Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அணு ஆயுதத்தை பயன்படுத்தாதீங்க.. புடினிடன் சொன்ன மோடி! அடிபணிந்த ரஷ்யா.. இந்தியாவால் தப்பித்த உக்ரைன்

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: ரஷ்யா-உக்ரைன் போரில் இந்தியா தலையிட்டதற்காக அந்நாட்டிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று போலந்து அரசு தெரிவித்து உள்ளது. போலந்தின் துணை வெளியுறவு அமைச்சரும், வெளியுறவு அமைச்சருமான Władysław Teofil Bartoszewski பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தலையீட்டால் இந்த போர் முடியும் தருவாயில் உள்ளது. இந்தியாவின் தலையீடு காரணமாகவே நிலைமை மோசமாகாமல் தடுக்கப்பட்டது. ரஷ்யா-உக்ரைன் போரில் இந்தியா தலையிட்டதற்காக அந்நாட்டிற்கு நன்றி. மோடி புடினிடம் அணு ஆயுதத்தை பயன்படுத்த வேண்டாம் என்று கூறினார். அவர் கூறியதால்தான் இந்த விவகாரத்தில் அணு ஆயுதம் பயன்படுத்தாமல்... நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது.

உக்ரைன் ரஷ்யா போர்

உக்ரைனும், ரஷ்யாவும் வரலாறுபடி பங்காளிகள். எல்லோரும் சோவியத் யூனியனுக்கு கீழ் ஒன்றாக இருந்தனர். அதன்பின் 1991 டிசம்பரில் சோவியத் யூனியன் உடைந்த போது உக்ரைன் தனியாக பிரிந்தது. ஆனால் அப்போதில் இருந்து உக்ரனை எப்படியாவது தனது கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று ரஷ்யா முயன்று வருகிறது.

PM Modi instructed Russia and Putin not to use Nuclear power against Ukraine Zelensky

முதலில் உக்ரைன் பிரதமர்களை கட்டுப்படுத்தி ரஷ்யா நிழல் ராஜ்ஜியம் நடத்தியது. ஆனால் அதன்பின் ரஷ்யாவிற்கு ஆதரவாக இருக்கும் அரசியல் தலைவர்களை உக்ரைன் மக்கள் தூக்கி வீசினார்கள். இதனால் உக்ரைன் மீது ஆயுத போர் நடத்தி அந்த நாட்டை கைப்பற்ற ரஷ்யா முயன்று வருகிறது. ஏற்கனவே 2014ல் உக்ரைனின் கிரிமியாவை கைப்பற்றிய ரஷ்யா அதை தனது நாட்டின் ஒரு பகுதியாக அறிவித்தது. கொஞ்சம் கொஞ்சமாக கிரிமியா போலவே உக்ரைனின் மற்ற பகுதிகளையும் ரஷ்யா கைப்பற்ற முயன்று வருகிறது.

கைப்பற்ற முயன்ற ரஷ்யா

சரி நல்லா இருக்கும் உக்ரைனை ஏன் ரஷ்யா கைப்பற்ற முயல்கிறது என்று நீங்கள் கேட்கலாம். இங்கே அமெரிக்கா மட்டும் சும்மா இல்லை. சோவியத் யூனியனில் இருந்த பல நாடுகளை அமெரிக்கா தனது நேட்டோ படையில் இணைத்து வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பா சேர்ந்து இப்படி நேட்டோ படைகளில் முன்னாள் சோவியத் நாடுகளை இணைத்து நேட்டோவை விரிவாக்கி உள்ளது. லத்திவியா. லித்துவானியா, ஈஸ்டானியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, ஜார்ஜியா உள்ளிட்ட ரஷ்யாவிற்கு அருகே இருக்கும் எல்லைப்புற நாடுகள் எல்லாம் இப்போது நேட்டோ வசம்.

இரண்டாம் உலகப்போர் முடிந்து பல வருடம் ஆகிவிட்டது.. அமெரிக்கா - ரஷ்யா இடையிலான பனிப்போர் 1989லேயே முடிந்துவிட்டது. ஆனாலும் அமெரிக்கா ஐரோப்பா இந்த நேட்டோ படையை கலைக்காமல் அதை விரிவாக்கி வருகிறது. அதோடு நேட்டோ படைகளை விரிவாக்கி அதை ரஷ்ய எல்லை வரை அமெரிக்கா கொண்டு சென்றுள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் உக்ரைனையும் அமெரிக்கா நேட்டோவில் சேர்க்க திட்டமிட்டு வந்தது. அப்படி நடந்தால் அவ்வளவுதான் ரஷ்யாவை பூகோள ரீதியாக அமெரிக்காவின் நேட்டோ.

என்ன நடந்தது இடையில்?

இது ரஷ்யாவை நிர்மூலமாக்கும். இதை ரஷ்யா பொறுக்க முடியாமல்தான் தொடக்கத்தில் வார்னிங் கொடுத்தது. ஆனால் அமெரிக்கா நேட்டோ விரிவாக்கத்தை நிறுத்தவில்லை. விளைவு தற்போது ரஷ்யா உக்ரைன் உள்ளே புகுந்துள்ளது... ஆனால் இது உக்ரைனோடு முடியாது. நேட்டோவில் இருக்கும் மற்ற சோவியத் நாடுகள், மற்ற ரஷ்யாவின் அண்டை நாடுகளை இதே போரின் மூலம் ரஷ்யா கைப்பற்றும் அபாயம் உள்ளது. அதாவது இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் நாடுகளை கைப்பற்ற துடித்தது போல இது மூன்றாம் உலகப்போரை ஏற்படுத்தும் அபாயம் உண்டாகி உள்ளது. இதையடுத்தே ரஷ்யா உடன் அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு இறங்கியது.

உக்ரைன் உடைந்து போனது

இந்த போரில் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளில் உக்ரைனில் 10 சதவிகிதம் பகுதிகளை ரஷ்யா கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. இந்த போரின் ஒரு கட்டமாக அணு சக்தி இல்லாத நாடுகளுக்கு எதிராகவும் அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்ய அதிபர் புடின் ஒப்புதல் அளித்துள்ளார்.

மோடி தலையீடு

இப்படிப்பட்ட நிலையில் அணு ஆயுத போர் ஏற்படும் ஆபத்திற்கு இடையே.. இந்தியாவின் தலையீட்டால் இந்த போர் முடியும் தருவாயில் உள்ளது. இந்தியாவின் தலையீடு காரணமாகவே நிலைமை மோசமாகாமல் தடுக்கப்பட்டது. ரஷ்யா-உக்ரைன் போரில் இந்தியா தலையிட்டதற்காக அந்நாட்டிற்கு நன்றி. மோடி புடினிடம் அணு ஆயுதத்தை பயன்படுத்த வேண்டாம் என்று கூறினார். அவர் கூறியதால்தான் இந்த விவகாரத்தில் அணு ஆயுதம் பயன்படுத்தாமல்... நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+