நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ப்பா சிலிர்ப்பு.. சர்வதேச விண்வெளி மையத்தில் பறந்த இந்திய தேசியக்கொடி.. பெருமைமிகு தருணம்! எப்படி?

Google Oneindia Tamil News

நியூயார்க்: இந்தியா தனது 76வது சுதந்திர தினத்தை வெகு கோலாகலமாக கொண்டாடி வருகிறது. இந்நிலையில், இந்திய வம்சாவளியான அமெரிக்காவின் ராஜா சாரி, விண்வெளி மையத்தில் இந்திய நாட்டின் தேசியக் கொடியை பறக்கவிட்டு அதை புகைப்படம் எடுத்து பகிர்ந்துள்ளார்.

சர்வதேச விண்வெளி மையத்தில் ஆறு மாதங்கள் பணியை முடித்துவிட்டு கடந்த மே மாதம்தான் சாரி உட்பட நான்கு விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பினர்.

From Deep Sea to Space - The National Flag flew at the International Space Station

இந்நிலையில், தான் விண்வெளியில் இருக்கும் போது எடுத்த படத்தை தற்போது டிவிட்டரில் பதிவிட்டு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார் சாரி.

நாடு முழுவதும் மக்கள் 76வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர். இன்று காலை மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர் டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றிய பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது இந்த சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட அனைவரின் வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்கிற தனது வேண்டுகோளை ஏற்று மக்கள் வீடுகளில் கொடி ஏற்றியுள்ளது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.

இந்நிலையில் வீடுகளில் மட்டுமல்லாது தற்போது விண்வெளியிலும் தேசியக் கொடி பட்டொளி வீசி பறக்கும் புகைப்படத்தை இந்திய வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீரர் ராஜாசாரி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் அனைவராலும் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த டிவிட்டில், "சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து எனது தந்தையின் ஊரான ஹைதராபாத் பிரகாசமாக ஜொலிப்பதை என்னால் பார்க்க முடிந்தது. இதை பார்க்கும்போது புலம்பெயர் மக்களை நினைவுபடுத்திக்கொள்கிறேன்" என கூறியுள்ளார்.

மேலும், "இந்திய அமெரிக்கர்கள் ஒவ்வொருநாளும் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும் ஓர் இடம்தான் நாசா" என்றும் பெருமையுடன் கூறியுள்ளார். அமெரிக்காவின் விஸ்கான்சினில் உள்ள மில்வாக்கியில் பிறந்த சாரி, அயோவாவின் வாட்டர்லூவில் உள்ள கொலம்பஸ் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். பின்னர் கொலராடோவில் உள்ள அமெரிக்க விமானப்படை அகாடமியில், விண்வெளிப் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இதனையடுத்து மாசசூசெட்ஸ் கேம்பிரிட்ஜில் உள்ள மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஏரோநாட்டிக்ஸ் மற்றும் ஆஸ்ட்ரோநாட்டிக்ஸில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

Recommended Video

    75-ஆம் ஆண்டு சுதந்திர தின விழா.. தேசியக் கோடியை ஏற்றிய தலைவர்கள் *Tamilnadu | Oneindia Tamil

    அதன் தொடர்ச்சியாக கடந்த 2017ல் விண்வெளி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு ஹோலி ஷாஃப்டர் எனும் மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். தெலுங்கானாவில் உள்ள மகபூப்நகரில் வசிக்கும் சாரியின் தாத்தா, ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் கணித பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சாரியின் தந்தையான ஸ்ரீனிவாஸ் சாரி, அதே பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து பின்னர் அமெரிக்கா சென்று செட்டில் ஆகிவிட்டார்.

    English summary
    (சர்வதேச விண்வெளி மையத்தில் இந்திய தேசியக்கொடி): Independence Day 2022: Astronaut Raja Chari greeted the Indian diaspora in a message posted on his Twitter account.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X