நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சீக்ரெட் கசிந்தது.. உடனே "லேபை" மூடினார்கள்.. அமெரிக்கா வெளியிடும் புதிய ஆதாரம்.. மாட்டும் சீனா!

Google Oneindia Tamil News

நியூயார்க்: கொரோனா வைரஸ் குறித்த ஆரம்பகட்ட தகவல்களை சீனா மறைத்தது என்பதற்கு முக்கியமான ஆதாரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை முக்கியமான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது.

Recommended Video

    Trump says he has seen evidence that the virus started in Wuhan Lab

    கொரோனா வைரஸ் மனித குலத்தை தாக்கி 6 மாதங்கள் ஆகிவிட்டது. மொத்த உலகத்தையும் இந்த வைரஸ் புரட்டி போட்டுள்ளது. ஆனால் இன்னும் இதற்கு முழுமையான தீர்வு கண்டுபிடிக்கப்படவில்லை. முக்கியமாக இந்த வைரஸ் எப்படி தோன்றியது என்று கூட கண்டுபிடிக்கப்படவில்லை.

    கொரோனா வைரஸ் வுஹன் சோதனை கூடத்தில் உருவாக்கப்பட்டு இருக்கலாம், அங்கிருந்து தவறுதலாக கசிந்து இருக்கலாம் என்று அமெரிக்கா சந்தேகிக்கிறது. அமெரிக்கா மட்டுமில்லை பல்வேறு உலக நாடுகள் இது தொடர்பான சந்தேகத்தை வெளியிட்டு உள்ளது.

    ரெண்டே வாரங்கள்தான்.. 122 பேருக்கு பாதிப்பு.. கொரோனா பரப்பும் மையமான டெல்லி சிஆர்பிஎஃப் பட்டாலியன் ரெண்டே வாரங்கள்தான்.. 122 பேருக்கு பாதிப்பு.. கொரோனா பரப்பும் மையமான டெல்லி சிஆர்பிஎஃப் பட்டாலியன்

    பல புகார்கள்

    பல புகார்கள்

    சீனா மீது அமெரிக்கா இது தொடர்பாக பல புகார்களை வைக்கிறது. சீனாவில் இந்த வைரஸ் செயற்கையாக உருவாக்கப்பட்டு இருக்கலாம். வுஹன் வைராலஜி ஆராய்ச்சி மையத்தில் உருவாக்கப்பட்டு அங்கிருந்து இந்த வைரஸ் கசிந்து வெளியேறி இருக்கலாம். வைரஸ் வெளியான பின் வேண்டும் என்றே சீனா அதன் பரவல் குறித்து மறைத்து இருக்கலாம் என்று புகார்கள் வைக்க தொடங்கி உள்ளது. இப்படி சீனா மீது அமெரிக்கா கடுமையான புகார்களை அடுக்கி வருகிறது.

    புது ஆதாரம்

    புது ஆதாரம்

    இந்த நிலையில் சீனா மீது அமெரிக்கா புதிய புகார் ஒன்றை வைத்துள்ளது. வெள்ளை மாளிகையின் புதிய செய்தி செயலாளர் கேலெக் மெக்கன்னி நேற்று முதல்முறையாக வெள்ளை மாளிகை சார்பாக செய்தியாளர் முன்னிலையில் பேசினார். தன்னுடைய முதல் பேச்சிலேயே சீனாவை மிக கடுமையாக மெக்கன்னி விமர்சனம் செய்தார். அதில், நான் சில முக்கியமான விஷயங்களை பேசுவேன். ஆனால் எப்போதும் அதிபர் டிரம்ப் சொல்ல வேண்டிய விஷயத்தை நான் அவசரப்பட்டு பேச மாட்டேன்.

    பேசுவார்

    பேசுவார்

    டிரம்ப் சொல்ல வேண்டிய விஷயங்களை அவர் பேசுவார். நானாக அவசரப்பட்டு எதுவும் சொல்ல மாட்டேன். ஆனால் அவரின் குரலாக நான் ஒலிப்பேன். சீனா மீது டிரம்ப் கோபமாக இருக்கிறார். கொரோனா விவகாரத்தை சீனா சரியாக கையாளவில்லை. இது எல்லோருக்கும் தெரியும். உங்களுக்கு நான் நிறைய ஆதாரங்களை கொடுக்க முடியும். அதிபர் விரைவில் இதை வெளியிடுவார்.

    என்ன எடுத்துக்காட்டு

    என்ன எடுத்துக்காட்டு

    உங்களுக்கு நான் இப்போது ஒரு எடுத்துக்காட்டு அளிக்கிறேன். கொரோனா வைரஸ் எப்படி இருக்கும் என்ற ஜீன் தோற்றத்தை சீனா வெளியிடவே இல்லை. இப்போது வரை வெளியிடவே இல்லை. அங்கு ஷாங்காய் மாகாணத்தில் உள்ள தனியார் ஆராய்ச்சி மருத்துவர் ஒருவர்தான் இதை வெளியிட்டார். அவர் உலகிற்கு இது தொடர்பாக உதவி செய்தார்.ஆனால் சீனா நமக்கு எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை.

    மொத்தமாக மூடியது

    மொத்தமாக மூடியது

    சீனா என்ன செய்தது தெரியுமா, கொரோனா வைரஸின் ஜீன் மாதிரி வடிவத்தை அது ரகசியமாக வைக்க நினைத்தது. ஆனால் அந்த மருத்துவர் அதை வெளியிட்டதும் சீனா மொத்தமாக அவரின் ஆராய்ச்சி மையத்தை மூடியது. அவர் சீக்ரெட்டை வெளியிட்டுவிட்டார் என்ற கோபத்தில் அந்த சோதனை மையத்தை மூடியது. இப்போது சீனாவின் எண்ணம் உங்களுக்கு புரியும். அதேபோல் இந்த வைரஸ் மனிதர்களிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவும் என்பதை சீனா மறைத்தது.

    சீனா மறைத்தது

    சீனா மறைத்தது

    இதற்கான ஆதாரங்கள் வெள்ளை மாளிகையிடம் இருக்கிறது. இது தொடர்பாக டிரம்ப் முக்கியமான விஷயங்களை பேசுவார். அவருக்கு முன்னால் என்னால் முக்கியமான விஷயங்களை அறிவிக்க முடியாது. சீனா மீது அமெரிக்கா என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கும் என்று நான் கூற மாட்டேன். ஆனால் டிரம்ப் விரைவில் அதை பற்றி அறிவிப்புகளை வெளியிடுவார் என்று, மெக்கன்னி தெரிவித்துள்ளார்.

    English summary
    Coronavirus: China tried to hide the genetic info the infection says White House in the war of words.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X