபோர்னியாவுக்கு அருகில்தான் அமைந்திருக்கிறது. சரி இந்த நகரம் அமைதியானது என எப்படி சொல்கிறீர்கள் என கேட்கிறீர்களா? இந்த கட்டுரையின் முடிவில் நீங்களே அத ஒப்புக்கொள்வீர்கள்.

1920களுக்கு பிறகு
கோல்மா என்று அழைக்கப்படும் இந்த நகரம் 1900க்கு முன் வரை சாதாரண பகுதியாகதான் இருந்துள்ளது. ஆனால், 1920லிருந்து 1941 வரை இப்பகுதியில் நடைபெற்ற மாற்றங்கள்தான் இந்த நகரத்திற்கு 'அமைதியின் நகரம்' என்கிற பெயர் வர காரணமாக அமைந்தது. அதாவது, இந்த காலகட்டங்களில், சான் பிரான்சிஸ்கோவில் அடக்கம் செய்யப்பட்டிருந்த உடல்களை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்போதைய அரசு உத்தரவிட்டிருந்தது.

மறுகட்டமைப்பு
இதனையடுத்து எல்லா உடல்களும் கோல்மா நகர் நோக்கி கொண்டுவரப்பட்டு இங்கு அடக்கம் செய்யப்பட்டன. இதற்காக தலா 10 டாலர் வசூலிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இவ்வாறு கொண்டு வரப்பட்ட சவங்களின் எண்ணிக்கை சுமார் 1.5 மில்லியனாகும். இதனையடுத்துதான் சான் பிரான்சிஸ்கோ மறு கட்டமைப்பு செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. தற்போது கோல்மா 15 லட்சம் கல்லறைகளுடன் இருக்கிறது. ஆனால் மக்கள் தொகையோ வெறும் 1,507தான்.

அமைதியின் நகரம்
கிறித்தவ மத்தின்படி உயிரிழந்தவர்களை புதைப்பதுதான் வழக்கம். எனவே உயிரிழந்தவர்களை புதைப்பதற்கான இடுகாடுகளின் அளவுகள் இந்த பகுதியில் நாள்தோறும் குறைந்துகொண்டே வருகிறது. தற்போது கோல்மா நகரத்தில் 1000 கல்லறைகளுக்கு ஒருவர் என வாழ்ந்து வருகின்றனர். இப்போது சொல்லுங்கள் இந்த நகரம் அமைதியின் நகரம் தானே?