30 வினாடிகள்! ஒரு சாம்ராஜ்யத்தின் சரிவு! மொசாட்டின் மரணப் பொறி! கமேனி கோட்டைக்குள் நுழைந்த ஒற்றர்கள்
டெல் அவிவ்: மார்ச் 1-ம் தேதியான இன்று காலை, ஈரானிய அரசு ஊடகங்கள் அதிகாரப்பூர்வமாக அந்தச் செய்தியை வெளியிட்டன: "ஈரானின் ஆன்மீக மற்றும் அரசியல் தலைவர் அயதுல்லா அலி கமேனி (86) கொல்லப்பட்டார்".. பல ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஈரானின் உச்ச அதிகார மையம், இன்று சிதைந்து போயுள்ளது. இவரின் கொலை எப்படி நடந்தது? 30 வினாடியில் இஸ்ரேல் அமெரிக்கா எடுத்த முடிவு உலக அரசியலையே மாற்றி உள்ளது.. இவ்வளவு துல்லியமாக எப்படி திட்டமிடப்பட்டது.
"அமைதிப் பேச்சுவார்த்தை... போர் நிறுத்தம்..." - கடந்த ஒரு வாரமாக உலக நாடுகள் அனைத்தும் இந்த வார்த்தைகளைத்தான் நம்பிக்கொண்டிருந்தன. ஆனால இஸ்ரேல் இதற்கு பின் போட்ட பிளான் உலகையே அதிர வைத்துள்ளது. அந்த அமைதிப் பேச்சுவார்த்தை என்பது ஒரு திசைதிருப்பல் நாடகம்!

அந்த '30 வினாடி' மரண பிளான்!
ஈரானின் உயர்மட்டத் தலைவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்துக்கு வர வேண்டும் என்பதற்காக, நேற்றுதான் கமேனி ஒரு ரகசியக் கூட்டத்தைக் கூட்டினார். அமைதிப் பேச்சுவார்த்தை குறித்த இறுதி முடிவெடுக்கத் தனது வாரிசுகள் மற்றும் முக்கிய தளபதிகள் அனைவரையும் ஒரே கூரையின் கீழ் வரவழைத்தார்.
மொசாட் காத்திருந்த அந்தத் தருணம் இதுதான்!
கண்காணிப்பு: "எல்லோரும் உள்ளே வந்துவிட்டார்களா?" - மொசாட்டின் செயற்கைக்கோள்கள் மற்றும் தேஹ்ரானில் ஊடுருவியிருந்த ஒற்றர்கள் ஒவ்வொருவராக 'டிக்' செய்தார்கள்.
30-செகண்ட் விண்டோ: கமேனியும் அவரது குடும்பத்தினரும், தளபதிகளும் ஹாலுக்குள் நுழைந்து அமர்ந்த அந்த 30-வது விநாடியில், இஸ்ரேலிய போர் விமானங்களிலிருந்து ஏவுகணைகள் சீறிப் பாய்ந்தன.
முடிவு: "Target Confirmed. Mission Accomplished." - அடுத்த சில நிமிடங்களில் அந்த ரகசியக் கோட்டை தரைமட்டமானது.
ஈரானின் பாதுகாப்பு... 'ஓட்டைப் பானை'!
இந்தத் தாக்குதல் ஈரானின் உள்நாட்டுப் பாதுகாப்பு எந்த அளவுக்கு மோசமாகச் சீர்குலைந்துள்ளது என்பதை அம்பலப்படுத்தியுள்ளது.
உள்நாட்டுத் துரோகம்: ஈரானின் மிக உயர்மட்டப் பாதுகாப்பு வளையத்திற்குள் (Inner Circle) இருப்பவர்களே மொசாட்டுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்கள் என்பதுதான் ஈரானிய ராணுவத்தை நிலைகுலையச் செய்திருக்கிறது.
டிஜிட்டல் மாயாஜாலம்: ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகளை (Air Defense Systems) ஒரே நேரத்தில் செயலிழக்கச் செய்தது மொசாட்டின் 'சைபர்' பிரிவு. இதனால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர் விமானங்கள் உள்ளே நுழைந்தது கூடத் தெரியாமல் ஈரான் ராணுவம் விழிபிதுங்கி நின்றது.
ஏவுகணைத் துல்லியம்: கமேனியின் இல்லத்தின் ஜன்னல் வழியாகப் பாய்ந்து செல்லும் அளவுக்குத் துல்லியமான ஏவுகணைகளை மொசாட் வழிகாட்டுதலின்படி இஸ்ரேல் ஏவியது. குறிப்பாக, கதிரியக்கக் கழிவுகளை அழிக்கும் திறன்கொண்ட 'மேக்னடிக் பாம்' ரகசியங்களையும் மொசாட் ஏற்கனவே சோதித்திருந்தது.
ஆட்சிக் மாற்றம் (Regime Change) - லோடிங்!
"ஈரானில் இனி ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும்" என அமெரிக்க வெள்ளை மாளிகை வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.
அமெரிக்க-இஸ்ரேல் கூட்டணி: தற்போதுள்ள நவீனத் தொழில்நுட்பம் மற்றும் ராணுவ பலத்தில், இந்த 'அமெரிக்க-இஸ்ரேல்' கூட்டணியை எதிர்க்கும் சக்தி யாரிடமும் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது.
அடுத்தது என்ன? ஈரான் மக்கள் பல இடங்களில் கமேனியின் மறைவைக் கொண்டாடுவதாகவும், இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இயங்கும் புதிய ஆட்சிக்கு வழிவகை செய்யப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications