மத்திய கிழக்கில் வெடித்த போர்.. அமெரிக்கா அட்டாக்.. பதிலுக்கு ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மீண்டும் கடுமையான சண்டை மூண்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கப் படைகள் வான்வழியாக குண்டுகளை வீசித் தாக்கிய நிலையில், அதற்குப் பதிலடியாக அமெரிக்காவின் ராணுவ முகாம்கள் மீது ஈரான் சரமாரியாக ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் ஏவித் தாக்கியுள்ளது. இதனால் அந்தப் பிராந்தியம் முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Iran US

அமெரிக்க முகாம்களைக் குறிவைத்த ஈரான்

ஈரானின் முக்கிய ராணுவப் பிரிவான இஸ்லாமிய புரட்சிகர காவல் படை இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. தங்களை முதலில் தாக்கிய அமெரிக்காவுக்கு தக்க பாடம் புகட்டவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஈரான் கூறியுள்ளது.

ஜோர்டான் நாட்டில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம் மீது சக்திவாய்ந்த ஏவுகணைகளை வீசியதாக ஈரான் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் பலர் உயிரிழந்ததாகவும் ஈரான் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்க அரசு இதுபற்றி இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலையும் உறுதிப்படுத்தவில்லை. இதேபோல், பஹ்ரைன் நாட்டில் உள்ள அமெரிக்க படைத்தளத்தின் மீதும் பல ட்ரோன்களை ஏவி ஈரான் பெரிய அளவில் தாக்குதல் நடத்தியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜோர்டான் மற்றும் குவைத் எடுத்த பாதுகாப்பு நடவடிக்கை

ஈரான் ஏவிய ஏவுகணைகள் ஜோர்டான் நாட்டின் வான் எல்லைக்குள் நுழைந்ததும், அங்கு எச்சரிக்கை சைரன் ஒலிக்கப்பட்டு மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். ஜோர்டான் எல்லைக்குள் வந்த 13 ஏவுகணைகளில் 10 ஏவுகணைகளை அந்நாட்டு ராணுவம் நடுவானிலேயே சுட்டு வீழ்த்தியது. மீதமுள்ள 3 ஏவுகணைகள் மக்கள் வசிக்காத வெட்டவெளிப் பகுதிகளில் விழுந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

அதே நேரத்தில், ஈரானிய ட்ரோன்கள் தங்கள் எல்லைக்குள் நுழைய முயன்றபோது, குவைத் நாட்டு ராணுவமும் தங்கள் வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் அவற்றை இடைமறித்துத் தடுத்து நிறுத்தியுள்ளது. இதனால் அண்டை நாடுகள் அனைத்தும் தற்போது தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.

அமெரிக்காவின் தாக்குதலும் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கையும்

முன்னதாக, எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் செல்லும் ஹார்முஸ் கடல் பகுதியில் அமெரிக்கப் படைகள் மீது ஈரான் அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறி, ஈரான் மீது அமெரிக்கா தொடர்ச்சியாக குண்டுவீசித் தாக்கியது. தெற்கு ஈரானில் உள்ள துறைமுக நகரங்கள் மற்றும் விமான நிலையப் பகுதிகளில் பெரும் வெடிச்சத்தங்கள் கேட்டதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "ஹார்முஸ் கடல் பாதையில் கண்ணிவெடிகளை வைக்க முயன்ற ஈரானின் திட்டத்தை முறியடிக்கவே நாங்கள் தாக்குதல் நடத்தினோம். ஈரான் மீண்டும் அமெரிக்கா மீது கைவைத்தால், இதுவரை பார்க்காத அளவுக்கு மிகக் கடுமையான தாக்குதலை அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கும்" என்று எச்சரித்துள்ளார்.

கச்சா எண்ணெய் விலையில் உடனடி தாக்கம்

உலக நாடுகளுக்கு பெட்ரோல், டீசல் கொண்டு செல்லும் முக்கிய கடல் பாதையான ஹார்முஸ் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளதால், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உடனடியாக 2 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது. ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது கூடுதல் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க நிதித்துறை எச்சரித்துள்ளது.

இரு நாடுகளும் மாறி மாறித் தாக்கத் தொடங்கியுள்ளதால், இந்த மோதல் எப்போது முடிவுக்கு வரும் என்ற கவலை உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+