ஸ்கூபி டூ தொடரில் வரும் 'வெல்மா' கேரக்டர் லெஸ்பியன்? - வெளிப்படுத்திய கடைசி படம்.. கொண்டாடிய கூகுள்!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: உலகின் மிகவும் பிரசித்தி பெற்ற குழந்தைகள் கார்ட்டூன் தொடரான 'ஸ்கூபி-டூ' தனது ரகசியம் ஒன்றை தற்போது வெளிப்படையாக பகிரங்கப்படுத்தியுள்ளது.

கடந்த 1969ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட இந்த தொடர் தற்போது வரை குழந்தைகள் மட்டுமல்லாது இளைஞர்கள், பெரியவர்களையும் பெரிய அளவில் கவர்ந்துள்ளது.

பலர் இந்த தொடரின் தீவிர ரசிகர்களாக மாறியுள்ளனர். இவ்வாறு இருக்கையில் இந்த தொடரில் வரும் 'வெல்மா' கதாபாத்திரம் 'லெஸ்பியன்' என தெரியவந்துள்ளது.

 ஸ்கூபி-டூ

ஸ்கூபி-டூ

70's கிட்ஸ் தொடங்கி 80's, 90's மற்றும் 2K கிட்ஸ் வரை மிகவும் பிரபலமான தொடர்கள் எது என கேட்டால் பெரும்பாலானோரின் பட்டியலில் 'ஸ்கூபி-டூ' முக்கியமாக இடம்பெறும். அப்படி பெரும் புகழை பெற்ற இந்த தொடரில் பல ரகசியங்கள் உள்ளன. இந்த தொடரில் வரும் நாய், ஆணா, பெண்ணா என்பது தொடக்கத்தில் யாருக்கும் பிடிபடவில்லை. பின்னர் இது ஆண் என கண்டறியப்பட்டது. இந்த நாயின் குடும்பம் குறித்தும் பலர் பல யூகங்களை முன்வைத்த நிலையில், அடுத்தடுத்த தொடர்களில் அதற்கான முடிச்சும் அவிழ்க்கப்பட்டது.

 கூட்டணி

கூட்டணி

ஆனால் தற்போது வரை ஸ்கூபியின் தந்தை குறித்து யாருக்கும் தெரியாது. இந்த ரகசியங்கள் வரிசையில் 'வெல்மாவின்' ஆண் நண்பர் சம்பந்தமான கேள்விகளும் அடிக்கடி மேலெழுந்தன. மொத்தம் ஐந்து பேர் இந்த தொடரில் வருவார்கள். தொடரின் கதாநாயகனாக பிரெட் ஜோன்ஸ் காட்டப்பட்டிருந்தாலும் முழுக் கதையும் ஸ்கூபி எனும் நாய் மற்றும் அதன் நண்பர் ஷாகியை வைத்துதான் நகரும். இதில் ஜோன்ஸ்க்கு துணையாக டாப்னே பிளேக் எனும் இளம் பெண் கதாபாத்திரம் காட்டப்பட்டிருக்கும்.

 கடைசி திரைப்படம்

கடைசி திரைப்படம்

'வெல்மா' எனும் கதாப்பாத்திரம் மட்டும் எப்போதும் தனியாகவே காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். எல்லாத் தொடர்களிலும் வெல்மா யாருடனும் கூட்டு வைக்காமல் தனியாக இயங்குவார். இவர்கள் அனைவரும் சேர்ந்து துப்பறியும் பணிகளை செய்வார்கள். இவ்வாறு இருக்கையில் வெல்மா எனும் கதாபாத்திரம் 'தன்பாலின ஈர்ப்பாளர்' என தற்போது அடையாளம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்கூபி-டூ வரிசையில் கடைசியாக வெளியாகியுள்ள படத்தில் இது தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

 லெஸ்பியன்

லெஸ்பியன்


அதாவது, கடைசி திரைப்படம் சமீபத்தில் டிஜிட்டல் தளத்தில் வெளியிடப்பட்டது. இதில் கோகோ டையப்லோ எனும் பெண் கதாபாத்திரம் வருகிறது. இந்த கதாபாத்திரத்தின் மீது வெல்மா ஈர்ப்பு கொள்கிறார். வெல்மாவின் கன்னங்கள் சிவக்கின்றன. கோகோ டையப்லோவை பார்த்த மாத்திரத்தில் வெல்மா வாயடைத்து போய் நிற்கிறாள். இந்த காட்சிகள் வெல்மாவை 'லெஸ்பியன்' என உறுதி செய்துள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

 முயற்சி

முயற்சி

எப்படியோ ஒருவழியாக தாங்கள் கணித்தது நிஜம்தான் என நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர். உலகம் முழுவதும் மாற்று பாலினத்தவர்கள் குறித்து எதிர்மறையான கருத்துக்கள் நிலவி வரும் நிலையில் தற்போது ஒரு முன்னணி கார்ட்டூன் தொடர் 'லெஸ்பியன்' கதாபாத்திரத்தை வடிவமைத்து அதை மக்களிடையே கொண்டு சேர்த்துள்ளதன் மூலம் பழைய கற்பிதங்களை உடைக்கும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறது என சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து வெல்மா குறித்து கூகுளில் நாம் என்ன தேடினாலும், LGBTQI+ சமூகத்தினரை பெருமைப்படுத்தும் வகையில் வண்ண காகிதங்களை தூவும் வகையில் கூகுள் சில மாற்றங்களை செய்துள்ளது. இதனை அனைவரும் வரவேற்றுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+