பேஸ்புக்.. ட்விட்டர்.. கூகுள் வரிசையில் இணைந்த டிஸ்னி.. 7000 ஊழியர்கள் அதிரடியாக பணிநீக்கம்
டிஸ்னி நிறுவனம் செலவுகளை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக அதன் முக்கிய அதிகாரிகளே குற்றம்சாட்டியுள்ளனர்.
நியூயார்க்: உலகம் முழுவதும் பேஸ்புக், டிவிட்டர் போன்ற பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்துவரும் நிலையில், லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிரபல ஓடிடி மற்றும் சினிமான தயாரிப்பு நிறுவனமான 'டிஸ்னி' சுமார் 7000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
2023ம் ஆண்டு தொடக்கம் பலருக்கு புதிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருந்தாலும், தங்களுக்கு இந்த ஆண்டு சாபகேடு போல அமைந்திருப்பதாக டெக் நிறுவன ஊழியர்கள் புலம்பி வருகின்றனர். கடந்த 18 ஆண்டுகளில் முதன் முறையாக பேஸ்புக்கின் தாய் நிறுவனமான 'மெட்டா' 2022ம் அண்டு நவம்பரில் சுமார் 11 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இந்நிறுவனம் உருவானதிலிருந்து இவ்வளவு ஊழியர்களை ஒரேயடியாக பணிநீக்கம் செய்ததில்லை.
இதனையடுத்து கூகுள், டிவிட்டர், ஐபிஎம் என பெரும் நிறுவனங்கள் தொடர்ச்சியாக தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. மட்டுமல்லாது இந்த பணிநீக்க நடவடிக்கை மேலும் தொடரும் என்பதால் ஊழியர்கள் அச்சத்தில் இருக்கின்றனர். இந்நிலையில்தான் டிஸ்னி நிறுவனமும் இந்த பணிநீக்க நடவடிக்கையை அறிவித்திருக்கிறது. கடந்த 2021ம் ஆண்டு நிலவரப்படி உலகம் முழுவதும் டிஸ்னி நிறுவனத்திற்காக சுமார் 1.9 பேர் முழு நேரமாக பணியாற்றி வருகின்றனர்.

15 ஆண்டுகள்
இந்நிலையில் இதில் 7000 பேர் திடீரென பணியிலிருந்து அனுப்பப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அந்நிறுவனத்தின் சிஇஓ பாப் இகர் கூறுகையில், "உலகம் முழுவதும் இருக்கும் எங்கள் ஊழியர்கள் திறமையும், பாராட்டையும் உடையவர்களாவார்கள். அந்த வகையில் நான் இம்முடிவை எளிதாக எடுக்கவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார். பாப் இகர் சுமார் 15 ஆண்டுகளாக இந்நிறுவனத்தின் சிஇஓவாக பணியாற்றியுள்ளார். இக்காலத்தில்தான் Pixar, Marvel, 21st century Fox போன்றவற்றை டிஸ்னி வாங்கியது. இந்த நடவடிக்கை டிஸ்னியை உலகளாவிய பெரும் நிறுவனமாக வளர்த்தெடுத்தது.

இழப்பு
இப்படி இருக்கையில் கொரோனா தொற்று காலத்தில் இதனுடைய சப்ஸ்கிரைபர்கள் நெட்ஃபிளிக்ஸ் மற்றும் அமேசான் ஆகியவற்றிற்கு மாறியதால் இது மிகப்பெரிய இழப்புகளை சந்தித்தது. நடப்பாண்டின் கடைசி காலாண்டில் டிஸ்னி+ன் சப்ஸ்கிரைபர்கள் இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்துள்ளனர். எனவே இதில் முதலீடு செய்தவர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே டிஸ்னி பெரும் வளர்ச்சியை பெற்றிருந்தது. இதனையடுத்து கடந்த 2020ம் ஆண்டு பாப் இகர் சிஇஓ பொறுப்பிலிருந்து விலகி பாப் சாப்பரிடம் இப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இப்படி இருக்கையில் கொரோனா தொற்று காலத்தில் இதனுடைய சப்ஸ்கிரைபர்கள் நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் ஆகியவற்றிற்கு மாறியதால் இது மிகப்பெரிய இழப்புகளை சந்தித்தது. நடப்பாண்டின் கடைசி காலாண்டில் டிஸ்னி+ன் சப்ஸ்கிரைபர்கள் இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்துள்ளனர். எனவே இதில் முதலீடு செய்தவர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே டிஸ்னி பெரும் வளர்ச்சியை பெற்றிருந்தது. இதனையடுத்து கடந்த 2020ம் ஆண்டு பாப் இகர் சிஇஓ பொறுப்பிலிருந்து விலகி பாப் சாப்பரிடம் இப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

செலவினங்கள்
இவர் பொறுப்பேற்றதிலிருந்து நிறுவனம் நட்டத்தில் இயங்க தொடங்கிவிட்டது. செலவுகளை கட்டுப்படுத்த இவரது தலைமையிலான நிர்வாகம் தவறிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. குறிப்பாக ஐபிஎல் ஏலத்தில் டிஸ்னி மிகப்பெரிய தொகையை இழந்தது. எனவே அவருக்கு பதிலாக பாப் இகரே மீண்டும் சிஇஓவாக பொறுப்பேற்றுக்கொண்டார். ஆனால் இவரும் 21st century Fox-ஐ வாங்குவதற்கு மிகப்பெரிய அளவில் தொகையை செலவு செய்ததாக சக அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். டிஸ்னியின் நிலைமை இவ்வாறு இருக்கையில் இதன் போட்டி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ்-ம் கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இவர் பொறுப்பேற்றதிலிருந்து நிறுவனம் நட்டத்தில் இயங்க தொடங்கிவிட்டது. செலவுகளை கட்டுப்படுத்த இவரது தலைமையிலான நிர்வாகம் தவறிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. குறிப்பாக ஐபிஎல் ஏலத்தில் டிஸ்னி மிகப்பெரிய தொகையை இழந்தது. எனவே அவருக்கு பதிலாக மீண்டும் பாப் இகரே மீண்டும் சிஇஓவாக பொறுப்பேற்றுக்கொண்டார். ஆனால் இவரும் 21st century Fox-ஐ வாங்குவதற்கு மிகப்பெரிய அளவில் தொகையை செலவு செய்ததாக சக அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். டிஸ்னியின் நிலைமை இவ்வாறு இருக்கையில் இதன் போட்டி நிறுவனமான நெட்ஃபிக்ஸ்-ம் கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது.

நெட்ஃபிளிக்ஸ்
என்னதான் புதுப்படங்கள் ஓடிடி தளங்களில் இறங்கினாலும் ஒரு படத்தை பார்க்க யாரும் ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்ய தயாராக இல்லை. எனவேதான் பாஸ்வேர்டு ஷேரிங் வசதியை ஓடிடி நிறுவனங்கள் பின்பற்றின. ஆனால் நெட்ஃபிளிக்ஸ் இந்த வசதியை துண்டித்திருக்கிறது. கனடா, நியூசிலாந்து, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பாஸ்வேர்டு பகிரும் வசதியை நெட்ஃபிளிக்ஸ் நிறுத்தியுள்ளதால் வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications