ஹய்யோ.. 5 விரல்களிலும் நகங்களே இல்லையே.. யார் இந்த நபர்.. அதிரவைக்கும் போட்டோ.. இதயமே நொறுங்குதே..!!
இணையத்தில் 5 விரல்களில் நகங்கள் இல்லாத போட்டோ ஒன்று ஷேர் ஆகி வருகிறது
நியூயார்க்: இணையத்தில் ஒரு போட்டோ ஷேர் ஆகி வருகிறது.. அந்த போட்டோவை பார்த்து பலரும் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளனர்.
பெரும்பாலும் அழகுக்காகவே பார்க்கப்படும் "நகங்கள்"விரலுக்கு ஒரு கவசம் போன்றது... நம் உடலில் ரத்த ஓட்டம் இல்லாத பகுதிகளில் ஒன்று நகம்.
நமக்கு டென்ஷன் என்றாலே, கடித்து துப்புவதற்கு பலிகடா ஆவது இந்த பரிதாப நகங்கள்தான்.. உண்மையை சொல்லப்போனால், அழகை மட்டுமல்ல, ஆரோக்கியத்தையும், நோயின் தாக்கங்களையும் அப்பட்டமாக வெளிப்படுத்திவிடுவது இந்த நகங்கள்தான்.

ஓபன் கண்ணாடி
நகங்களின் நோய்கள், அவற்றின் வடிவம், அளவு மாற்றம் இவைகளை பொறுத்தே உடல்நலம் கணிக்கப்படுகிறது.. இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால், நகங்கள் மனித ஆரோக்கியத்தின் நிலையை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி என்றே சொல்லலாம்.. இப்போது ஒரு போட்டோ இணையத்தில் தீயாய் பரவிகொண்டிருக்கிறது.. அந்த போட்டோவில் ஒருவருக்கு 5 விரல்களும் இருக்கின்றன.. ஆனால், அதில் எதிலுமே நகங்கள் இல்லை.

ஆணி தட்டுகள்
அதனால்தான் இந்த போட்டோ அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.. நகங்கள் சிதைந்தும், உடைந்தும், உருமாறியும் இருந்தால்கூட பரவாயில்லை.. நகமே சுத்தமாக இல்லை.. இதற்கு காரணம், இது ஒரு அரியவகை பாதிப்பு என்று கூறப்படுகிறது. இந்த பாதிப்பு பெயர் அனோனிச்சியா காங்கினிடா என்கிறார்கள் டாக்டர்கள்.. அதாவது, ஆணி தட்டுகள் இல்லாதது என்று இதற்கு தமிழில் பெயர்.. லிச்சென் பிளானஸ், பெம்பிகஸ், பிறவி எபிடெர்மோலிசிஸ் புல்லோசா ஆகியவை அனோனிசியா குறிப்பிடப்பட்ட நோய்கள்... பெரும்பாலும் இந்த நோய் குடும்பம் மற்றும் ஒரு பிறவி நோயியல் ஆகும்.

ஹெரிடிட்டி
இந்த நோய் இயற்கையில் பூஞ்சை கிடையாது.. ஆனால், இது ஒரு பிறவி மற்றும் வாங்கிய தன்மையால் ஏற்படுகிறதாம்.. அவர்கள் தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு அல்லது ஒரு தலைமுறை வழியாக அனுப்பப்படும் ஒரு மரபணு அசாதாரணம் காரணமாக நிகழக்கூடியது.. இது பிறவி குறைபாடு என்பதால், சிகிச்சை எந்த அளவுக்கு உதவும் என்று தெரியவில்லை.. ஆனால், இதை சரிசெய்ய ஒரே வழி, அந்த குறைபாட்டை மறைப்பதுதான்..

பயோடெக்னாலஜி
அதாவது, இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிறக்கும்போதே கால்விரல்கள் மற்றும் கைவிரல்களில் நகங்கள் இருக்காதாம்... அதன் பிறகும் நகம் கொஞ்சம்கூட வளராமல் தடுக்கப்பட்டுவிடுகிறது.. இந்தப் பாதிப்பு குறித்து, அனோனிச்சியா மிகவும் அரிதான பாதிப்பு என்றும், இதனால் பிறக்கும்போதே நகங்கள் இருக்காது, இந்த பாதிப்புக்கு சிகிச்சை எதுவும் இல்லை, ஆனால் செயற்கை நகங்களை பொருத்திக் கொள்ளலாம் என்று அமெரிக்காவில் உள்ள தேசிய பயோடெக்னாலஜி தகவல் மையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.. 5 விரல்களில் நகங்கள் இல்லாத இந்த போட்டோதான் இணையத்தில் வெளியாகி கவலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications