10 பெண்களுடன் டும்.. டும்.. டும்! 28 வயது இளைஞர் செய்த சம்பவத்தை பார்த்தீங்களா? காரணம் இதுதானாம்
நியூயார்க்: அமெரிக்க இளைஞர் ஒரே நேரத்தில் 10 பெண்களை திருமணம் செய்துள்ள சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. தற்போது இது தொடர்பான வீடியோ ஒன்று சோஷியல் மீடியாக்களில் டிரெண்டாகி வருகிறது.
திருமணத்தை ஆயிரம் கால பயிர் என்று சொல்வார்கள். அதேபோல ஒரு திருமணத்தை நடத்தி முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடும். பெண் பார்ப்பதில் தொடங்கி பெண் வீட்டை பார்ப்பது வரை அனைத்தையும் பார்த்து பார்த்து கல்யாணத்தை செய்து முடிப்பதற்குள் ஏற்படுகிற டென்ஷன் கொஞ்சம் நஞ்சமல்ல. ஒரு திருமணத்திற்கே இப்படி எனில், 10 திருமணம் எனில்? அட ஆமாங்க அமெரிக்காவில் 28 வயது இளைஞரான லஸ்டின் இமானுவேல் ஒரே நேரத்தில் 10 பெண்களை திருமணம் செய்துக்கொண்டிருக்கிறார்.

மசாஜ் சென்டரை நடத்தி வரும் இவர் தற்போது 10 பெண்களை திருமணம் செய்திருக்கிறார். இது தொடர்பான வீடியோவில், "இந்த திருமணம் பல மொழிகள், பல ஆளுமைகள் கொண்ட பல அழகான பெண்களை உள்ளடக்கியது. இவ்வளவு வித்தியாசம் இருந்தாலும் நாங்கள் பகிர்ந்துக்கொள்ள வேண்டியது அன்பும், நேர்மறை எண்ணங்களையும்தான்" என்று கூறியுள்ளாலி. தற்போது இந்த வீடியோ சோஷியல் டிரெண்டாகி வருகிறது.
இவர் மணந்துள்ள 10 பெண்களும் வெவ்வேறு வித்தியாசமான சமூகத்தை சேர்ந்தவர்களாவார்கள். ஒருவர் கருப்பின சமூகம், மற்றொருவர் அமெரிக்காவை பூர்வீகமாக கொள்ளாதவர் இப்படி 10 பேரும் வெவ்வேறு சூழல்களில் லஸ்டின் இமானுவேலை சந்தித்திருக்கிறார்கள். அமெரிக்காவில் ஒருவருக்கு ஒரு மனைவிதான் என்கிற சட்டம் இருக்கிறது. இப்படி இருக்கையில் இதுபோல 10 பெண்களையெல்லாம் ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொள்ள முடியாது. எனவே திருமணம் நடந்த இடம் வேறு ஏதாவது நாடாக இருக்க வாய்ப்பிருக்கிறது.
எப்படியாயினும் திருமணம் நடந்த இடத்தை இமானுவேல் குறிப்பிடவில்லை. இவரது திருமணம் சோஷியல் மீடியாக்களில் வெவ்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வெவ்வேறு நாட்டை பூர்வீகமாக கொண்ட பெண்களுடன் வாழும்போது வெவ்வேறு வித்தியாசமான அனுபவங்களை அவர் பெறுவார். மொழியில் தொடங்கி உணவு வரை எல்லாமே வித்தியாசமாக இருக்கும் என்று நெட்டிசன்கள் கூறியுள்ளனர். அதேபோல மற்றொரு சாரார் இந்த திருமணத்தை விமர்சித்துள்ளனர்.
அதாவது, 10 பேருடன் திருமணம் செய்து கொண்டால் இவர்களுடன் உறவில் ஈடுபட்டால் அது பாலியல் நோய்கள் உருவாவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். எனவே இதுபோன்ற திருமணங்களை ஊக்குவிக்கக்கூடாது. மட்டுமல்லாது பெண்கள் வெறும் ஒரு பொருளாகவே பார்க்கப்படுகிறார்கள் இதனால்தான் இப்படியான வித்தியாசமான திருமணங்கள் நடைபெறுகிறது" என்றும் விமர்சித்துள்ளனர். எப்படி இருந்தாலும் இந்த திருமணம் இமானுவேலுக்கு சோஷியல் மீடியாவில் அதிக அளவு ஃபாலோவர்களை உருவாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications