நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோவிட் தடுப்பூசி போடாதவர்களுக்கே அனுமதி.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமெரிக்கஉணவகம்

கோவிட் தடுப்பூசி போடாதவர்களுக்கே அனுமதி.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமெரிக்கஉணவகம்

Google Oneindia Tamil News

நியூயார்க்: கலிபோர்னியாவில் உள்ள உணவகம் ஒன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை மட்டுமே அனுமதித்து வருகிறது.

Recommended Video

    Covid Vaccine போட்டவங்களுக்கும் ஏன் பாதிப்பு ஏற்படுகிறது? இதான் காரணம்

    கடந்த ஆண்டு சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இன்னனும் உலகை உலுக்கி வருகிறது. கொத்து கொத்தாக மனிதர்கள் இறப்பதை கண்டு மனித இனமே அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளது.

    எங்ககிட்ட 4 எம்எல்ஏ இருக்காங்க.. மாஸ்க் அணியாட்டி என் வண்டியை நிறுத்துவீங்களா.. விசிக வழக்கறிஞர் எங்ககிட்ட 4 எம்எல்ஏ இருக்காங்க.. மாஸ்க் அணியாட்டி என் வண்டியை நிறுத்துவீங்களா.. விசிக வழக்கறிஞர்

    தடுப்பூசிகள் வந்த பிறகே மக்கள் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சுவிட ஆரம்பித்திருக்கிறார்கள். கொரோனாவை எதிர்கொள்ள தங்களுக்கு கிடைத்திருக்கும் பேராயுதமாக தடுப்பூசிகளை தான் மக்கள் நம்புகின்றனர்.

    தடுப்பூசி விழிப்புணர்வு

    தடுப்பூசி விழிப்புணர்வு

    எனவே கொரோனாவிற்கு எதிரான போரில் தடுப்பூசியின் அவசியம் குறித்து பல நாடுகளிலும் அரசாங்கம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை செலுத்தியவர்களை மட்டுமே பல்வேறு நாடுகளும் அனுமதிக்கின்றன. மேலும் மக்கள் மத்தியில் கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பல நிறுவனங்கள் சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகின்றன.

    நம்பிக்கையின்மை

    நம்பிக்கையின்மை

    இது ஒருபுறம் இருக்க, கொரோனா தடுப்பூசியை எதிர்ப்பவர்களும் இங்கு இருக்கத்தான் செய்கிறார்கள். கொரோனா தடுப்பூசிகளின் மீதான நம்பகத்தன்மையில் உள்ள சந்தேகங்களின் காரணமாக அதனை செலுத்திக்கொள்ள பயந்து பதுங்குபவர்களும் இருக்கிறார்கள். பயம் ஒருபுறம், நம்பிக்கையின்மை மறுபுறம் என தடுப்பூசியை எதிர்ப்பவர்கள் உள்ளனர்.

    உணவகம் அறிவிப்பு

    உணவகம் அறிவிப்பு

    இப்படிப்பட்ட சூழலில் அமெரிக்காவின் கலிபோர்னியாவின் ஹன்டிங்டன் கடற்கரை பகுதியில் உள்ள ஒரு இத்தாலிய உணவகம் ஒன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு மட்டுமே உணவு வழங்கி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த உணவகத்தின் நுழைவு வாயிலில், "உள்ளே வருபவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்பதற்கான ஆவணங்கள் தேவை. தேசதுரோகம், அமெரிக்கர்களுக்கு எதிரான மனநிலையை நாங்கள் பொறுக்கொள்ள முடியாது", என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

    கண்டனம்

    கண்டனம்

    இந்த இத்தாலிய உணவகத்தின் அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நெட்டிசன்கள் பலரும் இந்த உணவகத்திற்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். உலகமே கொரோனாவில் இருந்து மீண்டு வெளிவர முடியாமல் தவித்து கொண்டிருக்கும் சூழலில் சம்பந்தப்பட்ட உணவகத்தின் அறிவிப்பு மிகவும் தவறானது என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    முதன்முறையல்ல...

    முதன்முறையல்ல...

    இந்த உணவகம் இப்படி சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே கடந்த ஆண்டு முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி என அறிவித்து சர்ச்சையில் சிக்கியது. தற்போது தடுப்பூசி இல்லாதவர்களுக்கு மட்டும் அனுமதி என மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The Basilico’s Pasta E Vino restaurant in Huntington Beach, California is serving only those who are showing proof of being unvaccinated. The Italian restaurant, which previously made headlines for its anti-mask policy, declared the new rule on a sign on its window. It has now gone viral and prompted strong negative reactions from netizens.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X