மீண்டும் மீண்டுமா? கழிவறைக்கு போனவருக்கு காத்திருந்த அதிர்ச்சி... அப்படியே யு டர்ன் போட்டு.. ஓட்டம்!
நியூயார்க்: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கழிவறைக்கு சென்ற ஒருவர் போன வேகத்திலேயே திரும்பி வந்துள்ளார். இனிமேல் கழிவறை பயன்படுத்தவே நான் யோசிப்பேன் என்று அந்த நபர் திகிலுடன் தெரிவித்துள்ளார்.. அப்படி என்ன நடந்தது?
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஹாலிவுட் பகுதியை சேர்ந்தவர் புரூஸ் பிளேயர், இவர் அவசர அவசரமாக விலங்குகளை பிடிக்கும் மையத்திற்கு போன் செய்துள்ளார். பதறியடித்துக்கொண்டு வந்த அவர்கள் புரூஸின் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர்.

என்ன நடந்தது?
அப்போதுதான் விஷயம் விளங்கியுள்ளது. புரூஸ் அன்று இரவு இயற்கை உபாதைகளை கழிக்க டாய்லெட்டுக்கு சென்றுள்ளார். போன வேகத்தில் அப்படியே உட்காராமல் closet-ஐ பரிசோதித்துள்ளார். அப்போது அவரை வரவேற்க அங்கு ஒரு குட்டி உடும்பு இருந்துள்ளது. இதுக்காகத்தான் புரூஸ் அவசரமாக விலங்கு பிடிக்கும் மையத்திற்கு போன் செய்துள்ளார். ஆமாங்க இந்த ஊருல இதெல்லாம் ரொம்ப சகஜம். ஏன்னா சில ஆண்டுகளுக்கு முன்னாடி இம்மக்கள் உடும்புகளை செல்ல பிராணிகளாக வளர்க்கத் தொடங்கியுள்ளனர்.

உடும்பு
நம் ஊரில் நாய், பூனை வளர்ப்பதை போல அங்க உடும்பு வளர்ப்பது சாதாரணம். ஆனால் நினைவில் காடுள்ள உயிரினங்களை அவ்வளவு எளிதாக பழக்கிவிடமுடியாது என ஒரு பழமொழி உள்ளதை இவர்கள் மறந்து விட்டிருக்கிறார்கள். அதனால அந்த உடும்புகளெல்லாம் ஹாயா தப்பி காட்டுக்குள்ள ஓடிடுச்சி. அப்படி தப்பிப்போன உயிரினங்கள் திருப்பி பழிவாங்க அடிக்கடி ஊருக்குள்ள வந்துடுதுன்னு உள்ளூர் மக்கள் சொல்றாங்க. வர்ற உடும்பு என்ன காலிங் பெல் அடிச்சு கதவ தட்டிட்டா வரும்? எங்கெல்லாம் கேப்பு கிடைக்குதோ அந்த வழியை பயன்படுத்தி உள்ளே வந்துடும்.

அதிர்ச்சி
அப்படி வந்த ஒரு உடும்பைத்தான் புரூஸ் பிளேயர் டாய்லெட்ல பாத்து இருக்காரு. அப்புறம் என்ன அலறி அடிச்சு விலங்கு ஆர்வலர்களுக்கு போன் பண்ணி தகவல் சொல்லி இருக்காரு. அவங்க வந்து புடிச்சுட்டு போயிருக்காங்க. அப்படி போகுறதுக்கு முன்னாடி, இதுக்கு ஒரு முடிவு கட்டிட்டு போங்கன்னு புரூஸ் பிளேயர் கேட்க, உடும்பை புடிக்க வந்தவரு வீட்டை சுத்தி ஒரு நோட்டம் விட்டிருக்காரு. ஏன்னா இது மூணாவது உடும்பு இல்லையா? ஆனா வீட்டுக்கு போற எந்த பைப்லயும் ஓட்டையோ, அல்லது மூடாமல் இருப்பதையோ கண்டுபிடிக்க முடியவில்லை.

மீண்டும் மீண்டுமா?'
அவரே குழம்பி போய் சரிங்க பிரச்னை ஏதும் இல்லை. பாத்துக்கோங்க இனி உடும்பு வராதுனு சொல்லிட்டாரு. ஆனா இதுக்கு முன்னாடியும் இதையேதான நீங்க சொல்லிட்டு போனீ ங்க ஆனா அவசரத்துக்கு என்னால டாயலெட்-ஐ பயன்படுத்த முடியலனு மறுபடியும் புலம்பி இருக்காரு புரூஸ் பிளேயர். எது எப்படியோ அடுத்த முறை புரூஸ் பிளேயர் காயமடைவதற்கு முன்னர் இதற்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டும் என தாங்கள் நினைப்பதாக உடும்பை பிடித்த வனவிலங்கு கட்டுப்பாட்டு நிபுணரான ஹரோல்ட் ரோண்டன் கூறியுள்ளார். என்ன மக்களே உங்களுக்கும் இதுபோன்ற அனுபவங்கள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா?
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications