நாள் நெருங்குது.. டிரம்ப் விதித்த கெடு! மனசை குளிர வைக்க இந்தியா களமிறக்கும் அஸ்திரம்! வெள்ளைக்கொடி?
நியூயார்க்: Reciprocal tariffs என்று அழைக்கப்படும் பரஸ்பர கட்டணங்கள் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். இதன் மூலம் இந்தியா நேரடியாக பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அமெரிக்காவை சமாளிக்க இந்தியா சில நடைமுறைகளை கொண்டு வரலாம் என்று கூறப்படுகிறது.
டிரம்ப்பின் வரி எச்சரிக்கைக்கு இந்தியா பதிலடி தரவில்லை. இதுவரை இந்தியா எந்த விதமான எதிர் கருத்தும் சொல்லவில்லை. ஆனால் அமெரிக்காவின் மனசை குளிர வைக்க சில அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா வரியை குறைத்தது. போர்பன் விஸ்கி மீதான வரியை இந்தியா 150%ல் இருந்து 100% ஆக குறைத்துள்ளது. இந்த வரி குறைப்பு Suntory's Jim Beam போன்ற பிரபல அமெரிக்க பிராண்டுகளின் இறக்குமதிக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கப் பொருட்களுக்கு, குறிப்பாக மதுபானத் துறையில் இந்தியாவின் நியாயமற்ற வரிகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்த ஒரு நாளுக்குப் பிறகு இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

போர்பன் விஸ்கியின் அடிப்படை சுங்க வரி இப்போது 50% ஆகவும், கூடுதலாக 50% வரியுடன் மொத்தம் 100% ஆகவும் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்கு முன்பு, இந்த இறக்குமதிகளுக்கு 150% வரி விதிக்கப்பட்டது. ஆனால், இந்த வரி குறைப்பு போர்பனுக்கு மட்டுமே பொருந்தும், மற்ற மதுபான பொருட்களுக்கான கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை. அவற்றிற்கு தொடர்ந்து 150% வரி விதிக்கப்படும். ஆனால் டிரம்ப்பின் இந்த எச்சரிக்கைக்கு இந்தியா பதிலடி தரவில்லை.
வரி குறைப்பா வெள்ளைக்கொடியா?
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பல அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டது. இதை காரணம் காட்டி அமெரிக்காவின் வரி விதிப்பில் இருந்து தப்பிக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பட்ஜெட்டில் புற்றுநோய் மற்றும் சில அரிதான நோய்களுக்கான மருந்துகள் உட்பட 36 உயிர்காக்கும் மருந்துகள் அடிப்படை சுங்க வரியிலிருந்து (BCD) முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், அவை விலை குறைந்துள்ளன. ஆறு முக்கியமான மருந்துகளுக்கு 5% வரி மட்டுமே விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. கோபால்ட் மற்றும் லித்தியம்-அயன் பேட்டரி ஸ்கிராப் போன்ற முக்கியமான தாதுக்களின் வரியை அரசாங்கம் அகற்றியுள்ளது, இதனால் தொழிற்சாலைகள் இந்த பொருட்களை உள்நாட்டில் பெறுவது எளிதாகும். இதில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களின் விலை குறையும்.
ஜவுளி உற்பத்தியில் பயன்படுத்தப்படும் இரண்டு புதிய வகை தறிகள் தற்போது வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் அதன் விலை குறையும். இதனால் ஆடைகள் விலை குறையும். எல்இடி/எல்சிடி டிவிக்கள் மற்றும் மொபைல் போன் பேட்டரிகள் தயாரிப்பதற்கான உதிரிபாகங்களின் இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது அல்லது உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மொபைல் போன் பேட்டரி தயாரிப்பில் பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரி மீதான வரி குறைக்கப்பட்டு உள்ளது. கைவினைப் பொருட்களுக்கான ஏற்றுமதி வரி நீக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது, இதனால் ஏற்றுமதியாளர்கள் சரக்குகளை எளிதாக அனுப்ப முடியும். கப்பல் கட்டுதல் மற்றும் பழுதுபார்ப்புக்கான மூலப்பொருட்கள் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும். மேற்கண்ட பொருட்களில் அமெரிக்காவின் பொருட்களும் அடங்கும்.
இதை காரணம் காட்டி அமெரிக்காவின் வரி விதிப்பில் இருந்து தப்பிக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை என்ன?
அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கையில், நாங்கள் விரைவில் பரஸ்பர கட்டணங்களை அறிவிப்போம். ஏனென்றால் அவர்கள் எங்களிடம் கட்டணம் வசூலிக்கிறார்கள், நாங்கள் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கிறோம். அவ்வளவுதான்.. விஷயம் மிகவும் எளிமையானது. இந்தியா அல்லது சீனா அல்லது வேறு எந்த நாடாக இருந்தாலும் சரி.. நாடு எதுவாக இருந்தாலும், அவர்கள் என்ன கட்டணம் வசூலித்தாலும், நாங்கள் நியாயமாக இருக்க விரும்புகிறோம்.. நாங்களும் அதே கட்டணம் வசூலிப்போம்.. அவர்கள் எங்களிடம் கட்டணம் வசூலிக்கிறார்கள், நாங்கள் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கிறோம் அவ்வளவுதான் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு சிக்கல்
பரஸ்பர வரிகளை விதிக்கும் அதிபர் டொனால்ட் டிரம்பின் திட்டத்தால் இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள்தான் அதிக ஆபத்துகளை சந்திக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் மார்கன் ஸ்டான்லி முதல் நோமுரா ஹோல்டிங்ஸ் இன்க் ஆகியோர் எச்சரித்து உள்ளனர்.
-
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications