வார்த்தையை விடாதீங்க.. புடினுக்காக பிடனை "கண்டிக்கும்" பிரான்ஸ் அதிபர் மேக்ரூன்.. எதிர்பாராத மோதல்!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ரஷ்ய அதிபர் புடினை கடுமையாக விமர்சித்த அமெரிக்க அதிபர் பிடனை பிரான்ஸ் அதிபர் மேக்ரூன் கண்டித்து இருக்கிறார். நேரடியாக பிடன் பெயரை மேக்ரூன் சொல்லவில்லை என்றாலும் மறைமுகமாக கண்டிப்பு காட்டி இருக்கிறார்.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடந்து வருகிறது. போர் செல்ல செல்ல ரஷ்யா அமெரிக்கா இடையிலான மோதல், விரிசல் பெரிதாகிக்கொண்டே செல்கிறது.

ஏற்கனவே ரஷ்யா மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்து உள்ளது. இப்போது ரஷ்ய அதிபர் புடினை அமெரிக்கா கடுமையான வார்த்தைகள் மூலம் விமர்சனம் செய்து வருகிறது.

மேற்கு உலக தலைவர்கள்

மேற்கு உலக தலைவர்கள்

ஏற்கனவே மேற்கு உலக தலைவர்கள், அமெரிக்க சிஐஏ அதிகாரிகள், மேற்கு உலக ஊடகங்கள் பல புடினை மோசமாக சித்தரித்து வருகின்றன. புடினுக்கு மன ரீதியாக பிரச்சனை உள்ளது. அவர் உடல்நிலை சரியில்லை. அவர் கோபத்தில் இருக்கிறார். இதனால் அவர் தவறான முடிவுகளை எடுக்கிறார் என்று கிட்டத்தட்ட புடினை மனநலம் பாதிக்கப்பட்டவர் போல மேற்கு உலக நாடுகள் சித்தரித்து வருகின்றன. இதெல்லாம் போக நேற்று முதல்நாள் அமெரிக்க அதிபர் பிடனும் புடினை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார்.

பிடன் புடின் விமர்சனம்

பிடன் புடின் விமர்சனம்

அதிபர் பிடன் போலந்து கூட்டம் ஒன்றில் பேசிய போது, நேட்டோவில் சிறிய கல்லை கூட நகர்த்த வேண்டும் என்று ரஷ்யா நினைக்க கூடாது. நேட்டோ படையின் ஒரு பிடி மண்ணை கூட ரஷ்யாவால் பிடிக்க முடியாது. இந்த போரில் ஏற்கனவே ரஷ்யா தோல்வி அடைந்துவிட்டது. திட்டமிடல் ரீதியாக இந்த போர் ரஷ்யாவிற்கு தோல்வியை மட்டுமே கொடுத்துள்ளது. ரஷ்ய மக்கள் எங்களின் எதிரிகள் கிடையாது. ஆனால் கடவுளே புடின் இனியும் அதிகாரத்தில் இருக்க கூடாது.

அதிகாரம் கூடாது

அதிகாரம் கூடாது

நாங்கள் உக்ரைன் மக்களுடன் இருக்கிறோம். புடின் ஒரு கொலைகார கசாப்பு கடைக்காரர் போல செயல்படுகிறார் என்று பிடன் விமர்சனம் செய்து இருந்தார். இது பெரிய சர்ச்சையானது . இதற்கு வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அதில், ரஷ்யாவில் ஆட்சி மாற்றம், அதிகார மாற்றம் ஏற்பட வேண்டும் என்று பிடன் பேசவில்லை. புடின் மற்ற நாடுகளின் மீது அதிகாரத்தை செலுத்த கூடாது என்று பொருள்படும் வகையில் மட்டுமே அப்படி பேசினார், என்றுகூறியது . ஆனால் ஆனால் பிடனின் கசாப்பு கடைக்காரர் விமர்சனத்திற்கு வெள்ளை மாளிகை விளக்கம் தரவில்லை.

பிரான்ஸ் அதிபர்

பிரான்ஸ் அதிபர்

இந்த நிலையில் பிடனின் இந்த பேச்சை பிரான்ஸ் அதிபர் மேக்ரூன் மறைமுகமாக கண்டித்து உள்ளார். அதில், மேற்கு உலக நாடுகள் இந்த போரில் கவனமாக இருக்க வேண்டும். உண்மைகளை மட்டுமே மேற்கு உலகம் எடுத்துரைக்க வேண்டும். நாம் செய்யும் எந்த செயலும், போரை கைமீறி செல்ல வைத்துவிட கூடாது. எதுவும் நம் கையை மீறி சென்றுவிட கூடாது. முதலில் போரை நிறுத்த வேண்டும்.

கண்டிப்பு

கண்டிப்பு

பின்னர் ரஷ்ய படைகள் வெளியேற வேண்டும். பின்னர் ராஜாங்க ரீதியான ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும். அதை செய்ய வேண்டும் என்றால் நாம் வார்த்தைகளை விட கூடாது. நம் வார்த்தைகள் மூலமும், செயலின் மூலமும் விவகாரத்தை மோசமாக கூடாது என்று மேக்ரூன் கண்டித்துள்ளார். பிடனின் கடுமையான பேச்சை விமர்சிக்கும் விதமாக மேக்ரூன் இப்படி பேசி உள்ளார்.

பிரான்ஸ் கோபம்

பிரான்ஸ் கோபம்

பிரான்ஸ் ஊடகங்களும் அதிபர் பிடன் பேச்சை விமர்சனம் செய்து இருக்கின்றன. இதனால் பிரான்ஸ் அமெரிக்கா இடையே லேசான மோதல் ஏற்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் புடின் உடன் அடிக்கடி பேச்சுவார்த்தை நடத்தி வருவது மேக்ரூன்தான். இவர்தான் இந்த போரை நிறுத்த தீவிரமாக முயன்று வருகிறார். இன்றும் கூட புடின் உடன் மேக்ரூன் பேச இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில்தான் பிடனை மேக்ரூன் கண்டித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+