நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எங்கள் கண்ணையே நம்ப முடியவில்லை.. மீண்டும் மின்னிய திருவாதிரை நட்சத்திரம்.. நாசா சொன்ன குட்நியூஸ்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: திருவாதிரை நட்சத்திரம் வெடித்து சிதற போவதாக செய்திகள் வெளியான நிலையில், அந்த நட்சத்திரம் ஏன் ஒளி மங்குகிறது என்பது தொடர்பான விவரங்களை நாசா கண்டுபிடித்துள்ளது.

பொதுவாக ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் வாழ்நாள் காலம் என்ற ஒன்று இருக்கும். குறிப்பிட்ட காலத்திற்கு பின் ஒவ்வொரு நட்சத்திரமும் ஒளி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, மங்கி, அப்படியே செயல் இழந்துவிடும் .

சில நட்சத்திரங்கள் மிக அதிக அளவில் ஒளியை உமிழ்ந்து, வெப்பம் அதிகரித்து வெடித்து சிதறும். அதாவது அணைய போகும் விளக்கு பிரகாசமாக எரியும் என்பது போல சில நட்சத்திரங்கள் பிரகாசமாகி பின்பு வெடிக்கும்.

மதுரையை 2-வது தலைநகராக அறிவிக்க வலுக்கும் கோரிக்கை.. அமைச்சர் செல்லூர் ராஜும் ஆதரவுமதுரையை 2-வது தலைநகராக அறிவிக்க வலுக்கும் கோரிக்கை.. அமைச்சர் செல்லூர் ராஜும் ஆதரவு

என்ன சொன்னார்கள்

என்ன சொன்னார்கள்

இந்த நிலையில் ஆங்கிலத்தில், Betelgeuse என்று அழைக்கப்படும், திருவாதிரை நட்சத்திரம் வெடிக்க போகிறது என்று செய்திகள் இந்த வருட தொடக்கத்தில் வெளியானது. ஜோதிடத்தில் முக்கிய பங்கு வகிக்கும் திருவாதிரை வெடிக்க போகிறது. இதன் ஆயுசு முடிய போகிறது. இதனால் பூமிக்கு எதுவும் ஆபத்து இல்லை. ஆனால் இனி திருவாதிரை இருக்காது என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறினார்கள்.

ஷாக்

ஷாக்

விண்வெளியில் Orion, எனப்படும் மிருகசிரிசம் என்ற நட்சத்திர குடும்பத்தில்தான் திருவாதிரை உள்ளது. இது மிகவும் அதிக வெளிச்சம் கொண்ட நட்சத்திரம் ஆகும். ஆனால் திடீர் என்று இதன் ஒளி மங்கியது, வேகமாக இதன் ஒளி குறைந்து இருள் அடைந்தது. இதனால் திருவாதிரை நட்சத்திரம் மொத்தமாக செயல் இழக்க போகிறது. இனி இது செயல்படாது என்று எல்லோரும் கூறினார்கள்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

இதனால் ஜோதிட ரீதியாக நிறைய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இது நல்லதுக்கு இல்லை. திருவாதிரை வெடித்தால் நிறைய ஆபத்துகள் வரலாம். இந்த நட்சத்திரம் மிகவும் முக்கியமானது. இதன் ஒளி மங்குவதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது என்று ஜோதிட வல்லுநர்கள் குறிப்பிட்டு இருந்தனர்.

உண்மை என்ன

உண்மை என்ன

திருவாதிரை நட்சத்திரம் வெடித்து சிதற போவதாக செய்திகள் வெளியான நிலையில், அந்த நட்சத்திரம் ஏன் ஒளி மங்குகிறது என்பது தொடர்பான விவரங்களை நாசா கண்டுபிடித்துள்ளது. அதன்படி இந்த நட்சத்திரம் கடந்த சில நாட்கள் முன் மீண்டும் ஒளிபெற்று உள்ளது. திடீர் என்று மின்சாரம் இல்லாத வீட்டில் ஜெனரேட்டர் பி போட்டது போல மீண்டும் இதில் வெளிச்சம் ஏற்பட்டுள்ளது.

ஆச்சர்யம்

ஆச்சர்யம்

இதில் மீண்டும் வெளிச்சம் வந்ததை பார்த்து, நாசா விஞ்ஞானிகள் ஆச்சர்யம் அடைந்து உள்ளனர். அட எங்கள் கண்ணை எங்களால் நம்ப முடியவில்லை. இந்த நட்சத்திரம் வெடித்து சிதறும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இது வெடிக்கவில்லை. மாறாக மீண்டும் மின்ன தொடங்கி உள்ளது. இது மீண்டும் ஒளிவீச தொடங்கி உள்ளது என்று கூறியுள்ளனர்.

ஏன் இப்படி

ஏன் இப்படி

இந்த திருவாதிரை நட்சத்திரம் வேகமாக நகர கூடியது. இது எப்போதும் சூடான சுற்று பகுதியில் இருக்கும். இந்த நிலையில் கடந்த வருடம் மிகவும் குளிரான சுற்று பகுதியில் இந்த திருவாதிரை நட்சத்திரம் சென்றுள்ளது. இதனால் இதன் மேல் பகுதி மொத்தமாக குளிர்ந்து உள்ளது. இதன் காரணமாக கருப்பு நிற புகையை இது வெளியிட்டுள்ளது. திடீர் குளிர்ச்சி காரணமாக புகை வந்துள்ளது.

மறைத்தது

மறைத்தது

இந்த கருப்பு புகை மொத்தமாக நட்சத்திரத்தையே மறைத்து இருக்கிறது. இதனால் திருவாதிரை நட்சத்திரத்தின் ஒளி மங்கியது போல தெரிந்துள்ளது. ஆனால் உண்மையில் அந்த நட்சத்திரம் ஒளி மங்கவில்லை. அதை சுற்றி உருவான கருப்பு புகை தற்போது அகல தொடங்கி உள்ளது. இதனால் மீண்டும் அந்த நட்சத்திரம் எப்போதும் போல பட்டொளி வீசி வருகிறது, திருவாதிரைக்கு எதுவும் ஆகவில்லை, என்று நாசா கூறியுள்ளது.

English summary
No, the Betelgeuse is not dimming, Here is the reason for the less brightness says NASA.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X