பயந்துட்டாங்க.. அமெரிக்காவுக்கு 34% வரிபோட்ட சீனா.. டிரம்ப் சொன்ன வார்த்தை.. வெடித்த வர்த்தக போர்
நியூயார்க்: அமெரிக்கா கூடுதல் வரியை விதித்ததை தொடர்ந்து சீனா அதிரடியாக அந்த நாட்டுக்கு 34 சதவீதம் கூடுதல் விதியை விதித்துள்ளது. இது அமெரிக்காவுக்கு பெரிய அடியாக அமைந்துள்ளது. ந்த கூடுதல் வரி விதிப்பு பற்றி டொனால்ட் டிரம்ப் பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளார். இதனால் இருநாடுகள் இடையே வர்த்தக போர் தொடங்கி தொடங்கி உள்ளதோடு, வரும் நாட்களில் நிலைமை மோசமாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் பிற நாடுகளை போல் வரிகளை விதிப்போம் என்று அறிவித்தார். அதன்படி முதற்கட்டமாக கனடா, மெக்சிகோ, சீனாவுக்கு வரிகளை விதித்தார். டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு சீனாவுக்கு அடுத்தடுத்து தலா 10 சதவீத வரி என்று மொத்தம் 20 சதவீத வரியை விதித்தார்.

இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதுமட்டுமின்றி அமெரிக்காவுக்கும் வரிகளை விதித்தது சீனா. ஆத்திரம் அடைந்த சீனா, அமெரிக்காவில் இருந்து வரும் சோயா பீன்ஸ், மாட்டு இறைச்சி, பழங்கள், காய்கறிகள், பால் பொருட்களுக்கு 10 சதவீதமும் கோதுமை, மக்காச்சோளம், பருத்தி, கோழி இறைச்சிக்கு 15 சதவீதமும் வரி போட்டது.
இதனால் இருநாடுகள் இடையேயான வர்த்தக போர் உருவாகும் நிலை ஏற்பட்டது. இப்படியான சூழலில் தான் கடந்த 2 ம் தேதி டொனால்ட் டிரம்ப் அதிரடியாக பல நாடுகளுக்கு வரிகளை விதித்தார். இதில் இந்தியா, சீனா, பிரிட்டன், ஜப்பான், தென்கொரியா, இலங்கை, தாய்லாந்து
உள்பட பல நாடுகள் அடங்கும். ஒவ்வொரு நாடுகளுக்கும் வெவ்வேறு சதவீதத்தில் வரி என்பது விதிக்கப்பட்டது. நம்நாட்டுக்கு டொனால்ட் டிரம்ப் 27 சதவீத வரிகளை விதித்தார். அதேவேளையில் சீனாவுக்கு சீனாவுக்கு 34 சதவீதம் வரி போட்டார். இந்த புதிய வரி என்பது ஏப்ரல் 9 முதல் அமலுக்கு வருகிறது.
ஏற்கனவே டொனால்ட் டிரம்ப் 20 சதவீதம் வரை சீனாவுக்கு வரி போட்ட நிலையில் இப்போது 34 சதவீதத்தை அதிகரித்துள்ளார். இதன்மூலம் டொனால்ட் டிரம்ப் அதிபரான பிறகு சீனாவுக்கு மட்டும் 54 சதவீத வரி என்பது விதிக்கப்பட்டுள்ளது. இது சீனாவை கடும் கோபப்படுத்தி உள்ளது. இதனால் சீனாவும் அதிரடியானநடவடிக்கையை தொடங்கி உள்ளது. அதன்படி பழிக்குப்பழியாக அமெரிக்காவுக்கு சீனாவும் வரி விதிப்பை அறிவித்துள்ளது.
அதன்படி இப்போது கூடுதலாக 34 சதவீத வரியை அமெரிக்கா மீது விதித்துள்ளது சீனா. இந்த வரி விதிப்பு நடவடிக்கை ஏப்ரல் 10 ம்தேதி நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சீனா அமெரிக்காவுக்கு 15 சதவீத வரியை விதித்து இருந்தது. இதன்மூலம் அமெரிக்காவுக்கு மொத்தம் 49 சதவீதம் வரை சீனா வரி விதித்துள்ளது. இதனால் இருநாடுகள் இடையே வர்த்தக போர் வெடித்துள்ளது.
இந்நிலையில் தான் தற்போது சீனா விதித்துள்ள அதிகப்படியான வரி குறித்து டொனால்ட் டிரம்ப் தனது வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டொனால்ட் டிரம்ப், ‛‛
சீனா மீண்டும் தேவையில்லாமல் விளையாடுகிறது. அமெரிக்காவின் அதிரடியில் சீனா பயந்து போய்விட்டது' என்று தெரிவித்துள்ளார்.
இதனால் மீண்டும் டொனால்ட் டிரம்ப் சீனா மீது அதிரடி காட்ட வாய்ப்புள்ளது. அதற்கு சீனாவும் பதிலடி கொடுக்காலம். இதனால் அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தக போர் என்பது இன்னும் தீவிரமாகலாம் என்கின்றனர் நிபுணர்கள். ஏனென்றால் சீனா ஏற்கனவே அமெரிக்காவுடனனா வர்த்தக போருக்கு தயார் என்று தெரிவித்துவிட்டது.
அதாவது, ‛‛ அமெரிக்காவின் ‛மிரட்டலுக்கு ஒரு போதும் சீனா பயப்படாது. கொடுமையான வரி விதிப்பு எங்களிடம் வேலை செய்யாது.அமெரிக்கா போரை விரும்பினால் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. அது வரி போராக இருந்தாலும் சரி;. வர்த்தகப் போராக இருந்தாலும் சரி; அல்லது வேறு எந்த விதமான போராக இருந்தாலும் சரி. கடைசி வரை சண்டை செய்ய தயார்'' என்று சீனா அறிவித்து இருந்தது.
அதேபோல் டொனால்ட் டிரம்ப்பை எடுத்து கொண்டாலும் தான் நினைப்பதை செய்து முடிக்கும் நபராக உள்ளார். குறிப்பாக சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் அவர் பல விஷயங்களில் உறுதியாக உள்ளார். இதனால் தான் அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தக போர் என்பது வரும் நாட்களில் உச்சமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications