Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐடி ஊழியர்கள் இனி ஒவ்வொரு நிமிடமும் யோசித்து முடிவெடுங்க.. டிரம்ப் தொடங்கிய வர்த்தக போர்.. ஆப்பு

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வர்த்தக போரை தொடங்கி உள்ளார். உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் மீது வர்த்தக போரை அறிவித்து உள்ளார். 10% அடிப்படை வரி உலகம் முழுக்க உள்ள எல்லா நாடுகள் மீதும் விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த புதிய பதிலடி வரி விதிப்பின் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் 20 சதவீத விகிதத்தையும் சீனா 34 சதவீத வரியையும் எதிர்கொள்கிறது. இந்தியா 26 சதவீதம், தென் கொரியா 25 சதவீதம் மற்றும் ஜப்பான் 24 சதவீதம்., வரி விதிக்கப்படும். அதிகபட்சமாக கம்போடியா மீது 49%, வியட்நாம் மீது 46%, இலங்கை மீது 44% வரி விதிக்கப்பட்டு உள்ளது. சீனா மீது 34%, ஐரோப்பிய ஒன்றியம் மீது 20%, ஜப்பான் மீது 24% வரிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பதிலடி வரிகள் என்றால் என்ன?

முதலில் இது என்ன வர்த்தக போர் என்று பார்க்கலாம் . அமெரிக்க அதிபர் டிரம்ப் reciprocal tariff எனப்படும் வரிகளை விதிக்க உள்ளார். அதாவது பதிலடி வரி. அதாவது இந்தியா அமெரிக்கா மீது விதிக்கும் வரியை அப்படியே இந்தியா மீது அமெரிக்கா விதிக்கும். அதாவது ஒரு துறையில் உள்ள ஒரு பொருளுக்கு இந்தியா 30 சதவிகிதம் வரி விதிக்கிறது. அமெரிக்கா 10 சதவிகிதம்தான் வரி விதிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த புதிய விதிப்படி அமெரிக்காவும் அதே 30% வரியை இனி விதிக்கும்.

How will the Indian IT field be affected the most due to Donald Trump s Reciprocal Tariff

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏப்ரல் 2ம் தேதி இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது பதிலடி வரிகளை விதிக்க போவதாக அறிவித்து உள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவிற்கான அனைத்து எஃகு இறக்குமதிக்கும் 25% வரி விதிப்பதாக அறிவித்துள்ளார். விவசாய பொருட்கள் மீது 100% வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஐடி ஊழியர்களுக்கு சிக்கல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி மற்றும் கடுமையான விசா குடியேற்றக் கொள்கைகள் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) மற்றும் இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்களை பாதிக்கலாம் என்று மூடிஸ் நிறுவனம் ஆய்வு செய்துள்ளது. இவை நேரடியாக ஐடி துறையை பாதிக்கவில்லை என்றாலும் மறைமுகமாக பாதிக்கும். அதாவது அமெரிக்க குடியேற்ற விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்ட இந்திய ஊழியர்களை நம்பியிருக்கும் IT நிறுவனங்கள் சவால்களை சந்திக்கும். கடுமையான குடியேற்றக் கொள்கைகள் காரணமாக இந்தியர்கள் ஆன்சைட் போக முடியாத நிலை ஏற்படும்.

இதை நிவர்த்தி செய்ய, TCS மற்றும் Infosys போன்ற நிறுவனங்கள் இந்தியர்களை ஆன்சைட் அனுப்பாமல் அமெரிக்காவிலேயே ஊழியர்களை பணிக்கு எடுக்கும் திட்டத்தில் உள்ளதாம். அதாவது விசா பிரச்சனைகளை சமாளிக்க TCS மற்றும் Infosys போன்ற நிறுவனங்கள் இந்தியர்களை ஆன்சைட் அனுப்பாமல் நிறுத்தலாம். அமெரிக்காவிலேயே உள்ளவர்களை பணிக்கு எடுக்கலாம் என்று மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து சரியும் ஐடி துறை

ஐடி துறையில் கடந்த 1 வருடத்தில் மட்டும் 15%க்கும் அதிகமாக சரிவு ஏற்பட்டு உள்ளது. அதாவது 15%க்கும் அதிகமாக கிளைண்டுகள் குறைந்து உள்ளனர். இந்தியாவில் உள்ள அசெஞ்சர், இன்ஃபோசிஸ், விப்ரோ, டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள் தங்களின் வருவாயில் 11-18 சதவிகிதம் வரை இழந்து உள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி மற்றும் கடுமையான விசா குடியேற்றக் கொள்கைகள் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) மற்றும் இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்களை பாதிக்கலாம் என்று மூடிஸ் நிறுவனம் ஆய்வு செய்துள்ளது.

Take a Poll

அதோடு அமெரிக்காவின் வர்த்தக போர் காரணமாக சர்வதேச அளவில் பல துறைகள் பாதிக்கின்றன. இதனால் ஐடி சேவைகளை பயன்படுத்தும் பல நிறுவனங்கள் செலவை கட்டுபடுத்த ஐடி சேவைகளுக்கு செலவு செய்வதை குறைக்க முடிவு செய்துள்ளன. ஐடி சேவைகளுக்கான மதிப்புகள் குறைய தொடங்கி உள்ளன. இது ஐடி துறை வீழ்ச்சிக்கு முக்கியமான காரணமாக மாற தொடங்கி உள்ளது .

ஐடி துறையில் அடுத்த ஆண்டு வளர்ச்சி 4%க்கும் குறைவாகவே இருக்கும். வர்த்தக போரால் இந்தியாவில் ஐடி துறை பாதிக்கப்பட தொடங்கி உள்ளது. இந்தியாவில் ஐடி துறையில் வரும் நாட்களில் வேலை இழப்புகள் இதனால் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. வர்த்தக போர் காரணமாக மும்பை பங்குச்சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. யோசித்து பார்க்க முடியாத அளவிற்கு மார்க்கெட் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கடந்த 6 மாதங்களில் 10 மட்டும் ஆயிரம் புள்ளிகள் சென்செக்ஸ் வர்த்தகத்தில் சரிந்து உள்ளது. 81 ஆயிரம் புள்ளிகளில் இருந்து 72 ஆயிரம் புள்ளிகளுக்கு சென்செக்ஸ் சரிந்து உள்ளது. தொடர்ந்து சென்செக்ஸ் சரிவது இந்திய மார்க்கெட்டில் பெரிய அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய மார்க்கெட்டில் இருக்கும் பல நிறுவனங்கள் கூடுதலாக மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இவை இப்போது உண்மையான மதிப்பை நோக்கி சரிய தொடங்கி உள்ளன. வரும் நாட்களில் இவை மேலும் சரியும் வாய்ப்புகள் உள்ளன. இதுவும் ஐடி துறையை நேரடியாக பாதிக்கும்.

கடும் பாதிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடங்கி உள்ள வர்த்தக போர் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதியில் வருடத்திற்கு சுமார் $7 பில்லியன் இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வருடா வருடம் இந்தியாவிற்கு இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்க அதிபரின் வர்த்தக போர் காரணமாக மிகவும் பாதிக்கப்படக்கூடியவை இரசாயனங்கள் துறை , உலோக பொருட்கள் துறை, நகைகள் துறை, மேலும் ஆட்டோமொபைல்கள் துறை , மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்கள் துறை ஆகியவை பாதிக்கப்படும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முக்கியமாக இரசாயனங்கள், உலோக பொருட்கள் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும். இந்தியாவில் இருந்து செய்யப்படும் ஆட்டோமொபைல் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும். இந்த ஏற்றுமதி 15 சதவிகிதம் வரை பாதிக்கும், மருந்து ஏற்றுமதி 30 சதவிகிதம் வரை குறையும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்க பொருட்கள் மீதான வரி குறைப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் பிரதமர் மோடி சந்திப்பு நடத்திய நிலையில், அமெரிக்க பொருட்கள் மீதான வரியை இந்தியா குறைக்க தொடங்கி உள்ளது. அமெரிக்கா இந்தியாவின் வரி விதிப்பை விமர்சனம் செய்த நிலையில்.. இந்தியா வரியை குறைக்க தொடங்கி உள்ளது. போர்பன் விஸ்கி மீதான வரியை இந்தியா 150%ல் இருந்து 100% ஆக குறைத்துள்ளது. இந்த வரி குறைப்பு Suntory's Jim Beam போன்ற பிரபல அமெரிக்க பிராண்டுகளின் இறக்குமதிக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கப் பொருட்களுக்கு, குறிப்பாக மதுபானத் துறையில் இந்தியாவின் நியாயமற்ற வரிகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்த ஒரு நாளுக்குப் பிறகு இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டு உள்ளது

பதிலடி வரிகள் என்றால் என்ன?

அமெரிக்க அதிபர் டிரம்ப் reciprocal tariff எனப்படும் வரிகளை விதிக்க உள்ளார். அதாவது பதிலடி வரி. அதாவது இந்தியா அமெரிக்கா மீது விதிக்கும் வரியை அப்படியே இந்தியா மீது அமெரிக்கா விதிக்கும். அதாவது ஒரு துறையில் உள்ள ஒரு பொருளுக்கு இந்தியா 30 சதவிகிதம் வரி விதிக்கிறது. அமெரிக்கா 10 சதவிகிதம்தான் வரி விதிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த புதிய விதிப்படி அமெரிக்காவும் அதே 30% வரியை இனி விதிக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+