கொரோனா மறுபடியும் ரிட்டர்ன் ஆகும்.. ஆனால் ஒரு குட்நியூஸ்.. அமெரிக்க சைன்டிஸ்ட் சொன்ன செம விஷயம்!
நியூயார்க்: ஓமிக்ரான் அலை பல நாடுகளில் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில் கொரோனா பெருந்தொற்று குறித்து நல்ல செய்தி ஒன்றை அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கொரோனா கேஸ்கள் கொஞ்சம் கொஞ்சமாக உலகம் முழுக்க குறைய தொடங்கி உள்ளது. பல நாடுகளில் மூன்றாம் அலை முடியும் தருவாயை எட்டியுள்ளது. உலகம் முழுக்க இதுவரை 373,105,517 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுக்க 5,676,113 பேர் பலியாகி உள்ளனர். தற்போது ஓமிக்ரான் பரவலை அடுத்து 72,754,755 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உலகம் முழுக்க உள்ளனர். 294,674,649 பேர் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர்.

கொரோனா பெருந்தொற்று
உலகம் முழுக்க கொரோனா கேஸ்கள் குறைந்து வரும் நிலையில் கொரோனா பெருந்தொற்று குறித்து நல்ல செய்தி ஒன்றை அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்தபர் ஜெ எல் முர்ரே என்ற மருத்துவ ஆய்வாளர் பிரபல மருத்துவ இதழான லான்செட் இதழில் வெளியிட்ட ஆய்வு அறிக்கை ஆகும் இது. இதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ஓமிக்ரான் பரவல் அலை விரைவில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நல்ல செய்தி
கேஸ்கள் குறைவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளது. கடந்த நவம்பரில் உலகம் முழுக்க ஓமிக்ரான் பரவ தொடங்கியது. இந்த ஓமிக்ரான் பரவல் மார்ச் இறுதியில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓமிக்ரான் பெரும்பாலும் அறிகுறி இல்லாத கொரோனாவாகவே பரவி வருகிறது. அதேபோல் இது மிகவும் மைல்ட் கேஸ்களையே ஏற்படுத்துகிறது. இதனால் ஓமிக்ரான் பாதிக்கப்பட்ட பலருக்கு தங்களுக்கு ஓமிக்ரான் வந்ததே தெரியவில்லை.

ஓமிக்ரான்
எனவே ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியும் வீதம் உலகம் முழுக்க 20 சதவிகிதம் குறைந்துள்ளது. அதாவது 100ல் 20 பேருக்கு ஓமிக்ரான் வந்தாலும் அது கண்டறியப்படுவது இல்லை. எனவே உலகில் இப்போது இருக்கும் எண்ணிக்கையை விட அதிக பேருக்கு ஓமிக்ரான் ஏற்பட்டு இருக்கும். தொடர்ந்து மாஸ்க் அணிவதும், தொடர்ந்து வேக்சின் போட்டுக் கொள்வதும் மக்களிடையே கேஸ்கள் உயர்வதை கட்டுப்படுத்தும்.

இயற்கையான ஆன்டிபாடி
ஓமிக்ரான் அலையை முடிவிற்கு கொண்டு ஆன்டிபாடி உதவியாக இருக்கும். மக்களுக்கு ஏற்கனவே கொரோனா ஏற்பட்டு அவர்களுக்கு இயற்கையான ஆன்டிபாடி உள்ளது. அதேபோல் பலருக்கு வேக்சின் மூலம் ஆன்டிபாடி உள்ளது. எனவே இனிமேல் முன்பு இருந்தது போன்ற தீவிரமான அலைகள் மக்கள் இடையே தோன்றும் வாய்ப்புகள் இல்லை. ஆனால் புதிய வேக்சின்களை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

உருமாறிய கொரோனா
புதிய வகை உருமாறிய கொரோனா எதிர்காலத்தில் தோன்றினாலோ, மீண்டும் பெரிய அளவில் பரவல் ஏற்படாமல் இருக்கவோ நாம் புதிய வகை வேக்சின்களை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. வரும் வருடங்களில் இந்த கண்டுபிடிப்புகள் நிகழும் வாய்ப்புகள் உள்ளன. பல நாடுகளில் இப்போதே ஓமிக்ரான் எண்டமிக் என்ற நிலையை அடைந்துவிட்டது. அதாவது ப்ளூ காய்ச்சல் போல ஓமிக்ரான் மாறிவிட்டது.

மீண்டும் கொரோனா ரிட்டர்ன்
ஓமிக்ரான் அலைக்கு பின் மீண்டும் கொரோனா கேஸ்கள் ஆங்காங்கே தோன்றும். மீண்டும் கொரோனா ரிட்டர்ன் ஆகும். ஆனால் மொத்தமாக பெருந்தொற்று மீண்டும் ஏற்படாது. ஓமிக்ரான் மூலம் உலகின் 50 சதவிகித மக்கள் மார்ச் இறுதிக்குள் பாதிக்கப்படுவார்கள். அதுதான் கொரோனா பெருந்தொற்றுக்கு முற்றுப்புள்ளியாக இருக்கும். அதன்பின் கொரோனா ப்ளூ காய்ச்சல் போல அவ்வப்போது வந்துவிட்டு செல்லும். ஆனால் மீண்டும் பெருந்தொற்று போல பெரிய அளவில் இது பரவாது என்று லான்செட் இதழில் வெளியிட்ட ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications