"உண்மையை சொல்ல போறேன்.." மேடை ஏறிய இஸ்ரேல் பிரதமர்.. உடனே வெளியேறிய உலக நாடுகளின் பிரதிநிதிகள்
நியூயார்க்: அமெரிக்காவில் இப்போது ஐநா சபை கூட்டம் நடந்து வருகிறது. இதில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உரையாற்ற ரெடியான நிலையில், அப்போது பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் அரங்கிலிருந்து வெளியேறினர். பாலஸ்தீனத்தில் ஈரான் நடத்தி வரும் போருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பிரதிநிதிகள் வெளியேறினர். இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
ஐநா பொது சபை கூட்டம் இப்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றி வருகிறார்கள். சமீபத்தில் தான் அமெரிக்க அதிபர் டிரம்பும் இந்த கூட்டத்தில் பேசியிருந்தார். அதில் அவர் ஈரானை கடுமையாக விமர்சித்திருந்தார்.

ஈரான்
அதைத் தொடர்ந்து 81வது ஐநா சபையில் உரையாற்றிய ஈரான் அதிபர் பெசஷ்கியான், ஈரானின் ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள ஷாஜரே தாயெபே தொடக்க பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போட்டோக்களை காட்டினார். 2026 பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பள்ளி கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், இதில் 120க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
வெளிநடப்பு
மேலும், ஐநாவில் மற்றொரு சம்பமும் நடந்தது. அதாவது இஸ்ரேல் பிரதமான நெதன்யாகு ஐநா சபையில் உரையாற்ற தயாரானார். இதற்காக அவைக்குள் நுழைந்த அவர் மேடை ஏறினார். அவர் ஏறியதை பார்த்தவுடனேயே பல்வேறு உலக நாடுகளின் பிரதிநிதிகளை வெளிநடப்பு செய்தனர். ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பிரநிதிகளை நெதன்யாகுவை கண்டிக்கும் வகையில் அவரது பேச்சை புறக்கணித்தனர். இது சர்வதேச அளவில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
அதேநேரம் இஸ்ரேல் பிரதிநிதிகள் சர்வதேச அரங்குகளில் புறக்கணிக்கப்படுவது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே சர்வதேச அரங்கில் இஸ்ரேல் தலைவர்கள் பேசும்போது, பல நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் இதுபோல வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மம்தானி- நெதன்யாகு
இதற்கிடையே நியூயார்க் மேயர் சோஹ்ரான் மம்தானியையும் நெதன்யாகு கடுமையாக விமர்சித்துள்ளார். ஹமாஸுக்கு மம்தானி ஆதரவளிப்பதாக அவர் குற்றம்சாட்டினார். அமெரிக்க ஊடகத்திற்கு பேட்டியளித்த மம்தானி, நெதன்யாகுவை போர்க்குற்றவாளி என்றும், பாலஸ்தீன மக்களுக்கு எதிரான கொடூர இனப்படுகொலையை நடத்துபவர் என்றும் விமர்சித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த நெதன்யாகு, தான் ஐநா கூட்டத்தில் இஸ்ரேல் வீரர்கள் குறித்து உண்மையை பேசப்போவதாகவும், மம்தானி குறித்தும் உண்மையை தெரிவிக்கப்போவதாகவும் கூறியிருந்தார். மேலும் "மிஸ்டர் மம்தானி, உங்களுக்கு துளியாவது வெட்கம் இருக்க வேண்டும். எங்கள் மக்களை கொடூரமாக கொன்ற ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பதற்காக வெட்கப்பட வேண்டும். நியூயார்க் யூதர்களுக்கு எதிராக கலவரங்களை தூண்டியதற்காகவும் வெட்கப்பட வேண்டும்" என்று நெதன்யாகு தெரிவித்தார்.
பிடிவாரண்ட்
நெதன்யாகுவின் வீடியோ குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது மம்தானி, "அந்த வீடியோவில் பிரதமர் கூறியிருப்பது உண்மையல்ல என்பது நம் அனைவருக்கும் தெரியும்" என்று பதிலளித்தார். மேலும், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதக்குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றமே நெதன்யாகுவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
2024 நவம்பரில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நெதன்யாகுவுக்கு எதிராக கைது உத்தரவை பிறப்பித்தது. போர்க்குற்றங்கள் மற்றும் மனிதக்குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் அடிப்படையில் இந்த பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இஸ்ரேல் அரசும் நெதன்யாகுவும் இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்து, நீதிமன்றத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
