இந்தியாவிடம் மோதாதீங்க.. ரொம்ப ஆபத்தான முடிவு.. டிரம்பை எச்சரித்த சர்வதேச வல்லுநர்கள் குழு!
நியூயார்க்: இந்தியாவிடம் வைத்துக்கொள்ளாதீர்கள்.. ரொம்ப ஆபத்தான முடிவு.. என்று ஜேபி மோர்கன் சேஸ் & கோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேமி டிமோன் சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எச்சரிக்கை விடுத்தது கவனம் பெற்றுள்ளது. டிரம்ப் இப்போது வரி விதிப்பு எச்சரிக்கைகளை விடும் நிலையில் ஜேபி மோர்கன் சேஸ் & கோ வார்னிங் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ஜே. டிரம்ப், இந்தியா ரஷ்ய கச்சா எண்ணெயை பெருமளவில் வாங்குவதுடன், வாங்கப்பட்ட எண்ணெயின் பெரும்பகுதியை திறந்த சந்தையில் அதிக லாபத்திற்கு விற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "உக்ரைனில் ரஷ்யா நடத்தும் போரால் கொல்லப்படும் மக்கள் குறித்து இந்தியர்களுக்கு கவலையில்லை. இதன் காரணமாக, அமெரிக்காவிற்கு இந்தியா செலுத்தும் வரியை நான் கணிசமாக உயர்த்துவேன்.. ரஷ்யாவிடம் இந்தியா குறைந்த விலைக்கு எண்ணெய் வாங்கி அதை மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்கிறது" என்று எச்சரித்துள்ளார். இதன் மூலம் இந்தியாவின் வெளியுறவுத்துறைக்கு பெரிய அளவில் பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக, இந்திய வரலாற்றில் இல்லாத அளவிற்கு மிக மோசமான சரிவை இருநாட்டு உறவு எட்டி உள்ளது.
இந்தியாவின் பல பொருட்களுக்கு 25% வரை வர்த்தக வரி விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஆகஸ்ட் 7 முதல் இந்தியாவுக்கு 25% இறக்குமதி வரி விதிக்கப்படும் என்றும், ரஷ்யாவிடமிருந்து எரிசக்தி மற்றும் ஆயுதங்கள் வாங்கும் இந்தியாவிற்கு கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இது, ஏப்ரம் 2 அன்று ட்ரம்ப் அறிவித்த 26% வரியை விட 1% குறைவாகும்.
ட்ரம்ப், தனது 'ட்ரூத் சோஷியல்' பதிவில், "இந்தியா நமது நண்பராக இருந்தாலும், அவர்களின் வர்த்தகக் கொள்கைகள் மிகவும் கடுமையானவை. உலகிலேயே மிக உயர்ந்த வரிகளை விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. மேலும், ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் செயல்களைக் கண்டிக்கும் இந்த நேரத்தில், இந்தியா ரஷ்யாவிடமிருந்து எரிசக்தி மற்றும் ராணுவ தளவாடங்களை அதிகம் வாங்குவது நல்லதல்ல. எனவே, ஆகஸ்ட் 7 முதல் இந்தியா 25% வரி மற்றும் அதற்கான அபராதத்தை செலுத்த நேரிடும்," என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஜேபி மோர்கன் சேஸ் & கோ டிரம்பிற்கு எச்சரிக்கை
இந்த நிலையில்தான் ஜேபி மோர்கன் சேஸ் & கோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேமி டிமோன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த வரி முடிவுகளை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவர் தொடங்கி உள்ள வர்த்தக போர் பணவீக்கத்தைத் தூண்டி, உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்காவை மந்தநிலைக்கு கேட்ஸ் செல்லும் என்று எச்சரித்துள்ளார்.
முக்கியமாக இந்தியா போன்ற நாடுகளைஅமெரிக்கா பகைக்க கூடாது. தங்களுக்கு இணங்குமாறு கேட்காமல்.. இந்தியா போன்ற நாடுகளுடன் அமெரிக்கா இணங்கி சென்று.. அவர்களுடன் நெருக்கமான வர்த்தக உறவுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்தியா போன்ற நாடுகள் அணிசேரா நாடுகள். அவை உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன . டிரம்ப் அறிமுகம் செய்த சமீபத்திய கட்டணங்கள் பணவீக்கத்தை அதிகரிக்கும். உலக அளவில் நிலையற்ற தன்மை ஏற்படும். இது போன்ற நேரத்தில் இந்தியா போன்ற அணிசேரா நாடுகளுடன் டிரம்ப் நட்பையே கடைபிடிக்க வேண்டும், என்று கூறி உள்ளார்.
இந்தியா - டிரம்ப் மோதல்: எச்சரிக்கை
அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கையால் இந்த வருடம் அமெரிக்காவில் recession தொடங்கும் என்று ஜேபி மோர்கன் கணித்துள்ளது. ஜே.பி. மோர்கன் 2025 ஆம் ஆண்டில் அமெரிக்க மந்தநிலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்து முதல் பெரிய வோல் ஸ்ட்ரீட் நிறுவனமாக மாறியுள்ளது. ஜனாதிபதி டிரம்பின் புதிய வரி கட்டணங்கள் காரணமாக அமெரிக்கா பெரிய இழப்புகளை சந்திக்கும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
அமெரிக்க மார்க்கெட் தினம் தினம் சரியும் நிலையில்.. உலக பொருளாதாரம் அழிய போகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்க கருவூலத்துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் அமெரிக்க மற்றும் உலக மார்க்கெட் சரிவு குறித்து முக்கியமான தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளார். உலக மார்க்கெட் தினம் தினம் கடுமையாக சரிந்து வரும் நிலையில் அவர் வெளியிட்டு உள்ள தகவல் பலரின் புருவங்களை உயர்த்தி உள்ளது.
அமெரிக்க பங்குச்சந்தை தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று அமெரிக்காவின் டாப் நிறுவனங்கள் உள்ள எஸ்பி 500 பங்குகள் 10% சரிந்து உள்ளது. இதை மார்க்கெட் Market Correction என்று அழைப்பார்கள். இப்படியே போனால் அடுத்து Bear Market ஏற்படும். அதாவது 20% சரிவு ஏற்படும். அது நீடித்தால் Market Crash அதாவது மார்க்கெட் வீழும். அதை தொடர்ந்து recession, depression எனப்படும் மிகப்பெரிய அளவிலான பொருளாதார சரிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அமெரிக்க பங்கு சந்தை விழுந்தால் அதை தொடர்ந்து இந்திய, இங்கிலாந்து போன்ற பங்குசந்தையும் கடுமையாக வீழ்ச்சி அடையும்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடங்கி உள்ள வர்த்தக போர் காரணமாக உலக அளவில் பங்குச்சந்தைகள் சரிய தொடங்கி உள்ளன. அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கையால் இந்த வருடம் அமெரிக்காவில் recession தொடங்கும் என்று ஜேபி மோர்கன் கணித்துள்ளது.












Click it and Unblock the Notifications