"பறக்கும் அரண்மனை".. டிரம்புக்கு சொகுசு விமானத்தை பரிசளிக்கும் கத்தார்? வசதியை பாருங்க!
நியூயார்க்: அமெரிக்க அதிபராக உள்ள டொனால்ட் டிரம்பிற்கு கத்தார் சார்பில் 400 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆடம்பர விமானம் பரிசளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விமானத்தை பெறுவதில் டொனால்ட் டிரம்ப் ஆர்வம் காட்டி வரும் நிலையில் அதில் உள்ள சிறப்பு வசதிகள் குறித்த ஆச்சரியமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்க அதிபராக 2வது முறையாக டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் விரைவில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தான் கத்தார் சார்பில் டொனால்ட் டிரம்புக்கும் ஆடம்பர விமானம் பரிசளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விமானத்தின் பெயர் போயிங் 747-8 ஆகும். இது நவீன மற்றும் சொகுசு வசதி கொண்ட பிரைவேட் ஜெட்டாக உள்ளது. கத்தாரில் உள்ள மன்னர் குடும்பத்தினர் இதனை பயன்படுத்தினர். அதன்பிறகு துருக்கி அரசுக்கு வழங்கப்பட்ட நிலையில் இப்போது டொனால்ட் டிரம்புக்கு பரிசளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனை பெறுவதில் முதலில் டொனால்ட் டிரம்ப் தயக்கம் காட்டினார். இந்த விமானத்தை பெறுவதால் ஊழல், முறைகேடு, கத்தாருக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி கொடுத்தல் உள்ளிட்ட பிரச்சனைகளில் சிக்கலாம் என்று அவர் நினைத்தார். ஆனால் தற்போது டொனால்ட் டிரம்ப் மனம் மாறி உள்ளார். தனக்கு கத்தார் வழங்கும் போயிங் சொகுசு விமானத்தை பெற முடிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் வலைதள பக்கத்தில், ‛‛அமெரிக்காவில் 40 ஆண்டு பழமையான ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்திற்குப் பதிலாக, தற்காலிகமாகவும், மிகவும் பொதுவான அதேவேளையில் வெளிப்படைத்தன்மையுடன் பாதுகாப்புத்துறை 747 விமானத்தை இலவச பரிசாக பெறுகிறது. அதிக டாலர் மதிப்புடைய விமானம் என்பதால் ஜனநாயக கட்சியினர் விமர்சனம் செய்கின்றனர்'' என்று கூறினார். இதன்மூலம் போயிங் விமானத்தை டொனால்ட் டிரம்ப் பெற தயாராகி விட்டார் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
அதாவது இந்த விமானத்தை பெற எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சியின் செனட்டர் ஆடம் ஷிஃப், "சராசரி அமெரிக்கர்களுக்கு விமானப் பயணச் செலவு தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், டொனால்டு டிரம்ப் அரை பில்லியன் டாலர் மதிப்புள்ள 'பறக்கும் அரண்மனை'யைப் பரிசாகப் பெறுகிறார். டிரம்பின் ஊழல் அவரை பணக்காரராக்குகிறது. நீங்கள் (மக்கள்) ஏழையாகிறீர்கள்." என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, தற்போது டொனால்ட் டிரம்ப் வெளிநாடுகளுக்கு ஏர் போர்ஸ் ஒன் என்ற சொகுசு விமானத்தை பயன்படுத்தி வருகிறார். இந்த விமானங்கள் 40 ஆண்டுகளாக அமெரிக்க அதிபர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மிகவும் பாதுகாப்பான அம்சங்களை கொண்ட விமானம் பழமையானதாக உள்ளதால் அதனை மாற்றவும் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளதை தனது வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.
அதன்படி கத்தார் விமானம் கைக்கு வந்தவுடன் ஏர் போர்ஸ் ஒன் சொகுசு விமானத்துக்கு பதில் டொனால்ட் டிரம்ப் இந்த போயிங் விமானத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து விலகும்போது இந்த விமானத்தை அதிபரின் நூலகத்துக்கு வழங்கவும் அவர் முடிவு செய்துள்ளார்.
இந்த போயிங் 747-8 என்பது பறக்கும் பேலஸ் அதாவது பறக்கும் அரண்மனை என்று அழைக்கப்படுகிறது. அதாவது அரண்மனைக்கு நிகராக இந்த விமானத்தில் பல சொகுசு வசதிகள் உள்ளதால் இந்த பெயரை வைத்து அழைக்கப்படுகிறது. இந்த விமானத்தில் கழிவறை, குளியலறை, பிரைவேட் பெட்ரூம் உள்ளது. அதுமட்டுமின்றி விமானத்தின் படிக்கட்டு மற்றும் விமானத்தின் உள்புற தோற்றம் என்பது ராயல் லூக்கில் இருக்கும்.
முன்னதாக கடந்த 2018 ம் ஆண்டில் 2 போயிங் விமானங்கள் தயாரிக்க டொனால்ட் டிரம்ப் தனது முதல் அதிபர் பதவிக்காலத்தில் ஆர்டர் செய்தார். ஆனால் அதன் தயாரிப்பு பணிகள் என்பது தாமதமாகி வருகின்றன.
வரும் 2029ம் ஆண்டில் தான் இந்த விமானங்கள் வழங்கப்படும் நிலை உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் டொனால்ட் டிரம்ப் போயிங் விமானத்தை ஆய்வு செய்துள்ளார். அதன் வடிவமைப்பு மற்றும் உள்கட்டமைப்பை பார்த்து அவர் வியந்ததாக தகவல்கள் வெளியான நிலையில் கத்தாரிடம் இருந்து இந்த விமானத்தை டொனால்ட் டிரம்ப் பரிசாக பெற உள்ளார்.
இருப்பினும் இந்த விஷயம் கத்தார் தரப்பில் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இதுதொடர்பாக கத்தார் - அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. விரைவில் கத்தாருக்கு டொனால்ட் டிரம்ப் செல்ல உள்ள நிலையில் அதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்பது வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன.
-
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
ஈரானின் உச்ச தலைவராக.. என்னை பொறுப்பேற்க சொன்னார்கள்! நான்தான் வேண்டாம் என சொல்லிட்டேன் - டிரம்ப் -
லாட் டவுன் வந்துருச்சு..கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கும் உலக நாடுகள்! பெட்ரோல், டீசலால் ஒர்க் ஃப்ரம் ஹோம் -
Iran: அமெரிக்காவின் F18 போர் விமானத்தை குருவியை சுடுவது போல சுட்டு வீழ்த்திய ஈரான் ராணுவம்.. வீடியோ! -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
"நீங்க சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.." கண்டிஷன் போட்ட அமெரிக்கா.. திட்டவட்டமாக நிராகரித்த ஈரான்! -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
அமெரிக்காவின் அஸ்திவாரமே ஆடிடுமே.. "போரை முடிவுக்கு கொண்டு வர ரெடி.." ஈரான் போட்ட 7 கண்டிஷன்கள் -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது?












Click it and Unblock the Notifications