நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒன்று இரண்டாகி.. இரண்டு மூன்றாகி.. மொத்தமாக புது "ரூபம்" எடுக்கிறதா கொரோனா?.. வல்லுனர்கள் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

நியூயார்க்: பொதுவாக ஒரு வைரஸ் அடிக்கடி உருமாற்றம் அடைந்தால் குறிப்பிட்ட காலத்திற்கு பின் அந்த வைரஸ் மொத்தமாக உருமாற்றம் அடைந்து புதிய வைரஸ் தோன்றும் வாய்ப்புகள் உள்ளன. கொரோனா வைரஸின் உருமாற்றத்திலும் இப்படி நடக்கும் ஆபத்துகள் உள்ளது என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா கேஸ்கள் அதிகரிக்க அதிகரிக்க உலகம் முழுக்க புதிய உருமாறிய வகை கொரோனா தோன்றி வருகிறது. கொரோனா வைரஸ் பல்கி பெருகும் போது ஒரே மாதிரி பெருகாமல், அதன் ஸ்பைக் புரோட்டின்களில் ஏதாவது மாறுதல் ஏற்பட்டால் அதுவே உருமாற்றம் அல்லது மியூட்டேஷன் என்று அழைக்கப்படும்.

ஷாக்..! பக்ரீத்துக்கு முந்தைய நாள்.. திடீர் குண்டு வெடிப்பு - 8 பெண்கள், 7 குழந்தைகள் என 35 பேர் பலிஷாக்..! பக்ரீத்துக்கு முந்தைய நாள்.. திடீர் குண்டு வெடிப்பு - 8 பெண்கள், 7 குழந்தைகள் என 35 பேர் பலி

தற்போது உலகம் முழுக்க பல்வேறு வகை மியூட்டேடட் வைரஸ்கள் பரவி வருகின்றன. இதனால் கேஸ்களும் அதிகரித்து வருகிறது.

டெல்டா

டெல்டா

டெல்டா, ஆல்பா வகை கொரோனா வைரஸ்கள் உலகம் முழுக்க 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது. இந்த வகை வைரஸ்களை கவலை அளிக்க கூடிய ஆபத்தான வகையாக உலக சுகாதார மையம் வரையறுத்து உள்ளது. இதுபோக இன்னும் பல வகை உருமாறிய வைரஸ்கள் மனிதர்கள் இடையே பரவி வருகிறது. வரும் நாட்களில் ஜீன் சோதனைகள் செய்ய செய்ய புதிய வகைகள் கண்டுபிடிக்கப்பட வாய்ப்புள்ளது.

புதிய அலை

புதிய அலை

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்க அதிகரிக்க புதிய மியூட்டேஷன் நடக்கும் வாய்ப்புகள் உள்ளது. வரும் நாட்களில் மிகவும் ஆபத்தான, மோசமான உருமாறிய கொரோனா வைரஸ்கள் தோன்றும் வாய்ப்புகள் உள்ளதாகவும் உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உதாரணமாக வுஹனில் பரவிய கொரோனாவில் இருந்து 9 விதமான மாற்றங்களை பெற்று ஸ்பைக் புரோட்டினில் நிறைய மாறுதல் பெற்றே டெல்டா வகை கொரோனா உருவாகி உள்ளது.

டெல்டா ஆபத்து

டெல்டா ஆபத்து

இதனால்தான் டெல்டா வகை கொரோனா அதிக சக்தி கொண்டதாகவும், ஆபத்து கொண்டதாகவும் உள்ளது. இந்த நிலையில் கொரோனாவும் அடிக்கடி உருமாற்றம் அடைந்தால் எதிர்காலத்தில் புதிய வைரஸ் தோன்றும் வாய்ப்பு உள்ளது என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக ஒரு வைரஸ் அடிக்கடி உருமாற்றம் அடைந்தால் குறிப்பிட்ட காலத்திற்கு பின் அந்த வைரஸ் மொத்தமாக உருமாற்றம் அடைந்து புதிய வைரஸாக தோன்றும் வாய்ப்புகள் உள்ளன.

ஆராய்ச்சியாளர்கள்

ஆராய்ச்சியாளர்கள்

இப்போது கொரோனா வைரஸ் மெதுவாகவே உருமாற்றம் அடைகிறது. அதோடு கொரோனா வைரஸில் இப்போது பெரிய மாற்றங்கள் ஏற்படுவது இல்லை. சின்ன சின்ன புரோட்டின் ஸ்பைக் மாற்றங்களே ஏற்படுகின்றன. இதனால் இந்த உருமாற்றங்கள் புதிய வைரஸை உருவாக்காது. அதாவது இந்த சின்ன சின்ன உருமாற்றங்கள் கொரோனா வைரஸை மொத்தமாக மாற்றி புதிய வைரஸை உருவாக்க வாய்ப்பு இல்லை.

ஆனால் சிக்கல்

ஆனால் சிக்கல்

ஆனால் எதிர்காலத்தில் அதிக உருமாற்றங்கள் ஏற்பட்டால், ஸ்பைக் புரோட்டினில் மட்டுமின்றி மொத்த ஜீனிலும் உருமாற்றம் ஏற்பட்டால் அது மொத்தமாக புதிய கொரோனாவை, புதிய வைரசை உருவாக்கும். உருமாறிய வைரஸாக இல்லாமல் முற்றிலுமாக புதிய பண்புகள் கொண்ட வைரஸாக அது இருக்கும் என்று அமெரிக்க மாற்றம் பிரிட்டன் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இப்போது கொரோனா மெதுவாகவே, சிறிய அளவிலேயே மாற்றம் அடைகிறது.

ஆபத்து இல்லை

ஆபத்து இல்லை

அதனால் இப்போது ஆபத்து இல்லை, சில வருடங்கள் கழித்தும் கொரோனா பரவினால் அப்போது இந்த ஆபத்து ஏற்படும். அப்போது புதிய வைரஸாக கொரோனா மாறலாம். அதை தடுக்க ஒரே வழி வேக்சின் மட்டுமே. வேக்சின் போடுவதன் மூலம் மொத்தமாக பரவலை கட்டுப்படுத்தினால் மட்டுமே கொரோனாவின் உருமாற்றத்தை தடுத்து, எதிர்காலத்தில் புதிய வைரஸ் ஒன்று உருவாவதை முடியும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.

English summary
Coronavirus: More mutation in strains may create a brand new virus in the future if the vaccination fails.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X