தங்கத்தை இப்பயாவது வாங்குங்க மக்களே! மொத்தமா முடிச்சு விட்ட ட்ரம்ப்.. தட்டுத் தடுமாறும் பொருளாதாரம்!
நியூயார்க்: பல்வேறு உலக நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வர்த்தகப் போரை துவக்கிய நிலையில் அதற்கு பதிலடி கொடுத்தது ஐரோப்பிய யூனியன். தற்போது ஐரோப்பிய யூனியன் மீது பதிலுக்கு பதில் வரிவிதிப்பை விதிப்பதாக டிரம்ப் அறிவித்த நிலையில் உலகப் பொருளாதாரத்தில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. கடந்த 14ஆம் தேதி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3000 டாலர்களை எட்டிய நிலையில் தற்போது 2987.40 டாலராக தொடர்கிறது. வரும் காலங்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என்பதால் தற்போதே தங்கம் வாங்குவது சிறந்தது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து சீனா, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் மீது பதிலுக்கு பதில் வரிவிதிப்பை அமல்படுத்தியுள்ளார். தொடர்ந்து ஐரோப்பிய யூனியனிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு வரிச் சலுகை மார்ச் முதல் வாரத்துடன் முடிவடைந்த நிலையில் பதிலுக்கு பதில் வரிவிதிப்பு அமல்படுத்தப்படும் என டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார்.

எப்போதுமே அமெரிக்காவுடன் இணக்கமாக செல்லும் ஐரோப்பிய யூனியன் இந்த விஷயத்தில் கொந்தளித்துள்ளது. இதனையடுத்து பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்காவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு சுமார் 28 பில்லியன் டாலர் வரி விதிக்கப்படும் என ஐரோப்பிய யூனியன் பதிலடி கொடுத்தது.
இதனால் கோபமடைந்த டிரம்ப் ஐரோப்பிய யூனியனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஷாம்பெய்ன், ஒயின் உள்ளிட்ட மதுபானங்களுக்கு 200% விதிக்கப்படும் என அதிரடியாக அறிவித்தார். மேலும் அமெரிக்காவில் மதுபான தொழிலை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக ட்ரம்ப் கூறி இருந்தார். உள்ளூர் அளவில் இது ட்ரம்புக்கு ஆதரவை பெற்று தந்தாலும் உலக அளவில் பொருளாதாரத்தில் தடுமாற்றத்தை சந்தித்துள்ளது.
அட்லாண்டிக் கடலின் இரு புறங்களிலும் உலகின் பிற பகுதிகளில் இருக்கும் நாடுகளில் மீதும் டொனால்டு டிரம்ப் வர்த்தக போரை துவக்கி இருக்கும் நிலையில் இந்தியா மட்டுமே எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் இருக்கிறது. அதே நேரத்தில் பதிலுக்கு பதில் வரி விதிப்பால் அமெரிக்கா கடுமையான பின் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என சீனா எச்சரித்து இருக்கிறது. இந்த நிலையில் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பீதி காரணமாக அதிகம் பேர் தற்போது தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.
பிற பொருட்களில் முதலீடு செய்தால் வர்த்தக போரால் கடுமையான பாதிப்பை சந்திக்க வேண்டி இருக்கும் என்பதால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து இருக்கிறது. இதனால் இதுவரை வரலாற்றில் இல்லாத அளவு தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. கடந்த 14ஆம் தேதி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3000 டாலர்களை எட்டியது. இந்தியாவில் ஒரு சவரன் அதாவது எட்டு கிராம் என்ற அளவில் தங்கம் விற்பனை செய்யப்படுகிறது.
அமெரிக்காவைப் பொறுத்தவரை அவுன்ஸ் அளவில் தங்கம் விற்பனை ஆகிறது. அதாவது ஒரு அவுன்ஸ் தங்கம் என்றால் அது 28.34 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 3000 டாலர்களாக இருக்கிறது. அதன்படி பார்க்கும்போது இந்திய மதிப்பில் இரண்டு லட்சத்து 60 ஆயிரத்து 568 ரூபாயாக இருக்கிறது.
இன்றைய நிலவரப்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2987.40 டாலராக இருக்கிறது. அதாவது இந்திய மதிப்பில் 2 லட்சத்து 59 ஆயிரத்து 842 ரூபாயாக இருக்கிறது. வரும் காலங்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என்பதால் தற்போது தங்கத்தில் முதலீடு செய்வதும் நகைகளை வாங்கி வைத்துக் கொள்வதும் நல்லது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
-
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
ஈரானை காலி பண்ணாம விடாதீங்க.. டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி பட்டத்து இளவரசர்? ஏன் தெரியுமா? -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
அமெரிக்காவின் அஸ்திவாரமே ஆடிடுமே.. "போரை முடிவுக்கு கொண்டு வர ரெடி.." ஈரான் போட்ட 7 கண்டிஷன்கள் -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை












Click it and Unblock the Notifications