நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கண் முன்னே எங்கள் நாட்டை அழித்துவிட்டனர்.. 10 டிரில்லியன் டாலர் தாங்க.. சீனா மீது பாயும் டிரம்ப்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: உலக நாடுகளுக்கு கொரோனாவை பரப்பியதற்காக சீனா 10 டிரில்லியன் டாலர் பணத்தை மற்ற நாடுகளுக்கு கொடுக்க வேண்டும், சீனாவிடம் கடன் வாங்கி இருக்கும் நாடுகள் அதை திருப்பி கொடுக்க கூடாது என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த பின் டிரம்ப் பெரிதாக பொது இடங்களில் தலை காட்டாமல் இருந்தார். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தவர் தற்போது மீண்டும் வெளியே தலைகாட்ட தொடங்கி உள்ளார்.

பணி நீக்கப்பட்ட 7 மாற்றுத் திறனாளி கணினி ஆசிரியர்கள்.. பணி வழங்க முதல்வரிடம் உருக்கமான கோரிக்கைபணி நீக்கப்பட்ட 7 மாற்றுத் திறனாளி கணினி ஆசிரியர்கள்.. பணி வழங்க முதல்வரிடம் உருக்கமான கோரிக்கை

இந்த நிலையில் தற்போது கொரோனாவின் தோற்றம் குறித்த சந்தேகம் மீண்டும் எழுந்துள்ள நிலையில் டிரம்ப், மீண்டும் தனது குற்றச்சாட்டுகளை சீனா மீது அடுக்க தொடங்கி உள்ளார். நார்த் கரோலினாவில் நடந்த குடியரசு கட்சி பொதுக்கூட்டத்தில் டிரம்ப் சீனா மீது சரமாரி குற்றச்சாட்டுகளை வைத்தார்.

டிரம்ப்

டிரம்ப்

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் இதுகுறித்து பேசுகையில், நான் வைத்த குற்றச்சாட்டுகள் உண்மையாகிவிட்டது. சீனாதான் கொரோனாவை உருவாக்கியதாக இப்போது பலரும் சந்தேகம் அடைந்துள்ளனர். உலக நாடுகளுக்கு கொரோனாவை பரப்பியதற்காக சீனா 10 டிரில்லியன் டாலர் பணத்தை மற்ற நாடுகளுக்கு கொடுக்க வேண்டும்.

மன்னிப்பு

மன்னிப்பு

இந்த பேரிடரை உருவாக்கியதற்காக உலக நாடுகளிடம் சீனா மன்னிப்பு கேட்க வேண்டும். உலக நாடுகளுக்கு உரிய இழப்பீட்டை சீனா கொடுக்க வேண்டும். சீனாவிடம் கடன் வாங்கி இருக்கும் நாடுகள் அதை திருப்பி கொடுக்க கூடாது. சீனாவிடம் எந்த நாடு எவ்வளவு கடன் வாங்கி இருந்தாலும் அதை திருப்பி கொடுக்க கூடாது.

பாதிப்பு மிக அதிகம்

பாதிப்பு மிக அதிகம்

சீனாவில் உலகிற்கு ஏற்பட்ட பாதிப்பு மிக மிக அதிகம் இதை இழப்பீடுகள் மூலம் சரி செய்ய முடியாது. உலக நாடுகளுக்கு எல்லாம் சீனா கடன் பட்டு இருக்கிறது. பல உலகை சீனா அழித்துவிட்டது. நமக்கு எதிராக அமெரிக்க அதிபரின் சுகாதார ஆலோசகர் ஆண்டனி பவுச்சி செயல்பட்டார். அவர் வலதுசாரிகளின் எதிரி. நான் சொன்னது சரி. கொரோனாவின் தொடக்கம் முதலே அதை பற்றி நான் சரியாக கணித்து இருந்தேன்.

கண் முன்னே அழித்துவிட்டனர்

கண் முன்னே அழித்துவிட்டனர்

நமது நாட்டை நம் கண் முன்னே அழித்துவிட்டனர். சீனாவிற்கு அடிபணியும் அரசாக பிடன் அரசு உள்ளது. உலக நாடுகளுக்கு முன் நாம் அவமானப்பட்டு நிற்கிறோம். மீண்டும் குடியரசு கட்சியினரை எல்லா தளங்களிலும் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறது. 2022ல் நடக்க உள்ள மிட் டேர்ம் தேர்தல் தொடங்கி அனைத்திலும் நாம் வெல்ல வேண்டும்.

விலைவாசி

விலைவாசி

நமது எல்லைகள் பாதுகாப்பாக இல்லை. பல வெளிநாட்டு மக்கள் முறைகேடாக அமெரிக்காவிற்கும் குடியிருக்கிறார்கள். விலைவாசி உயர்கிறது. சைபர் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. ஆனால் பிடன் இதை எல்லாம் கண்டுகொள்ளவில்லை, சொந்த நாட்டு மக்களை அதிரிப்பதை விட்டுவிட்டு அந்நிய நாட்டு குழந்தைகளை அவர் ஆதரிக்கிறார், என்று டிரம்ப் கூறியுள்ளார்.

English summary
The USA former President Trump accuses China and asks 10 trillion dollars for spreading the Coronavirus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X