ஈரானை தாக்கிய அடுத்த நொடியே.. அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்த காரியம்.. கேட்டா ஆடிப்போய்டுவீங்க!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ஈரானை தாக்கிய அடுத்த நொடி அந்த தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. நெதன்யாகுவுடன் நீண்ட நேரம் டிரம்ப் போனில் உரையாடியதாக கூறப்படுகிறது.. அமெரிக்கா ஈரான் மீது நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, டெஹ்ரானின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

Israel Iran

ஈரான் - இஸ்ரேல் போரில் அமெரிக்காவின் தலையீடு

அமெரிக்காவின் இந்த தாக்குதல் உலகப்போராக உருவெடுக்கும். அமெரிக்கா தளவாடங்கள் மீது தாக்குதல் நடத்தலாம். இது ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான உறவிலும், போர் சூழலிலும் ஒரு முக்கியமான தருணமாக அமைந்துள்ளது. மேலும் அமெரிக்கப் பாதுகாப்பிற்கு இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இப்பகுதியில் சுமார் 40,000 அமெரிக்க வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் உச்சக்கட்ட எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள்.

மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் பதிலடி தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க உளவுத்துறை மதிப்பீடுகளை அறிந்த அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர். டிரம்ப் 8 அடி பாய்ந்தால் நாங்கள் 16 அடி பாய்வோம் என்று ஈரான் நாட்டின் தலைவர் அயோத்துல்லா அலி காமெனி நிரூபிக்கும் விதமாக.. அமெரிக்காவின் தளவாடங்களை தாக்குவோம் என்று ஈரான் தெரிவித்து உள்ளது.

அமெரிக்க ராணுவ தளவாடங்களை தாக்குவதற்காக.. குறைந்த மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகள் உட்பட ஆயுதங்களை ஈரான் தயார் நிலையில் வைத்துள்ளது. இதனால் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் உலகப் போராக தீவிரமடையக்கூடும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், ஈரானின் முக்கியமான உள்கட்டமைப்பான ஃபோர்டோ அணு ஆலையை அமெரிக்கா தாக்கினால், ஈரான் மற்றும் அதன் பிராந்திய நட்பு விரைவான மற்றும் வலுவான பதிலடி கொடுக்கக்கூடும்.. நாம் தாக்கினால் அவர்கள் உடனடியாக அமெரிக்க தளவாடங்களை தாக்குவார்கள்.. இதனால் நிலைமை கைமீறும் என்று எச்சரித்துள்ளனர். இப்போது அமெரிக்கா தாக்கிவிட்டதால் அடுத்த கட்டமாக ஈரான் தாக்குதல் நடத்தும் வாய்ப்புகள் உள்ளன.

ஹவுதி படைகள்

அமெரிக்கா ஈரானில் இராணுவ ரீதியாக ஈடுபட்டால், செங்கடலில் உள்ள அமெரிக்க கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் ஆதரவு ஹவுதி படைகள் நேற்று எச்சரித்திருந்தன. இப்பொழுது அமெரிக்க மற்றும் இராணுவ சொத்துக்களுக்கு எதிராக ஈரான் பதிலடி கொடுக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. மேலும் இஸ்ரேலை ஈரான் எவ்வாறு பழிவாங்கும் என்ற பயமும் உள்ளது.

அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பிறகு டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் பேசியதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் அமெரிக்காவின் ஈரான் அணு ஆயுத தளங்கள் மீதான தாக்குதலுக்குப் பிறகு பேசினார்கள் என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தாக்குதல்கள் நடத்துவதற்கு முன்பு அமெரிக்கா இஸ்ரேலுக்கு தகவல் கொடுத்ததாக வெள்ளை மாளிகை வட்டாரம் தெரிவித்துள்ளது. ஆனால் ஈரானிடம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் GBU-57A Massive Ordnance Penetrator எனப்படும் "பங்கர் பஸ்டர்" வெடிகுண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதை உறுதிப்படுத்தினர். ஒவ்வொரு அணு இலக்குகளுக்கும் இரண்டு குண்டுகள் வீதம் பயன்படுத்தப்பட்டன.

நேற்று மாலையே அமெரிக்கா 3-4 B-2 stealth bombers விமானங்களை ஈரான் நோக்கி அனுப்பியது. குண்டுகளுடன் சென்ற இந்த விமானம் நடுவழியில் எரிபொருள் நிரப்பியது. அப்போதே இரவு தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஈரானின் ஃபோர்டோ மீது பங்கர் பாஸ்டர் எனப்படும் பதுங்கு குழி வெடிகுண்டுகளை வீசி அதை முற்றிலுமாக அழித்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது பி 2 ஸ்டெல்த் வெடிகுண்டு விமானங்கள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. மற்ற இரண்டு முக்கிய அணுசக்தி தளங்களான நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகியவை அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவப்பட்ட 30 டோமாஹாக் ஏவுகணைகளால் அழிக்கப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+