ட்ரம்பின் முன்னாள் மனைவி இவானா காலமானார்.. சுயநினைவின்றி விழுந்து கிடந்தாரா.. கிளம்பியது மர்மம்
ட்ரம்பின் முதல் மனைவி இவானா காலமானார், அவருக்கு வயது 73 ஆகிறது
நியூயார்க்: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் முதல் மனைவி இவானா காலமானார்.. அவருக்கு வயது 73.
இவானா ட்ரம்ப் தம்பதிகள் ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தனர்.. கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் 2 பேரும் பிரிந்துவிட்டனர்.. 1992ம் ஆண்டு ட்ரம்பிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து சென்றார்..
இவர் நியூயார்கில் உள்ள தன்னுடைய இல்லத்தில் வசித்து வந்தார்... நேற்றைய தினம் நியூயார்க் நகர போலீசாருக்கு ஒரு அவசர போன் வந்துள்ளது..

சந்தேக மரணம்
அதனால், போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்த போது, அங்கு இவானா சுயநினைவின்றி விழுந்து கிடந்துள்ளதை கண்டுள்ளனர். இதையடுத்து, அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தபோது அவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர்.. இவானா மரணத்தை நியூயார்க் நகர போலீசார் அறிவித்தனர். எனினும், இவானாவின் மரணத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை என்கிறார்கள் போலீசார்..

போஸ்ட் மார்ட்டம்
இப்போதைக்கு அவரது சடலம் போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.. அந்த ரிப்போர்ட் வந்தால்தான், அவரது இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் செக்கோஸ்லோவாக்கியாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியின் கீழ் வளர்ந்த ஒரு மாடல் பெண்தான் இவானா.. 1977-ல் டிரம்பை திருமணம் செய்துள்ளார். இவானா - டிரம்புக்கு 3 குழந்தைகள் உள்ளனர்..

பிசினஸ்
80களில் நியூயார்க்கின் மிக உயர்ந்த ஜோடிகளில் இவர்களும் ஒருவராக திகழ்ந்தனர்.. அந்த காலத்திலேயே, டொனால்ட் டிரம்பின் சொத்து வணிகம் உயர்ந்ததால், அவர்களின் அதிகாரமும் பிரபலமும் வளர ஆரம்பித்துவிட்டது.. ஆரம்ப கட்டத்தில் இருந்தே டிரம்ப்பின் பிசினஸ் விஷயத்தையும் இவானா திறம்பட செயலாற்றி வந்துள்ளார். இவானா டிரம்ப் நியூயார்க் நகரில் உள்ள அவரது வீட்டில் காலமானார் என்று டொனால்ட் ட்ரம்ப்பும் தன்னுடைய சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்..

நிம்மதி
"அவர் ஒரு அற்புதமான, அழகான மற்றும் அற்புதமான பெண், அவர் ஒரு சிறந்த மற்றும் உத்வேகமான வாழ்க்கையை நடத்தினார்.. அவளுடைய பெருமையும் மகிழ்ச்சியும் அவளது மூன்று குழந்தைகள், டொனால்ட் ஜூனியர், இவான்கா மற்றும் எரிக். நாங்கள் அனைவரும் அவளைப் பற்றி மிகவும் பெருமைப்படுவதைப் போல, அவள் அவர்களைப் பற்றி மிகவும் பெருமையாக இருந்தாள். இவானா நிம்மதியாக இரு!" என்று டிரம்ப் தன்னுடைய முன்னாள் மனைவியை நினைவுகூர்ந்துள்ளார். .
-
14 பாயின்ட்.. மொத்த போரும் முடிவுக்கு வந்தது.. கதவை திறங்க, கப்பல் கிளம்பட்டும்! -
நெதன்யாகு சாயம் வெளுத்தது.. ஈரான் நினைத்தால் இஸ்ரேல் 2 மணிநேரத்தில் காலி.. டிரம்ப் பேச்சால் ஷாக்! -
$300 பில்லியன் கொடுக்க முடியாது.. டிரம்ப் திட்டவட்டம்! ஈரான் முடிவு என்ன? அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? -
ஈரான் போரில் யாருக்கு வெற்றி..? குண்டை தூக்கிப்போட்ட இஸ்ரேல்..! குழப்பத்தில் டிரம்ப்! -
ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம்.. அதிர்ச்சியில் இஸ்ரேல்! எதிர்ப்பது ஏன்? பின்னணி -
மீண்டும் குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. டிரம்புக்கு தலைவலியாக மாறிய பெஞ்சமின் நெதன்யாகு! -
இஸ்ரேலை கழற்றிவிட நேரம் வந்தாச்சு.. டிரம்ப் எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. நெதன்யாகு ஷாக்! -
ஈரானை நம்புவது ஆபத்து.. டிரம்ப் டீமிற்குள்ளேயே வந்த எதிர்ப்பு.. "அவரே" சொல்லிட்டாராம்! பதற்றம் -
ஈரானுடன் ராசியான டிரம்ப்.. ஏன் இந்த திடீர் மனமாற்றம்..? அமெரிக்காவில் வெடித்த பூகம்பம்! இதுதான் உண்மை! -
டிரம்ப்-ன் 80வது பிறந்தநாள்.. சண்டையில் துவங்கி சண்டையில் முடிந்தது.. எப்படி? -
பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன குட் நியூஸ் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்!












Click it and Unblock the Notifications