இந்தியாவிற்கு எதிராக.. டிரம்ப் போடும் "மசாலா" திட்டம்! அமெரிக்காவின் வலையில் சிக்க கூடாது..வார்னிங்
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வர்த்தகம் குறித்து இந்தியாவுக்குத் தொடர்ந்து மாறுபட்ட சிக்னல்களை அளித்து வருகிறார். ஒருபுறம் பிரதமர் நரேந்திர மோடியுடன் நட்பு மற்றும் பேச்சுவார்த்தைகள் குறித்துப் பேசுகிறார். மறுபுறம், இந்திய மற்றும் சீனப் பொருட்கள் மீது 100% வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்துகிறார். டிரம்பின் இந்த அணுகுமுறை இந்தியாவுக்குக் குழப்பத்தையும், அபாயத்தையும் உருவாக்குகிறது.
ஏற்கனவே, இந்திய இறக்குமதிப் பொருட்கள் மீதான வரிகளை அமெரிக்கா 50% ஆக இருமடங்காக உயர்த்தியுள்ளது. ரஷ்யாவிடமிருந்து மலிவான எண்ணெய் வாங்கியதற்கான தண்டனையாக இது பார்க்கப்பட்டது. இப்போது, ஐரோப்பாவும் இதே பாதையைப் பின்பற்ற வேண்டும் என்று டிரம்ப் விரும்புகிறார். இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு இது நிலையான வர்த்தகக் கொள்கையாக இல்லாமல், திடீர் அதிர்ச்சியாகவே உள்ளது.

மசாலா ஒப்பந்தம்
இந்தியாவை சமாளிக்கும் விதமாக, அதே சமயம் இந்தியாவிரு எதுவும் பலன் அளிக்காத மசாலா ஒப்பந்தத்தை டிரம்ப் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கைகளை விடுக்கப்படுகின்றன. இது போன்ற "மசாலா ஒப்பந்தங்களுக்கு" இந்தியா பலியாகிவிடக் கூடாது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். "மசாலா" என்பது, "அழுத்தம் மூலம் எட்டப்பட்ட பரஸ்பர உடன்பாட்டு ஒப்பந்தங்கள் என்று அழைக்கப்படும்.. அதாவது Mutually Agreed Settlements Achieved through Leveraged Arm-twisting" என்பதைக் குறிக்கிறது.
இந்தியாவிற்கு கடுமையான பிரஷர் கொடுத்து அதன் மூலம் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்வது. இவை படங்களுக்கு மட்டுமே சிறந்ததாகத் தோன்றும் கவர்ச்சிகரமான, குறுகிய கால சமரசங்கள் கொண்டதாக இந்த ஒப்பந்தம் இருக்கும். ஆனால் இது போன்ற ஒப்பந்தங்கள் நீண்ட காலத்திற்கு ஏற்றுமதியாளர்களைப் பாதுகாப்பதில்லை.
மசாலா - Mutually Agreed Settlements Achieved through Leveraged Arm-twisting:
மசாலா ஒப்பந்தங்கள் தற்காலிக தீர்வுகளை மட்டுமே தரும். இந்தியாவுக்கு தற்காலிகத் தீர்வுகள் அல்ல, தெளிவான மற்றும் நிரந்தர ஒப்பந்தங்கள் தேவை. அமெரிக்கா இந்தியா மீது விதித்துள்ள 50% இறக்குமதி வரிகளுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீன மக்கள் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போரின் வெற்றி மற்றும் உலக பாசிச எதிர்ப்பு போரின் 80வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் கருத்தரங்கில் பேசிய ஸு, "அமெரிக்கா நீண்ட காலமாக சுதந்திர வர்த்தகத்தால் பயனடைந்துள்ளது. ஆனால் இப்போது அது அதிக விலைகளைக் கோருவதற்கு வரிகளை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறது. இந்தியாவின் மீது 50% வரி விதிப்பது நியாயமற்றது, மோசனது, அதை சீனா உறுதியாக எதிர்க்கிறது," என்று குறிப்பிட்டார்.
முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் இந்தியக் கொள்கைகளை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியா மீது 50% வரி விதித்ததன் மூலம் அமெரிக்க-இந்தியா உறவுகளை டிரம்ப் பாதித்துவிட்டதாகவும், இது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை ரஷ்யா மற்றும் சீனாவை நோக்கித் தள்ளியுள்ளதாகவும் போல்டன் கூறியுள்ளார்.
முக்கியமாக எஸ்சிஓ கூட்டத்தில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜிங்பிங் - ரஷ்ய அதிபர் புடின் ஆகியோர் ஒன்றாக இருந்தனர். இவர்கள் ஒன்றாக எடுத்த புகைப்படம் பெரிய அளவில் கவனம் பெற்றது. இவர்கள் ஒன்றாக உள்ள புகைப்படம் அமெரிக்க அரசியலை உலுக்கி உள்ளது. உலக அரசியலின் அடுத்த கட்டமாக இது பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவை உலுக்கிய மோடி போட்டோ
எக்ஸ் தளத்தில் இது குறித்து பதிவிட்ட முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், "வெள்ளை மாளிகை அமெரிக்க-இந்தியா உறவுகளை பல பத்தாண்டுகளுக்குப் பின்னோக்கித் தள்ளிவிட்டது. மோடியை ரஷ்யா மற்றும் சீனாவை நோக்கித் தூண்டியுள்ளது. அமெரிக்கா மற்றும் டொனால்ட் டிரம்ப்பிற்கு மாற்றாக பெய்ஜிங் தன்னைக் காட்டிக்கொண்டுள்ளது," என்று குறிப்பிட்டுள்ளார்.
டிரம்ப் விதித்த வரிகள், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மேற்கு நாடுகள் இவ்வளவு காலம் மேற்கொண்ட ராஜதந்திர முயற்சிகளை தகர்த்துவிட்டதாக போல்டன் சாடினார். சோவியத் யூனியனுடனான (ரஷ்யா) இந்தியாவின் பனிப்போர் கால உறவை முடிவுக்குக் கொண்டுவரவும், சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கைச் சமாளிக்கவும் மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து முயற்சித்தன.. ஆனால் அதை எல்லாம் டிரம்ப் இப்பொது நாசம் செய்துவிட்டார் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
டிரம்பின் பொருளாதாரக் கொள்கைகள் ராஜதந்திர ரீதியாக இத்தனை காலம் அமெரிக்கா அடைந்த சாதனைகளை பலவீனப்படுத்திவிட்டதாக போல்டன் கூறினார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டில், பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோருடன் நட்பு ரீதியான புகைப்படங்கள் எடுத்துக்கொண்டது அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இது புதிய வேர்ல்டு ஆர்டருக்கான தொடக்கமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்தியா சீனா மற்றும் ரஷ்யாவுடன் நெருக்கம் அடைந்த காரணத்தால், இந்தியாவுடன் மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டிருந்தார். இந்தியா-அமெரிக்கா இருதரப்பு உறவில் இறுக்கம் தளர்ந்தது என்றார்.












Click it and Unblock the Notifications