• search
நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காலைல 6 மணி இருக்கும்.. வந்து கொட்டிய ரூ.300 கோடி.. உறைந்த நபர்.. அதுக்கு மேல அந்த பொண்ணு.. என்னவாம்

Google Oneindia Tamil News

நியூயார்க்: திடீரென நம்முடைய வங்கி கணக்கில், திடுதிப்பென்று கோடிக்கணக்கான பணம் விழுந்தால் நீங்கள் அடுத்த கணம் என்ன செய்வீர்கள்? ஆனால் பெரும்பாலானோர் என்ன செய்வோமோ, அதற்கு உல்டாவாக இளைஞர் ஒருவர் சிந்தித்துள்ளார்..!
பொதுவாக நம்முடைய வங்கி கணக்குகளில் பணம் பறிபோவது இயல்பான விஷயம்.. அதனால்தான், நம்முடைய அக்கவுண்ட்டின் பின்நம்பரை யாருக்கும் தரக்கூடாது என்று ஓயாமல் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

சில சமயம், வங்கி கணக்கில் எதிர்பாராமல் பணம் வந்து சேர்ந்துவிடும்.. இப்படி நம் நாட்டிலேயே பலமுறை நடந்துள்ளது.. இதற்கு ஒரு உதாரணமும் உள்ளது..

 அசோக் கெலாட் மீது அதிருப்தி.. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சோனியாவின் கவனத்தை பெறும் 3 தலைவர்கள்! அசோக் கெலாட் மீது அதிருப்தி.. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சோனியாவின் கவனத்தை பெறும் 3 தலைவர்கள்!

 பான் மசாலா

பான் மசாலா

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி அறிவித்த சமயம் அது.. ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பான் மசாலா வியாபாரி பப்புக்குமார்.. சாதாரண தொழிலாளிதான்.. தன்னுடைய வங்கியில் மொத்தமே 4500 ரூபாய் வைத்திருந்தார்.. அதில் இருந்து 1000 ரூபாய் எடுக்க வங்கிக்கு சென்றால், அதில் ரூ.10 கோடி இருந்துள்ளது.. இதை பார்த்து அந்த பாங்க் மேனேஜரே ஆச்சரியப்பட்டு கேட்டார். அதற்கு இந்த பப்புகுமார், அந்த பணம் தன்னுடையது இல்லை, அந்த பணம் எப்படி அக்கவுண்ட்டுக்கு வந்தது என்றே தெரியாது என்றார்.. இந்த விஷயம் போலீஸ் வரை சென்றது. பிறகுதான் தெரிந்தது, 500, 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு தடை விதிக்கப்பட்டதால், கருப்புப் பணத்தை யாரோ பப்புக்குமார் கணக்கில் போட்டுவிட்டுவிட்டார்களாம்.!

விநோதம்

விநோதம்

இதுபோலவே ஒரு விநோதம் ஆஸ்திரேலியாவிலும் நடந்துள்ளது.. இளம் காதலர்கள் அவர்கள்.. ஒருநாள் காலையில் அந்த இளைஞன் தூங்கி எழுந்து தன்னுடைய செல்போனை பார்த்து கொண்டிருந்தார்.. அப்போது அவரது வங்கிக்கணக்கில் 58 மில்லியன் டார் பணம் இருப்பதை கண்டு தூக்கிவாரிப்போட்டது.. அதாவது நம்முடைய இந்திய மதிப்பில் 300 கோடி ரூபாய்.. இவ்வளவு பணத்தையும் பார்த்து தலைகால் புரியாத அந்த இளைஞர், உடனே சம்பந்தப்பட்ட பேங்குக்கு போன் செய்துவிட்டார்.

 ஜாலி + ட்வீட்

ஜாலி + ட்வீட்

என்னுடைய அக்கவுண்ட்டில் தவறுதலாக கோடிக்கணக்கில் பணம் உள்ளது.. இது என்னுடைய பணம் இல்லை என்று தகவல் தந்துள்ளார்.. அதுமட்டுமல்ல, இந்த சம்பவம் குறித்து தன்னுடைய காதலியிடமும் சொல்லி உள்ளார்.. இதை கேட்டதும், காதலி அதிர்ந்து போய்விட்டார்.. இவ்வளவு பணம் கிடைத்தும், அதை அனுபவிக்காமல், பேங்குக்கு தகவல் சொல்லிவிட்டாயே என்று அந்த இளைஞனை நொந்து கொண்டார்.. அப்போதும் மனசு கேட்காமல், ஜாலியாக ஒரு ட்வீட் பதிவிட்டார். "என் காதலன் செய்த காரியத்தை பாருங்க.. இந்த பணம் இருந்திருந்தால் இந்நேரம் நாங்க ஒரு பெரிய தீவையே விலைக்கு வாங்கி அங்கே சந்தோஷமா இருந்திருப்போமே" என்று பதிவிட்டிருந்தார்.

 தப்பான மெசேஜ்

தப்பான மெசேஜ்

இந்த பதிவை பார்த்ததும் ட்விட்டர்வாசிகள் திரண்டு வந்துவிட்டனர்.. அவ்வளவு பணமா? என்று ஆச்சரியத்துடன் கேட்டு கமெண்டகளை பதிவிட துவங்கினர்.. இதற்கு பிறகு, அந்த இளைஞன் இதற்கு பதிலளித்து இன்னொரு ட்வீட் பதிவிட்டார்.. அப்போதுதான், விஷயமே அனைவருக்கும் விளங்கியது.. வங்கி கணக்கில் 58 மில்லியன் என்பது உண்மைதானாம்.. ஆனால், அவை பணமாக வரவில்லையாம்.. பல நபர்களின் வங்கி கணக்குகளில் உள்ள 58 மில்லியனை கன்ட்ரோல் செய்யலாம் என்ற மெசேஜ் மட்டும் வந்துள்ளதாம்.. அதனால்தான் தவறுதலாக தனக்கு மெசேஜ் வந்துவிட்டதாக, போன் செய்து வங்கிக்கு தகவல் சொன்னதாக விளக்கம் தந்தார்..

 சபாஷ் + பூரிப்பு

சபாஷ் + பூரிப்பு

காதலனின் இந்த விளக்கத்தை பார்த்ததும், ட்விட்டர்வாசிகள் நெகிழ்ந்துவிட்டனர்.. மாறாக, அந்த இளம்பெண்ணை கலாய்த்து தள்ளிவிட்டார்கள்.. மெசேஜை சரியாக பார்க்க வேண்டாமா? இப்படி ஒரு நேர்மையானவன் உனக்கு கிடைப்பதற்கு நீ கொடுத்து வைத்திருக்கணும்.. என்றெல்லாம் பதிலடிகளை தந்தனர்.. ஆக, ஒரே ஒரு மெசேஜ் வந்ததையடுத்து, அதை சரியாக புரிந்து கொள்ளாமல் காதலி குழப்பி, ஒட்டுமொத்த இணையவாசிகளையும் கொஞ்ச நேரத்தில் குழப்பி எடுத்துவிட்டார்.. இதுதான் ஹாட் நியூஸாக இணையத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது.

English summary
Miracle incident boyfriend found 58 millions in his account and what happened next
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X