Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மினி லேப் டெஸ்ட்டான ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10! உடல்நலனை காக்க இத்தனை விஷயங்களா? ஈசிஜியும் எடுக்கலாமே!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: வரும் செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி விற்பனைக்கு வரும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 இல் உடல்நலனுக்கு தேவையான அத்தனை அம்சங்கள் ஒரு சேர இருக்கிறது. இதை மினி லேப் டெஸ்ட் மையம் என்றே சொல்லலாம். ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் கை கடிகாரம் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் விற்பனைக்கு வருகிறது.

இந்த நிறுவனத்தின் தலைவர் டிம் குக் ஆவார். இந்த கடிகாரத்தில் துல்லியமாக நேரம் காட்டுவதுடன் உடல் நலனை காக்கும் அம்சங்களும் இதில் நிறைந்திருப்பதால் பெரும்பாலான மக்கள் இதை வாங்கி பயன்படுத்துகிறார்கள்.

apple apple watch series 10 10

இந்த வாட்ச்சின் முதல் சீரிஸ் 2015 இல் வெளியானது. இதுவரை ஆண்டுக்கு ஒன்று என 9 சீரிஸ்கள் வெளியான நிலையில் தற்போது வரும் 20ஆம் தேதி 10ஆவது சீரிஸ் வெளியாகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, 100 மில்லியன் வாட்ச்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபாட், வாட்ச், ஏர்பாட்ஸ் ஆகியவற்றின் விலை அதிகமாக இருந்தாலும் தரம் நன்றாக இருக்கும் என்பதால் வசதிப்படைத்தவர்கள், இருக்கப்பட்டவர்களின் சாய்ஸ் ஆப்பிள்தான்! இப்படிப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 16 , வாட்ச் சீரிஸ் 10 உள்ளிட்டவை நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த ஸ்மார்ட்வாட்ச் 2 வகையான உலோகங்களில் உங்கள் கைகளுக்கு ஏற்றவாறு 2 வகையான அளவுகளில் அறிமுகமாகியுள்ளது. அலுமினியம், டைட்டானியம் என இரு வகை உலோகங்களில் இந்த ஸ்மார்ட் வாட்ச் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் அலுமினியத்தால் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட் வாட்ச் சில்வர், ரோஸ் கோல்டு, ஜெட் பிளாக் ஆகிய 3 நிறங்களில் கிடைக்கும்.

டைட்டானியத்தில் தயாரிக்கப்பட்ட வாட்ச்கள் வேண்டும் என்றால் அவற்றிலும் நேச்சுரல், கோல்டு, சிலேட் என 3 வண்ணங்களில் விற்பனைக்கு வரவுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் வாட்ச் 42 மி.மீ., 46 மி.மீ. என்ற இரு அளவுகளில் கிடைக்கிறது. இதற்கான முன்பதிவு தொடங்கிவிட்டது.

அலுமினியத்தால் ஆன வாட்ச்சின் ஆரம்ப விலை ரூ 46,900 ஆகும். அது போல் டைட்டானியம் என்றால் விலை கூட! அதாவது 79 ஆயிரத்திற்கு , 80 ஆயிரத்திற்கு 100 ரூபாய் குறைவு என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த வாட்ச்சில் உடல் எடையை குறைப்பதற்கான ஃபிட்னஸ் டிராக்கர் உள்ளிட்டவை இருக்கின்றன.

இதில் எலக்ட்ரிக்கல் ஹார்ட் சென்சார், ஆப்டிக்கல் ஹார்ட் சென்சார், வெப்பநிலை சென்சார், ரத்தத்தல் உள்ள ஆக்ஸிஜன் அளவை அளக்கும் சென்சார் என பல சென்சார்கள் உள்ளன. இதன் மூலம் சுகர் லெவல், பல்ஸ், ஈசிஜி உள்ளிட்டவைகளை மருத்துவமனைகளுக்கும் பரிசோதனை கூடங்களுக்கும் செல்லாமல் ஒரு பைசா செலவில்லாமல் சோதனை செய்து கொள்ளலாம்.

நீங்கள் வாக்கிங், சைக்கிளிங், ஜாக்கிங் என செல்லும் போது இதயத்தின் துடிப்பு குறைந்தாலோ வழக்கத்தை காட்டிலும் கூடினாலோ உடனடியாக எச்சரிக்கை ஒலி எழுப்பப்படும். இது கர்ப்பிணிகளுக்கும் இணை நோய் உள்ளவர்களுக்கும் பயனுள்ளது.

அதாவது கர்ப்பிணிகள் வாக்கிங் செல்லும் போது பல்ஸ் குறைந்தால் உடனே இந்த வாட்ச் அலாரம் அடித்து எச்சரிக்கை செய்யும். இதனால் அவர்கள் நடையை நிறுத்துவதோ இல்லை வேகத்தை குறைப்பதோ செய்யலாம். இந்த வாட்ச்சை ஒரு முறை சார்ஜ் செய்தால் 18 மணி நேரம் பயன்படுத்தலாம். 30 நிமிடங்களில் 80 சதவீதம் வேகமாக சார்ஜ் செய்யலாம்.

இந்த ஸ்மார்ட் வாட்ச்சில் ஏராளமான உடற்பயிற்சிகள் உள்ளன. இதை செட் செய்துவிட்டு உடல் எடையை கோப்பாக வைத்துக் கொள்ளலாம். அது போல் வாகனங்கள் விபத்தில் சிக்கினாலோ இல்லை அந்த வாட்ச்சை கட்டியிருந்தவர்கள் எங்காவது தவறி விழுந்தாலோ உடனே உங்களின் அன்பானவர்களுக்கு எச்சரிக்கை செய்தி போய்விடும்.

இது போல் ஆப்பிள் வாட்ச்சின் உதவியுடன் பலர் இக்கட்டான சூழல்களில் இருந்து உதவிகளை பெற்றுள்ளனர். இந்த 10ஆவது சீரிஸில் மற்ற சீரிஸை காட்டிலும் 30 சதவீதம் அதிகமாக திரை இருக்கும். இந்த வாட்ச் மிகவும் மெல்லியதாகும். அதாவது 9.7 மி.மீ. தடிமன்தான் இருக்கும். கிட்டத்தட்ட 9 ஆவது சீரிஸை விட 10 சதவீதம் மெல்லியது. வாட்டர் ப்ரூப் வசதி உள்ளது. இதனால் நீச்சல் அடிக்கும் பயிற்சியையும் செய்து உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ளலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+