முக்கியம்.. தனது லெஃப்ட் ஹேண்டை.. அமெரிக்காவிற்கு அவசரமாக அனுப்பும் மோடி.. என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: பிரதமர் மோடி தனது அமைச்சரவையில் உள்ள முக்கிய அமைச்சரான பியூஸ் கோயலை அமெரிக்காவிற்கு அனுப்ப உள்ளார்.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இந்தியா - அமெரிக்கா இடையேயான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் செப்டம்பர் 22 அன்று அமெரிக்காவுக்குப் பயணம் செய்யவுள்ளார். இந்தத் தகவலை மத்திய அரசின் அதிகாரபூர்வ அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

Donald Trump India

ஆகஸ்ட் 27 முதல் இந்தியா மீது டிரம்ப் 25% பரஸ்பர வரிகளையும், ரஷ்ய எண்ணெய் கொள்முதல் செய்ததற்காக இந்தியா மீது கூடுதலாக 25% வரிகளையும் விதித்துள்ளார். இதனால் இந்தியா மீதான மொத்த வரிகள் 50% ஆக உயர்ந்துள்ளது.

டிரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% கூடுதல் வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இந்த உத்தரவில், ரஷ்ய எண்ணெயை இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்வது அமெரிக்காவிற்கு அசாதாரணமான மற்றும் மோசமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை கவலைகள் மற்றும் பிற வர்த்தக சட்டங்களை மேற்கோள் காட்டி அவர் இந்தியாவிற்கு எதிராக அபராதம் விதித்தார்.

இந்தியா அமெரிக்கா மோதல்

அமெரிக்கா இந்தியா மீது விதித்துள்ள 50% இறக்குமதி வரிகளுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீன மக்கள் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போரின் வெற்றி மற்றும் உலக பாசிச எதிர்ப்பு போரின் 80வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் கருத்தரங்கில் பேசிய ஸு, "அமெரிக்கா நீண்ட காலமாக சுதந்திர வர்த்தகத்தால் பயனடைந்துள்ளது. ஆனால் இப்போது அது அதிக விலைகளைக் கோருவதற்கு வரிகளை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறது. இந்தியாவின் மீது 50% வரி விதிப்பது நியாயமற்றது, மோசமானது, அதை சீனா உறுதியாக எதிர்க்கிறது," என்று குறிப்பிட்டார்.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இந்தியா - அமெரிக்கா இடையேயான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் செப்டம்பர் 22 அன்று அமெரிக்காவுக்குப் பயணம் செய்யவுள்ளார். இந்தத் தகவலை மத்திய அரசின் அதிகாரபூர்வ அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகத்தின் அதிகாரிகள் செப்டம்பர் 16 அன்று இந்தியாவில் நடத்திய ஒருநாள் சந்திப்பைத் தொடர்ந்து இந்த பயணம் நடைபெறுகிறது. இந்தச் சந்திப்பில், அமெரிக்காவின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் பிரெண்டன் லிஞ்ச் மற்றும் இந்தியத் தரப்பு அதிகாரி ராஜேஷ் அகர்வால் ஆகியோர் முன்மொழியப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தனர்.

முக்கிய சந்திப்பு

இந்தியா - அமெரிக்கா இடையிலான மோதலை தவிர்க்கும் விதமாக மோடி பியூஸ் கோயலை அமெரிக்காவிற்கு அனுப்ப உள்ளார். இந்தச் சந்திப்பின்போது, இரு தரப்பினரும் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்த ஒப்புக்கொண்டதாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமைச்சரின் இந்தப் பயணம், கடந்த மே மாதம் வாஷிங்டனில் நடைபெற்ற வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாக அமைகிறது.

தனது அமெரிக்கப் பயணத்தின்போது, பியூஷ் கோயல் இது தொடர்பான உயர்மட்டக் குழுவுடன் அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மை பயக்கும் வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்வதே இந்தப் பேச்சுவார்த்தைகளின் முக்கிய நோக்கம்.

செப்டம்பர் 16 அன்று வெளியிட்ட அறிக்கையில், "அமெரிக்கக் குழுவுடன் நடத்தப்பட்ட இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் ஆக்கபூர்வமாக இருந்தன. இரு தரப்பினரும் பரஸ்பர நன்மை பயக்கும் தீர்மானத்தை விரைவில் எட்ட உறுதியளித்தனர்," என்று வர்த்தக அமைச்சகம் தெரிவித்தது.

ஏழு மணி நேரம் நீடித்த அமெரிக்கப் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்குப் பிறகு, "பரஸ்பர நன்மை பயக்கும் வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் எட்டுவதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டது," என்று அமைச்சகம் குறிப்பிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+